திங்கள், அக்டோபர் 30, 2006

Loosu Penney - Vallavan Inspired

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே
லூசுப்பையன் உன் மேலதான் லூசா சுத்தறான்
காதல் வராதா காதல் வராதா
என் மேல் உனக்கு காதல் வராதா?

என்னும் பாடல் உல்டா பாடலுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்தியது. காதல் என்பதற்கே உரித்தான அடைமொழியான லூசு என்னும் பதத்தை வாங்குபவராக பெண்ணையும் கொடுப்பவராக ஆணையும் கருவாக அமைத்த கவிதை.

முதலில் களத்தைத் தேர்ந்தெடுக்கவும். காட்டாக இந்திய கிரிக்கெட் வீரன். அடைமொழியாக அவுட்.


மட்டைவீரனே மட்டைவீரனே மட்டைவீரனே
மடையன் உன் மேலதான் மப்பா இருக்கறான்
ஆட மாட்டியா ஆட மாட்டியா
என்னிக்காவது உனக்கு ஆட வராதா?


இன்னும் சில முயற்சிகள்:

வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி
வாக்காளன் உன் மேலதான் வாக்கா போடுறான்
மாற்றம் வராதா மாற்றம் வராதா
ஆட்சியிலதான் மாற்றம் வராதா?


ஆட்சென்ஸே ஆட்சென்ஸே ஆட்சென்ஸே
ஆட்பையன் உன் மேலதான் Ad-ஆ போடறான்
காசு வராதா காசு வராதா
ப்ளாக் மேல் எனக்கு காசு வராதா?


சந்திரமுகியே சந்திரமுகியே சந்திரமுகியே
சாந்திக்காரன் உன்னத்தான் ரீலா சுத்தறான்
நிறுத்த மாட்டானா நிறுத்த மாட்டானா
ஓட்டறத என்னிக்காவது நிறுத்த மாட்டானா ?
(தொடர்பான சுட்டி: Voice of Rajinifans :: சந்திரமுகி - 560)

பேப்பர்காரனே பேப்பர்காரனே பேப்பர்காரனே
ப்ளாக்ப்பையன் உன்னத்தான் பேப்பரா புரட்டுறான்
நியூசு கிடைக்காதா நியூசு கிடைக்காதா
ப்ளாகில் போட எனக்கு நியூசு கிடைக்காதா?

இவ்வளவுதாங்க தோணிச்சு. உங்களுக்குத் தோணினதையும் சொல்லுங்க...


லூஸு முயற்சி இல்லாமல், சேரிய முயற்சியைப் படிக்க இங்கு செல்லலாம்: அன்புத் தோழி தயா: -->சுட்டிப்பெண்ணே...<--
| |

11 கருத்துகள்:

:-)

கவிஞனுக்கே சவாலா, இதோ பிடியுங்கள் :-)))

<<>>

லூசுப்பையா லூசுப்பையா
லூசுப்பையா
லூசுப்பொண்ணு உன் மேலதான் லூசா சுத்தறா
ஜஸ்க்ரீம் வராதா ஓசி சினிமா வராதா
எனக்கு கொஞ்சம் காஸ்ட்லி கிப்ட்ஸ் வராதா....

<<>>

ஆளுங்கட்சி ஆளுங்கட்சி ஆளுங்கட்சி
கூட்டணி கட்சி உன் மேல கோபமா சுத்தறான்
துரோகம் செஞ்சியே பச்சை துரோகம் செஞ்சியே
அவங்க மேல உனக்கு பரிதாபம் வராதா..

Nalla karpanai :)

மட்டை வீரனே இற்குப் பதில் மட்டை வீரா போட்டீங்கன்ன இன்னும் சந்தமா இருக்கும்:-)

ப்ளாக்வாசகா ப்ளாக்வாசகா ப்ளாக்வாசகா..
ப்ளாகரெல்லாம் ஒன்மேலத்தான் லூசா சுத்துறான்..
ஊட்டம் வராதா பின்னூட்டம் வராதா
படிச்சுபுட்டு ஒடிப்புட்டா ஏக்கம் வராதா.

======

பொஸ்டன் பாலா பொஸ்டன் பாலா போஸ்டன் பாலா
போஸ்டிங்போட மேட்டரெல்லாம் எங்க புடிக்குற
போரே அடிக்காதா போரே அடிக்காதா
போஸ்டிங் மேல போஸ்டிங்போட்டா போரே அடிக்காதா?

==========

ஏங்க எங்களையும் இப்படி பண்ண வைக்கிறீங்க..

:)

என்ன பாலா இன்னும் _/\_ போடல?
:)

மனதின் ஓசை __/\__

சோ.பை.

எசப்பாட்டு போட்டுக்கறேன்...


கூட்டாளியே கூட்டாளியே கூட்டாளியே
சுயேச்சை உன் பேச்ச கேக்காம நிக்கறான்
கால வாரினியே காலை வாரினியே
வாக்குப்பெட்டிக்குள் எனக்கு ஓட்டு வராதா?
கோட்டை மேல் என் கொடி பறக்காதா?


ஜஸ்க்ரீம் வராதா ஓசி சினிமா வராதா
எனக்கு கொஞ்சம் காஸ்ட்லி கிப்ட்ஸ் வராதா....


: )))

ஹனீஃப் __/\__

கானா

---இற்குப் பதில் மட்டை வீரா---

அட... இன்னும் எதுகையா இருக்கிறதே! :)

சிறில்

---என்ன பாலா இன்னும் _/\_ போடல?---

போட்டுடலாம்... கொஞ்ச நாள் பதில் போடவில்லை என்றால், தேங்கி விடுகிறது ; )

பொறுமையாக, இன்று பின்னூட்டி செறிவாக்கிய அனைவருக்கும் __/\__ போட்டாச்சு.


போஸ்டிங் மேல போஸ்டிங்போட்டா போரே அடிக்காதா?

யாம் பெற்ற போர் பெறுக இவ்வையகம் ; P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு