தொலைக்காட்சி பார்க்க ஆசை?
அமெரிக்காவில் சன் டிவி வெற்றியடைய வேண்டும். சன் நியுஸ், ஜெயா, மற்றவர்களும் தொலைபரப்ப ஆர்வத்தைத் தருவதற்கு, சன்னின் இந்தக் படுத்தல்களைப் பொறுத்துக் கொண்டு 'வணக்கம் தமிழகம்' போன்ற நிகழ்ச்சிகளை (பதிவு செய்தாவது) பார்க்கலாம்.
'திராவிடன் டிவி' போன்று இங்கிருந்தே ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் நமக்குப் பிடித்ததை கொடுக்க வைக்கலாம். 'மெட்டி ஒலி' போன்ற தொடர், வாழ்வியல் பதிவுகள். சிலருக்கு அன்னியமாகத் தோன்றினாலும் நமக்கு முந்தையத் தலைமுறையும், இன்றைய பலரும் அது போன்ற கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பார்கள். 'லஷ்மி'யை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்வீர்களா என்று தெரியாது. ஆனால், சில சீரியல்கள் அவரின் கதாநாயகி அமைத்துக் கொண்ட வாழ்க்கைகளுக்குத்தான் உள்ளாகிறார்கள்.
முதலமைச்சரின் தவறுகளை சுட்டிகாட்டுவதும், நாட்டின் அல்ல விஷயங்களை சினிமாஸ்கோப்பில் எடுத்து வைப்பதும் எல்லா ஊடகங்களும் (இந்தியாவில்) செய்துவருகிறது. எதிர்மறை செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் மாலை முரசு, குங்குமம், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூ.வி. போன்ற பல செய்தித் தாள்கள், பத்திரிகைகளின் வளர்ச்சியாக திருச்சியில் எரிந்த மணக்கூடத்தில் பேட்டி எடுப்பது, சிறப்பு பார்வை என்னும் பெயரில் மக்கள்களின்
புலம்பலுக்கு வடிகால் கொடுப்பதாக உள்ளது.
சிரிக்கும்போது மட்டுமே மனதில் நிற்கும் சிட்காம் ரக நிகழ்ச்சியோ, கொலை/கொள்ளை என்று சகலத்தையும் அலசும் 24 / லா & ஆர்டர்
தொடர்களோ, மருத்துவர்களின், பள்ளி ஆசிரியர்களின், துப்பறியும் சாம்புக்களின், நடிகைகளின், வெள்ளை சொக்காய் வேலைக்காரர்களின்
என விதவிதமான வாழ்க்கைப் பதிவுகளை இந்தியாவிலும் தொலைக்காட்சியில் (ஆங்கிலத்திலாவது) பார்க்க முடியும் என்றே நம்புகிறேன்.
அவற்றை விட்டுவிட்டுக் 'கோலங்கள்' பார்க்க தினசரி ரிமோட்டைத் திருகிவிட்டு அழுகிறார்கள் என்றால் எப்படி? லா & ஆர்டரில் தினசரிக் கொலையும் கொலையுடன் கூடிய கொடூர குற்றங்களும் அரங்கேறும்; 'வெஸ்ட் விங்'கில் உலக பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்று காண்பிக்கப் படும்; அனேகமாக டிஸ்னியில் ஆரம்பித்து காமெடி செண்ட்ரல் வரை கார்ட்டூன் முதற்கொண்டு ஃப்ரெஞ்ச் கிஸ்களும் செய்முறை காட்டப்படும்; ஈஎஸ்பிஎன் போன்ற விளையாட்டி நிகழ்ச்சிகள் கூட சில சமயம் (தமிழ்ப் பண்பாடு) குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அல்லாத ஜானட் ஜாக்ஸன் நிகழ்ச்சி, ஊக்கப் படுத்துகிறேன் என்று குட்டை ஸ்கர்ட் அணிவகுப்பு, சுவாரசியபடுத்துகிறோம் என்று முக்கிய வீரர்களின் கைகலப்பு என்று இனிய நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
தமிழ்நாட்டில் குடும்ப விஷயங்கள் மட்டுமே (விரும்பிப் பார்க்கப் படுவதால்) தொடர்ந்து அலசுகிறார்கள். அவற்றைப் பார்க்காமல் டிஆர்பியை குறைக்ககும் வழியை யோசிக்கலாம்.
சன் பிடிக்காவிட்டால் பிபிசி, என்பிசி, ஏபிசி என்று வேறு எங்காவது செல்லலாம். சிஎன்எனில் தாலிபான் எதிர்ப்பு நிலை மட்டுமே காட்டுகிறார்கள்; அமெரிக்காவின் சாதனைகள் மட்டுமே காட்டி ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார்கள் என வருந்தலாம். அழுவாச்சி நெடுந்தொடர்கள் பிடிக்காவிட்டால் நல்ல படங்களாக நெட்·ப்ளிக்ஸில் எடுத்து வரவழைத்துக் கொள்ளலாம்.
கருத்துரையிடுக