செவ்வாய், செப்டம்பர் 30, 2008

அமெரிக்க மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல்

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் டெய்ட்டன் நகரில் உள்ள மசூதியில் இரம்சானை கொண்டாடும் பொருட்டு முன்னூறு பேர் குழுமியிருந்தனர்.

பெற்றோர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக குழந்தைகளுக்கான காப்பகமும் மசூதிக்குள்ளேயே இருந்தது. அந்தக் காப்பகத்துக்குள் அடையாளம் தெரியாத இருவர் நச்சுப்பொருள் நிறைந்த மருந்தை அடித்தனர்.

தொழுகையில் இருந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டனர்.

ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு அங்கேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

'இது போன்ற ஒன்று இதுவரை நடந்ததேயில்லை. மிகவும் கலக்கமாக இருக்கிறது' என்று டெய்டன் நகர இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் தாரிக் (Tarek Sabagh) குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு: Terrorists attack Ohio mosque - City of Brass

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு