திங்கள், மார்ச் 22, 2004

வாழ்க்கை - சுஜல்

(c) Corbis.comஅம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை
அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ரிப்பன்
பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிரிவினை
பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள்
இவையாவும் நேற்று கண்ட பகல் கனவாய் மனதில்...

இன்று மூடிய அறையில் கணினி மட்டும் துணையிருக்க
அக்காவின் கல்யாணத்தை வீசீடி யிலும்
அப்பாவின் கைபட்ட வாரமொருமுறை மின்னஞ்சலையும்
பார்க்க முடியாமல் போன பாட்டியின் கடசி நேர முகத்தையும் எண்ணி ...

மூடு பனி சூழ்ந்த வீட்டினில் ,நானும் ஒரு இயந்திரமாய்...
உற்றமும் சுற்றமும் கண்டு பொறாமைப்படும்
என அமெரிக்க வாழ்க்கை!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு