வெள்ளி, மார்ச் 05, 2004

அம்மா மாட்டிகிட்டாங்க!

BBC NEWS | Business | Jury finds Martha Stewart guilty: ரொம்ப நாள் முன்னாடியே சிக்கிக் கொண்டவர்தான் என்றாலும் தீர்ப்பு சீக்கிரமே வெளிவந்து விட்டது. மங்கையர் எப்படி வாழவேண்டும், எவ்வாறு வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று 'அவள் விகடன்' ரேஞ்சுக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். 'இம்க்ளொன்' நிறுவன அதிபரின் ஆலோசனைப்படி கம்பெனியின் படுப்பதற்கு முன்பே பங்குகளை சகாய விலையில் விற்று பெரும் நஷடத்தைத் தவிர்த்து விட்டார். ஆனால் என்ரான், எம்சிஐ என்று மட்டிக் கொண்ட பிசினஸ்களின் வரிசையில் அடுத்த பெயராக மார்த்தா ஸ்டுவர்ட். பிறருக்குத் தெரியாத தகவல்களைக் கொண்டு 228,000 பங்குகளை விற்றதாக குற்றசாட்டு.

Martha Stewartஇரண்டு தபா பொய்யான வாக்குமூலமும், குற்றம் செய்ததற்காக ஒரு முறையும், காவல்துறையின் செய்ல்பாடுகளைத் தடுத்ததற்காக ஒரு வாட்டியும் தப்பு செய்துவிட்டதாக ஜூரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்தாண்டு கடுங்காவல் கிடைக்கலாம். மில்லியன் டாலர் அபராதாமும் போடலாம். நீதிபதி மெதுவாகத்தான் முடிவெடுப்பார். ஜூன் 17-தான் தெரியும்.

கல்யாணத்துக்கு என்ன டிரெஸ் போட்டுக்கலாம் என்பது முதல் கழிவறையில் என்ன திரைச்சீலை போடலாம் என்பது வரை அறிவுறுத்தி அதன் மூலம் ஆண்குலத்துக்கு செலவும் டார்ச்சரும் செய்து வந்தவர்களில் ஒருவர் குறைக்க்கப்படுவார்? (டிஸ்க்ளெய்மர் போட்டுக்கலாம்: நான் பெண்ணியத்துக்கு எதிரானவன் அல்ல :) அடுத்த வாரம் மகளிர் தினமாமே... ஏதாவது ஸ்பெஷலாய் செய்ய வேண்டும்! )

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு