Thanga Vettai - American Students are Idiots
ஞாயிறு அன்று 'செல்வி'யும் 'லஷ்மி'யும் இல்லாத குறையைப் போக்க 'ராஜராஜேஸ்வரி' போன்ற நகைச்சுவை அரங்கேற்றுவது சன் டிவியின் வழக்கம். மேற்கத்திய உலகில் பதின்ம வயதினரிடையே 'நிஜ நாடகங்கள்' (ரியாலிடி ஷோ) பிரபலம். 'இந்தியன் ஐடல்' புகழ்பெற்று வருவதன் மூலம் ஹிந்தி உலகிலும் ரியாலிடி தொடர் வரவேற்பு அடைந்திருக்கிறது.
சன் டிவியும் இந்த நிஜம் போன்ற சீரியல்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் தொடக்கம்தான் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தங்க வேட்டை. ஞாயிறு இரவுக்கே உரிய அசுவாரசியத்துடன், புதிய வாரத்திற்கு வலைப்பதிய விஷயத்தைத் தேடும்போது கேட்கப் பெற்றேன்.
நிஜ நாடக நிகழ்ச்சியை கேட்டு மகிழ:
பள்ளிக்கூட ஆசிரியர் என்பது அமெரிக்காவில் விவகாரமான தொழில். குழந்தைகளிடம் 'இடியட்' என்னும் வார்த்தையை பிரயோகித்தால், சீட்டு கிழியும் என்று உத்திரவாதமாக பணம் கட்டி ஜெயிக்கலாம். 'I' word என்று பயபக்தியுடன் ஹாரி பாட்டரின் 'யூநோஹூ' மாதிரி சொல்லவே மிரளுவார்கள்.
பள்ளி மாணவர்கள் சொல்லிவிட்டால், பெற்றோரை வேலையில் இருந்து கூப்பிட்டு அனுப்பி கண்டித்து அனுப்புவார்கள். அமெரிக்காவை திட்டுவது வெற்றிகரமான நிகழ்ச்சியின் தேவையாக இருக்கலாம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மட்டம் தட்டுவது கீழ்த்தரமான ஜனரஞ்சகத்தை வெளிச்சமிடுகிறது.
கொஞ்சம் பின்தங்கிய சிறார்களை 'ஸ்பெஷல் கிட்ஸ்' என்று விளித்து, சிறப்பு கவனமும் அக்கறையும் செலுத்தி, பாடத்தைப் புகட்ட முயற்சிக்கும் ஆசிரியர்களைத் திட்டி அழகு பார்க்கும் சன் டிவிக்கும், பொய்யை நயம்பட நிகழ்ச்சியில் புகுத்தி போலி சித்திரத்தை உருவாக்கும் ராடான் நிறுவனத்திற்கும் (RADAAN MEDIAWORKS (I) LIMITED), திறம்பட படச்சுருளைத் தொகுக்கத் தெரியாத தங்கவேட்டை தயாரிப்பாளர்களுக்கும் வருத்தம் கலந்த கண்டனங்கள்.
நீங்களும் அவர்களிடம் பிழையை சுட்டிக் காட்ட:
info@radaan.tv
தொடர்பான ஆங்கிலக் குமுறல்:
Bala’s Blog » Blog Archive » Thanga Vettai - American Students are Idiots
முன்னாள் பதிவு: வீட்டில் இருந்தால் சன் டிவியில் பார்க்க நினைக்கும் சில நிகழ்ச்சிகள்
Sun TV | Thanga Vettai | Ramya Krishnan | American Schools | Ramya Krishnan
BABA,
This attitude needs to be condemned.
BTW, pl. see my old posting on 'ராஜராஜேஸ்வரி'
http://balaji_ammu.blogspot.com/2005/01/blog-post_31.html
சொன்னது… 8/15/2006 11:08:00 AM
தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா: சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி'!: "தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்"
:-)
----This attitude needs to be condemned.---
'ஆசிரியர் தினம்' கொண்டாட வேண்டாம். சிறப்பான பயிற்றுவிப்பாளர்களைப் போற்றிப் புகழ வேண்டாம். அவதூறு செய்யாமல், இளக்காரமாக நடத்தாமல் இருந்தாலே போதுமானது.
ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கும் நிகழ்ச்சியில், சிறுவர்களைக் கவரும் விதம் அமைந்த தொடரில், 'அம்மா ராட்சஸி (அதற்கு முன் வந்த சிறுவன்) மாதிரி திட்டுவாங்க... But, I care two hoots!' என்று பெற்றோரை புறக்கணிப்பதை in-thing ஆக்குவதும், சிறப்பாக பரிமளிக்காத குழந்தைகளை 'இடியட்ஸ்' என்று திட்டுவார்கள் என்று புறங்கூறுவதும் ரொம்பவே வருந்தத்தக்க கேளிக்கை துஷ்பிரயோகம்.
விவரணப்படம் அளவுக்கு வரிந்து கட்டி அலசாவிட்டாலும், கொஞ்சமாவது 'இயக்குநர்' போதிய கவனம் செலுத்தி விஷவிதைகளை தூவாதிருக்கலாம்.
சொன்னது… 8/15/2006 11:44:00 AM
TK-Contest Rating என்ன ஆச்சு?
சொன்னது… 8/15/2006 12:06:00 PM
பாபா,
//விவரணப்படம் அளவுக்கு வரிந்து கட்டி அலசாவிட்டாலும், கொஞ்சமாவது 'இயக்குநர்' போதிய கவனம் செலுத்தி விஷவிதைகளை தூவாதிருக்கலாம்.
//
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி ! பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை வழங்குவோருக்கு பொறுப்பு அவசியமில்லையா ?
என்றென்றும் அன்புடன்
பாலா
சொன்னது… 8/15/2006 12:33:00 PM
உங்களின் பதிவில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு விட்டேன் :-)
சொன்னது… 8/15/2006 12:38:00 PM
நன்றி பாலா
சொன்னது… 8/15/2006 12:38:00 PM
கண்டிக்கத்தக்க விஷயம்தான்.
ஆனா அமெரிக்கர்கள் நம்மாட்களை போட்டுத் தாக்குவதையும் கொஞ்சம் கவனிக்கணுமே...
டெய்லி ஷோ, மைண்ட் ஆஃப் மென்சியாவில் எல்லாம் இந்தியாவைப் பத்தி (நம்மூர்) தரம் குறைந்த காமெடி பண்ணுவதை பார்க்கலாம்.
இந்து தெய்வங்களை வைத்து இவர்கள் செய்யும் காமெடி பலருக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம் தங்கள் அதிபர் முதல் தெய்வங்கள், தலைவர்கள் யாரென்றாலும் 'இடியட்' என்பதைவிட கீழான வார்த்தைகளில் அழைக்கும் அமெரிக்கர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமா?
தொடர்புள்ள ஒரு ச்செய்தி இந்த வார டைமிலிருந்து..
Outsourcing Your Homework
One problem with the No Child Left Behind Act is that 80% of the kids entitled to after-school tutoring--at taxpayers' expense--aren't getting it, according to a new government report, and some rural districts offer no tutoring at all. But extra help is on the way. And like a lot of customer service these days, it comes with a distinctly Indian accent. The Bangalore-based TutorVista, which last fall began providing online tutoring to U.S. students in everything from grammar to geometry, last week announced it will provide a year of free tutoring to kids in the 10 poorest rural counties in the U.S.
That means all students in, say, Texas' Zavala County or South Dakota's Ziebach County can get first-rate help--which ordinarily would cost $20 an hour--regardless of whether their school is performing poorly enough to be on the NCLB's watch list. (The only catch for kids in impoverished, remote areas: they must have access to a high-speed modem.) TutorVista chairman Krishnan Ganesh dismisses critics who lament the further siphoning of jobs overseas. "There is plenty of work to go around," he says. "The American educational system is pathetic."
சொன்னது… 8/15/2006 12:51:00 PM
Hmmm American educational system is patheticnnu solravunga ellam should first check if the Indian education system is any better in the non fee paying sector. Chumma namma oorla panam katti pullaingala padikka vekiradhaiyum westla non fee paying schoolsla nadakuradhaiyum compare panradhu is stupidity. (Hee Hee blog illela ipdi pora vara edathula ellam inime namma ennangala therivichukuradhunnu irukken)
பெயரில்லா சொன்னது… 8/15/2006 01:06:00 PM
----அமெரிக்கர்கள் நம்மாட்களை போட்டுத் தாக்குவதையும் கொஞ்சம் கவனிக்கணுமே...----
அமெரிக்க நகைச்சுவையாளர்கள் ஈக்வல் ஆப்பர்ச்சூனிடியா எல்லாரையும் வறுத்தெடுப்பார்களே ;-)
இந்தியர்களோடு நில்லாமல், பக்கத்து ஊர் கனடியர்கள், ஃப்ரென்சு, ரஷியா, புஷ், டூ டி ஃப்ரான்ஸில் மாட்டிக் கொண்டவர், மாட்டிக் கொள்ளாதவர் என்று எல்லாருமே அவர்களுக்கு அவல்தானே?!
காமெடி டைமில் சிட்டிபாபு இந்த மாதிரி 'ஸ்டுபிட் கண்ட்ரி ஃப்ரூட்' என்று திட்டினால் சொரணையேறிருக்காது. ஆனால், 'சன் செய்திகள்' போன்ற நிகழ்ச்சியில், 'நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்; அங்கு குழந்தைகளை இவ்வாறு கடுமையாக லவுட் ஸ்பீக்கரில் கடிந்து கொள்வார்கள்' என்று வாக்குமூலம் கொடுக்கும் அறியாச்சிறுவனையும் அவனை சுற்றி கும்மாளமிடும் அப்பா, அம்மா, குடும்ப சகித நிகழ்ச்சித் தொகுப்பாளரையும் பார்த்தால், 'கேக்கறவன் கேணையணா இருந்தா கோலாலம்பூர்காரங்களுக்கு கோவணம் வழியா கோமியம் வருது' என்று சொல்லிடறாங்களே என்னும் வருத்தம் சிறில் :-)
சொன்னது… 8/15/2006 01:43:00 PM
-----Hee Hee blog illela ipdi pora vara edathula ellam inime namma ennangala therivichukuradhunnu irukken-----
பார்த்தேன்... பார்த்தேன்... பேசாம கூகிள் cache-இல் இருந்து தினசரி ஒண்ணா சுட்டு மறுபதிவு போட்டு ஒப்பேத்தலாமா என்று ஒரு யோசனை... putvote.com மாதிரி thinkcache.com :D ஹி...ஹி...
சொன்னது… 8/15/2006 01:46:00 PM
அமெரிக்காவில் நிறைகள் எதுவும் இல்லாதது போலவே வலைப்பதிவர்கள் பலரும் எழுதியதாக படித்த நினைவு. எந்தவித நிறைகளும் இல்லாமலே பல்லாயிரக்காண மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது கூட ஒரு அதிசயம்தான்.
சொன்னது… 8/15/2006 02:17:00 PM
//உங்களின் பதிவில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு விட்டேன் :-) //
கில்லி மாதிரி இருக்கிங்களே! எப்படிப்பா இதெல்லாம்?
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
சொன்னது… 8/15/2006 03:39:00 PM
தேன்துளி... ரொம்ப நியாயமான (அதனால் விவகாரமான) கேள்வி :-)
சொன்னது… 8/15/2006 03:49:00 PM
//அமெரிக்க நகைச்சுவையாளர்கள் ஈக்வல் ஆப்பர்ச்சூனிடியா எல்லாரையும் வறுத்தெடுப்பார்களே ;-)
இந்தியர்களோடு நில்லாமல், பக்கத்து ஊர் கனடியர்கள், ஃப்ரென்சு, ரஷியா, புஷ், டூ டி ஃப்ரான்ஸில் மாட்டிக் கொண்டவர், மாட்டிக் கொள்ளாதவர் என்று எல்லாருமே அவர்களுக்கு அவல்தானே?!//
கண்டிப்பா...பரஸ்பர ப்தவறான புரிதல் நம்ம மக்களுக்கும் மேற்குக்கும் நிச்சயம் இருக்குது.. இதப் பலமுகங்கள்ள அமெரிக்காவுலேயும் இந்தியாவுலேயும் பாக்கலாம்.
சொன்னது… 8/15/2006 08:50:00 PM
பாலா, இந்தக் கொடுமை வேற நடக்குதா!
கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஃபோன் போட்டு கேள்வி கேக்குற நிகழ்ச்சி. யாருன்னு மறந்து போச்சு. (தொடர்ந்து பாத்தாத்தான தெரியும்.) இந்தப் படத்த இயக்குனது யாரு? (அங்கயும் சினிமாக் கேள்விதான்.) விடை சொல்றவரு எஸ்.பாலச்சந்தர் என்று சொன்னார். அதுக்கு கேள்வி கேக்குறவரு "நீங்களா ஒரு பேரு சொல்றீங்களா? நீங்க சொன்னது தப்பான விடை. சரியான பதில் கே.பாலச்சந்தர்"னு சொன்னாரு.
விடைக்கான கேள்வி "அந்த நாள்" படத்தை இயக்கியவர் யார்?
ராஜராஜேஸ்வரி பயங்கர காமெடிங்க..முந்தி இப்பிடிதான் வேலன்னு நாடகம் போட்டாங்க...நாங்கூட ஏதோ முருகன் நாடகம்னு உக்காந்தா பயங்கர நகைச்சுவை. அடேங்கப்பா!
சொன்னது… 8/15/2006 10:40:00 PM
யாருப்பா அது ராஜராஜேச்வரிய காலாய்க்கிரது. பிறகு உங்க ஏரியாவுல மண்ணெடுத்துருவேன் ஜாக்கிரதை.
பெயரில்லா சொன்னது… 8/16/2006 03:37:00 AM
கருத்துரையிடுக