வெள்ளி, மார்ச் 12, 2004

கருத்துக் கணிப்புகள்

இது தேர்தல்களின் காலம். தேர்தல் என்றாலே கருத்துக் கணிப்புகள் அவசியம். உங்களின் இலவச ப்ளாஃக்ஸ்பாட், ப்ளாஃக்ட்ரைவ் தளங்களில் கூட வாக்கெடுப்பும் தேர்தல் நடத்தும் சௌகரியத்தையும் ஸ்பார்க்லிட் போன்ற சில வலைத்தலங்கள் செய்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் யார் ஜெயிப்பார்கள், பத்துப்பாட்டில் எவை இடம் பெறுகின்றன, 'கருவறை வாசம்' எழுதியவர் யார், விஷ்ணுபுரம் புரிந்து படித்தீர்களா, படித்துப் புரிந்ததா, புரியாமலே படிக்கவில்லையா, படிக்காமல் புரியவில்லையா, 'இட்லி வடை' யார், 'தலை பத்து' கவர்ச்சி கன்னிகள் வரிசைப்படுத்தல் என்று கருத்துக் கணிப்பு நடத்தலாமா?

என்னுடைய ஒரு முயற்சி பக்கத்தில் உள்ளது! மேலும் சில ஸ்பார்க்லிட் மாதிரிகளையும் பார்த்துவிட்டு வாக்காளப் பெருமக்களின் மேலான வோட்டை வேண்டவும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு