Pokkiri - Song Lyrics
போக்கிரி
இசை: மணி ஷர்மா
இயக்கம்: பிரபு தேவா
போக்கிரி படத்தின் இசையும் வரிகளும் குறித்த டாகுமெண்டேசன். விரிவான 'போக்கிரி' பாடல் அனுபவங்களைப் படிக்க இங்கே செல்லவும்: Pokkiri - Album Review
1. என் செல்லப் பேரு ஆப்பிள் - ஏவி ரமணண் & சுசித்ரா : பா விஜய்
பா விஜய்க்கு தேசிய விருது கிடைக்குமா?
(ஆண்)
ஏ ரோஸி
மை செக்ஸி
ஐ லைக் யுர் டோண்ட் கேர் பாலிசி
என் ராசி
சிம்ம ராசி
நானொரு காதல் சன்னாசி
(பெண்)
இங்கிலாந்தில் பெண்களும்
இந்தியாவில் ஆண்களும்
அட
ஆசைகள்
அடங்காத ஆட்கள்
(ஆண்)
ஓ மேரா
புல்புல் தாரா
என் முன் ஆடும் எல்லோரா
ஆவாரா
ஆடிப்போறா
ஆசை நூறா
ஐநூறா?
2. வசந்த முல்லை - ராகுல் நம்பியார், வி கிருஷ்ணமூர்த்தி : நா முத்துக்குமார்
அசல் பாட்டும் வருகிறது. படுத்தியிருக்க வேண்டாம்.
குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன்
கண்ண நிமிர்ந்துதான் பார்க்கிறேன்
காதல் என்பது காப்பியைப் போலே
ஆறிப் போனா கசக்கும்
காஞ்சிப் போன மொளகா பஜ்ஜி
... போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கோம்
கேடி ரவி முகம்
3. டோல் டோலு - ரஞ்சித், சுசித்ரா : பா விஜய்
வைரமுத்து மட்டுமே காப்பிரைட் வாங்கிய அறிவியல் துளிகளை உல்டாவாக்கி எழுதும் வித்தையை பா விஜய்யும் தொடர்கிறார். சிவப்பதிகாரத்தின் 'அற்றைத் திங்கள்' போல் ஹஸ்க்கி பாடல். திரையாக்கம் அடல்ட்ஸ் ஒன்லி?
வலப்பக்கம் சுழலும் பூமிப் பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவில் இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே
4. மாம்பழமாம் மாம்பழம் - சங்கர் மகாதேவன், கங்கா : சிநேகன்
'வடுமாங்கா ஊறுதுங்கோ' நடையில் துள்ளல் கானம்.
(ஆண்)
எங்கே நான் தொடங்கணும்
எங்கே நான் மடங்கணும்
எங்கே நான் அடங்கணும்
சொல்லிக் கொடுடி
(பெண்)
ஈசானி மூலையெல்லாம் என்கிட்டதான் இல்லடா
என்ன நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா
பாடலாசிரியர்: கபிலன்
(ஹீரோ)
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி
பாடப்போறேன் என்னப் பத்தி
கேளுங்கடா வாயப் பொத்தி
கடா வெட்டிப் பொங்கல் வச்சா
காளியாத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்கல் வச்சா
ஜல்லிக்கட்டுப் பொங்கலடா
அடியும் உதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வெச்சா
போக்கிரிப் பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
அடுப்பில்லாம எரிய வச்சா
போக்கிரிப் பொங்கல்
---------
(பெண் குழு)
போக்கிரியக் கண்டாலே சூடு
இவன் நின்னாலே அதிரும்டா ஊரு
அட...
கைத்தட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டாம் நீ...
இருக்கும் வரைக்கும் நிலைக்கும்!
அவன் வந்தாலே விசிலடிக்கும் பாரு
என்னாளுமே பறக்கும்...
அதுதான் கலக்கும்
---------
(ஹீரோ)
பச்சப்புள்ள பிஞ்சு விரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முந்தானையில் தூளி கட்டும்
தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளி வச்சா
ஆத்தா உன்ன மன்னிப்பாளா?
தாய்ப்பால் உனக்கு கோக்கோ கோலா!
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
காலத் தொட்டு பூச பண்ணு
நான் ரொம்ப திருப்பு
என்னோட பொறப்பு
நடமாடும் நெருப்பு
---------
மழைக்காலத்தில் குடிசையெல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில்காலத்தில் குடிசையெல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்டப்படிப்புத் தேவையில்ல
தீப்பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து!
Tamil Films | Pokkiri | Music | Audio | Songs | Cinema | Movies | Vijay
சூப்பர்....
நான் அந்த பாட்டத்தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்...
பெயரில்லா சொன்னது… 12/20/2006 03:40:00 PM
ரஜினிக்கு அப்புறம் விஜய் பாடல்தான் சூப்பர் ஓபனிங்கோடு கேட்டவுடன் தாளம் போட வைக்கிறது : )
சொன்னது… 12/20/2006 04:03:00 PM
தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » Pokiri Songs - Review
சொன்னது… 12/21/2006 07:41:00 PM
கருத்துரையிடுக