படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன?
1. ஆயுத எழுத்தின் ஆதிமூலங்கள்: 'சிடி ஆஃப் காட்' என்பதின் தாக்கம் ஆய்த எழுத்தில் நிறைந்திருக்கும் என பேச்சு அடிபட ஆரம்பித்து இருக்கிறது. டீகடையில் சொல்லியிருக்கும் 'கடவுளின் நகரம்' கதைக்கும் மணியின் படத்திற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கலாம். பிரேசில் படத்தில் இரண்டு பேர் இரு துருவங்களானால், மணி ரத்னம் இன்னொருவரையும் சேர்த்துக் கொண்டு மூன்று வழிப்பாதை போட்டிருக்கார். அமெரிக்காவில் City of God பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையானால் ஆஸ்கார் மாட்டுகிறதா என்பதும் தெரிந்து விடும்.
மணிரத்னம் என்ன செய்தாலும் 'க.மு.'வை 'ஏ.ஐ'யின் தழுவல்தானே என்று கேள்வி கேட்பார்கள்! அந்த மாதிரி....
2. மவுசு குறைஞ்சு போச்சுங்க - Sify.com: 'இந்தியா டுடே' கருத்துக் கணிப்புகளில் எனக்கு அதிக நம்பிக்கை கிடையாது. புரட்சி தலைவிதான் இருப்பதிலேயே 'மோசமான' முதலமைச்சர் என்று சொன்னார்கள். காங்கிரசில் சேர்ந்து எதுவும் சாதிக்காத சிரஞ்சீவிக்குக் கூட தலை ஐம்பதில் இடம் கொடுத்து விட்டார்கள். வாயே திறக்காமல், தமிழகத்தின் அனைத்து முக்கிய பத்திரிகை, வலைத்தளம், விஐபி, கட்சி, என எல்லாவிடங்களிலும் நீக்கமற காட்சி தரும் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஷாருக் - 27
ரெஹ்மான் - 29
ஐஷ்வர்யா - 42
கமல்/ரஜினியை விடுங்க; சிம்ரன்/ஜோதிகாவை விடவா ஏ.ஆர்.ரெஹ்மான் மக்களை பாதிக்கிறார்?
3. ஆபத்தான வழிகள்: அமெரிக்காவில் எந்த சந்து பொந்துகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். அங்கு வண்டியோட்டும்போது முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்பீர்கள்.
எதற்கெல்லாம் தலை-பத்து இருக்கிறது என்று நினைத்தால்...
கருத்துரையிடுக