அம்மா பிறந்தநாள்
1. அதிகாரபூர்வ இணையதளம்
2. சிறிய அறிமுகம்
3. பங்காரு அடிகளார் (அம்மா)
பெண்ணியத்துக்கு மதிப்பு கொடுப்பவர் என்ற ரீதியில் மதிக்கிறேன். மெல் கிப்ஸனின் The Passion of The Christ மாதிரி வசூல் செய்யாவிட்டாலும் 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி'யின் மூலம்தான் எனக்குக் கோவில் அறிமுகம். போன தடவை கோவில் சென்றபோது 'அம்மா வருவாங்க... ஒதுங்கிக்க...' என்ற குரல் ஒலிக்க ஆச்சரியம் அடைந்தேன். முதலமைச்சர் வெகு எளிமையாக வந்திருக்கிறார் போல என்ற எண்ணம்தான். நான் பரீட்சைக்கு செல்லும் அவசரத்தில் ஷூ காலோடு சல்யூட் அடிப்பது போல் ஆதிபராசக்திக்கு 'அரஹர' போட்டுக் கொண்டுவிட்டு காரில் ஏறுவதற்கு முன் பக்தர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டார். கோயிலின் சுற்றுப் பிரகாரங்களில் தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள், கல்வியமைச்சர்கள், கால்நடை அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராஷ்டிரபதிகள், பிரதம மந்திரிகள், கவர்னர்கள் என முக்கிய நபர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் ஏனோ, கபாலி கோவில் பிரகாரங்களில் அனைத்து ஊர் அம்மன் விக்கிரகங்களையும், அவதாரங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டியதை நினைவ்வுக்குக் கொண்டு வந்தது. அங்கு அம்மன்; இங்கு அம்மா!
வளர்ந்த நாடுகளில் மனக்கிலேசம் ஏற்பட்டால் உளவியாலாரை அணுகி மணிக்கு நூறு டாலர் என அழுது குறைபட்டுக் கொள்வார்கள். கஷ்டத்தில் வாடும் தமிழக நடுத்தர மக்கள் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு அடிகளாரிடம் புலம்பி இன்னல்கள் தீர்ந்துவிடும் என அசையா நம்பிக்கை அடைந்தால் (அவரின் செயல்கள்) பாராட்டிக்குரியதே.
கருத்துரையிடுக