வியாழன், ஆகஸ்ட் 24, 2006

Corporate Anbumani

CORPORATE:
அரிஸ்டாடில் அன்று சொன்னது: 'வியாபாரத்தில் வெற்றி பெற, எவருக்கும் தெரியாத ஏதோ ஒன்றை, நீ அறிந்து வைத்திருக்க வேண்டும்.'

தற்காலத்திற்கு பொருத்தமாக சொன்னால்: 'வியாபாரத்தில் வெற்றி பெற, அடுத்தவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து, அதற்கு மேல் கொஞ்சம் சொந்தமாய் தூவுவது!'

'கார்பரேட்' படம் பார்க்க கிடைத்தது. நான் பேச நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும் என்பதாக ஆசாத் (படிக்க: எண்ணம்: கார்ப்பரேட் - திரைப்படம் எனது பார்வையில்) ஏற்கனவே, திரைக்கதை சுருக்கம், ரசித்த பகுதிகளை விலாவாரியாக பதிந்திருக்கிறார்.


சில நாள்களுக்கு முன் கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா அல்லது மிகை நாடும் கலையா போன்ற உபரிக் கேள்விகளுடன் (கேட்க: கில்லி - Gilli :: Life Imitates Art - Vasanthi Podcast : Kamla Bhatt) கூடிய வாசந்தியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

படத்தில் பூச்சிக்கொல்லி கலந்த நீரை மென்பான நிறுவனம் பயன்படுத்துகிறது. போட்டியாளருக்கு விஷயம் தெரியவர, அதை ஆட்சியில் இருப்பவரிடம் சொல்லிவிடுகிறார். கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

சண்டை சச்சரவுக்குப் பிறகு, இரு முதலைகளும் (பொருள் விளக்கம்: duopoly: Answers.com) சமாதானம் ஆகிறார்கள். நடுவண் அரசில் மாற்றுக் கட்சி கோலோச்சினாலும், மாநிலத்தில் எதிர்க்கட்சி பதவி வகித்திருந்தாலும், கட்சி பேதம் பாராமல் அரசியல்வாதிகள் கைகோர்க்கிறார்கள். கவனிக்க வேண்டியதை கொடுத்ததுடன், மசாலாப் படம் போல் தவறே செய்யாத அப்பாவியை குற்றவாளி ஆக்காமல் கூட்டுக் களவாணி மட்டும் தனியாக சிக்குகிறார்.

நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி என்றால் இந்திய அளவில் உடனடியாக நினைவுக்கு வருவது ஹிந்துஸ்தான் லீவர் (HLL) & ப்ராக்டர் & காம்பிள் (P&G). பல்லாண்டுகளாகத் தொடரும் அவர்களின் குழிபறித்தல் கதைகளை 'கதையல்ல நிஜம்' என்று நண்பர்கள் விவரிக்க வாய்பிளந்து வலைப்பதிவுலகை மிஞ்சும் அலுவலக அரசியல் மர்மங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அந்த சம்பவங்களையும், மூன்றாண்டுக்கு முன் மீண்டும் முதன்முறையாக வெடித்த கோக்-பெப்ஸி நச்சுத்தன்மை விவகாரத்தையும் தன்னுடைய பாணியில் அமர்க்களமாக நம்பகத்தன்மையுடன் கொடுத்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் சேர்ப்பது போல் அமைச்சர் அன்புமணியும் சான்றிதழ் (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: "No pesticides in Coke & Pepsi" - Anbumani) வழங்கி, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 180 டிகிரி வளைந்து (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: Anbumani does a Volte-face on Coke Pesticide Issue) மறுப்பறிக்கை விட்டு, இன்றைய செய்திகளில் என்ன சொல்லி தலைப்புப் பக்கங்களில் இடம்பிடிக்க போகிறார் என்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்.

மிகை நாடும் கலை என்பதற்கேற்ப மடிக்கணினியில் இருந்து தொழில் ரகசியங்களைத் திருடுவது அதீத புனைவாக இருப்பதாக பல விமர்சனங்கள் வசை பாடுகிறது. இது காற்றில் காரியங்களைக் கறக்கும் காலம் (படிக்க: While you surf the Web, who's surfing you? - Technology - International Herald Tribune). பழங்கால உத்தியை பயன்படுத்தி, சூட்சுமத்தைத் தெரிந்து கொள்வதற்கு பதிலாக, கொந்தர்களின் உதவியோடு நவீன நுட்பத்தைக் கொண்டு சந்தைப்படுத்தல் விஷயங்களை அறிவதாக காட்டியிருந்தால் சமூகப் படம் என்பதில் இருந்து விலகி அறிபுனைவாக இருக்கும் அபாயத்தை தவிர்த்திருக்கிறார்.

படத்தில் அவ்வப்போது பெரிய விஷயங்களை பேசிக்கொள்ளும் கடை நிலை ஊழியர்கள்:
'நமக்கும் கோட் சூட்டு போட்டு இருக்கிறவங்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாம நாலு மணி வரைக்கும் நாயா, பேயா உழைச்சுத் தள்ளுவோம். நம்ம பாஸுங்க நாலு மணிக்கு அப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பாங்க!'

நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.

BBC - Movies - review - Corporate




| |

12 கருத்துகள்:

இப்படி ஒரு படமா?
அதுவும் ஹிந்தியில்.

பிப்ஸ் கூட ட்ரெய்னியா இருந்த மினிஷா லிம்பாவைப் பத்தி ஒரு வரி எழுதினா என்னவாம்???

ஓ சிக்கந்தர்..ஓ சிக்கந்தர்..பாயலையும் இந்த லிஸ்டில சேர்த்துக்கலாம்

நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.

- True.

I have added this movie in "To Watch" list. Looks like this resembles alot with the movie "Wall Street".

கேட்டதும் கொடுப்பவனே க்ருஷ்ணா...க்ருஷ்ணா...

The Bollywood Blog: Celebrity Interview: Madhur Bhandarkar...: "Signal' will take my cinema into the underbelly of Mumbai - those people whom we see at the traffic signals - the newspapers hawkers, the fruit and flower sellers, the beggars and eunuchs. Where do they come from... Where do they go?""

Traffic Signal: Promo Watch: "The trailer of 'Traffic Signal' opens amidst the honking of vehicles on a fast moving city street in Mumbai. Dabbawalas, sweepers, street show players, taxis, drug addicts, et al you get to see all the elements you will usually encounter on a signal in the city. Detailing always shows in the scripts of Bhandarkar's films.

- Kunal Khemu as a slum dweller
- Neetu Chandra going in a complete deglam avatar for the film as a rag-picker
- Upendra Limaye as the drug peddler
- Konkana Sen Sharma playing a prostitute with that extra lipstick smeared on her face
- Ranvir Shorey as the pimp"

எ.எ.,
----படம் page 3 பாத்தேன். நல்லா எடுத்திருந்தார்---

இயக்குநரின் முந்தைய ஆக்கங்களை ஒப்புமை செய்து ஒரு விமர்சனம்: Discovering Myself: Golmaal and Corporate


சி.அ.,
----இப்படி ஒரு படமா?---

ஹிந்தியில் (தமிழை விட) பல சிறந்த படங்கள் வெளிவருகிறது. நுட்பத்தில் 'Musafir', நகைச்சுவையில் முன்னாபாய் என்று நிறைய சொல்லலாம். அவ்வப்போது தேர்ந்தெடுத்து பார்க்கவும்.

ஹிந்தி கோ கபி அல்விதா ந கஹனா ;-) (Never say bye bye to Hindi :-)


சு.கோ.,
----ட்ரெய்னியா இருந்த மினிஷா லிம்பாவைப் பத்தி ஒரு வரி எழுதினா----

வரி... என்ன படமே போட்டாச்சு. இவங்க வந்து போன சில மணித்துளிகளில், 'இவர் யார்' ன்று யோசிப்பதற்குள் துக்கடாவாகி காணாமல் போயிட்டார். கம்பெனி பார்ட்டியில் ஒரு அயிட்டம் நம்பர் வருமோ என்று நினைத்தேன். பண்டார்கர் ஏமாற்றிவிட்டார் (அல்லது ஏமாற்றவில்லை :-)

----கேட்டதும் கொடுப்பவனே---

ஹி..ஹி.... :-D)


----நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.- True.----
ஆரம்பத்தில் இவரைத்தான் நாயகி வேடத்துக்கு முயன்றதாக தகவல். சும்மா படத்தை குறித்த ஆர்வத்தை கிளப்புவதற்காக சொன்னாரா அல்லது வெளிநாட்டு விற்பனைக்காக யோசித்தாரா என்று தெரியவில்லை.

படத்தில் Godmen செய்து முடிக்கும் லீலா விநோதங்களையும் தொட்டுச் செல்கிறார். இத்தனை கதாபத்திரங்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் எல்லாருக்கும் மனதில் நிற்கும் காட்சியமைப்புகளையும் கட்டுக்கோப்பாக அமைக்கிறாரோ!

இனிய பாலா,

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றிகள்.

*

கீழே உள்ளது கலாய்க்க மட்டுமே :)

சரிஜி, நம்ம அடுத்த பதிவு எம்.ஜி.ஆர்து ரெட்டைச் சிலம்ப சண்டைக் காட்சியாச்சே...அதையுமா நீங்க நெனப்பீங்க.

நான் வீசும் சிலம்பங்கள் நீயாக வேண்டும் ம்ஹூம்ம்ஹூம்...வுடு ஜூட்... :)

அன்புடன்
ஆசாத்

After reading this review, I plan to see the movie :)

ஆசாத், பாலா, __/\__

பாபா,
ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சு ! தலைப்பு சரியா வச்சு, என்னை இழுத்துப்புட்டீங்க, சாரே :)))
என்றென்றும் அன்புடன்
பாலா
பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/08/jolly-tips.html

http://chennaicentral.blogspot.com/2006/08/if-you-would-like-to-help-poor-girl.html

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு