வியாழன், பிப்ரவரி 05, 2004

சூபர் ஹிட் முகாப்லாவும் ரெட்டும்

அமிதாப் தயாரிக்கும் முதல் படம். இரு பஞ்சாபி நடிகைகள் அறிமுகம்
ஆகிறார்கள். அப்பாவி தென்னியந்தப் பார்வதியாக ப்ரியா கில். ஓரத்தில்
இரண்டாம் கதாநாயகியாக சிம்ரன் நவல். படத்தின் ஒரு பாட்டில்
சிம்ரன் ஆடுவதைக் கூட யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
மீண்டும் 'சூப்பர் ஹிட் முகாபலா'வுக்கேத் திரும்பி விடலாம் என்றால்
அங்கும் வேறு யாரோ ஆக்கிரமித்து விட்டார்கள்.

Priya Gill ப்ரியாவுக்கோ படவாய்ப்புகள் குவிகின்றன. ஷாருக்கு ஜோடியாக 'ஜோஷ்',
'காதல் கோட்டை'யின் ஹிந்தி பதிப்பில் தேவயானி ஏற்ற வேடம் என்று
வரிசையாக பதிவு செய்யபடுகிறார். அழகு, நளினம், பாந்தமான நடிப்பு
அனைத்தும் பெற்ற ப்ரியா வெற்றிபெறுவாரா? நெட்டைக் கொக்கு, பருத்த
நடிகைகள் விரும்பும் கோலிவுட்டில் கால் வைப்பு, ·பாரெக்ஸ் பேபி
அப்பாஸ¤டன் இரண்டு படங்கள் என்று தடுமாறுகிற சிம்ரன் நிலைப்பாரா?

Simran ஆனால், ப்ரியாவுக்கோ இறங்குமுகம். சிம்ரனோ தெலுங்கு, மலையாளம்,
மணிரத்னம் படம் என முன்னேறுகிறார். 'ஒன்ஸ் மோரில்' ஆரம்பித்தவர், தனது
ஆடைத்தேர்வு, இளங்கதாநாயகர்கள், பண்பட்ட நடனம், புன்சிரிப்பால்
தமிழ் பத்திரிகைகளின் அட்டை முதல் வாசகர்களின் உள்ளம் வரை நிறைத்தார்.

'தேரே மேரே சப்னே' ABCL-ஐ மூட வைப்பதற்கு உதவிய படம். கிட்டத்தட்ட
அதன் மறுபதிப்பான 'விஐபி'யிலும், கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபத்திரத்தை
ஏற்று, படத்தையே ஹிட்டாக்கியவர் சிம்ரன். அஜீத்துக்கு 'அவள் வருவாளா', 'வாலி'
என்று உச்சாணிக் கொம்புக்கு கைதூக்கியவர். ப்ரியாவும் அஜீத்துடன் 'ரெட்'டில்
ஜோடி சேர்ந்தார். டாப் 10-ல் சன் டிவி பாடலை ஓட்டியும், அவருக்கு படம்
கைகொடுக்கவில்லை.

இவ்வளவு பெரிய வியாக்கியானம் எதற்கு?

1. நாவல்தான் எழுதவில்லை. 'நவல் புராண'மாவது கொடுப்போமே?
2. அற்புதமான ஆரம்பம் கிடைத்தாலும், ஒருவர் வெற்றி வெறுவார்
என்பது நிச்சயமில்லை?
3. 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு', சிலருக்குத்தான் பொருத்தம்?
4. திறமை இருந்தால் போதாது. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்'
மனப்பான்மையும், சமரசங்கள் செய்யவும் தயாராய் இருக்க வேண்டும்?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு