தாய் - கண்ணன் இரா.
தவமிருந்து
தவித்து
உயிர்மெய்த்
துடித்துத்
தாழாது
துவண்டு- மனம்
தளராது
தாங்கி எனை
தாரணியில்
ஈன்றெடுததாய்!
தன்னலம்
சிறிதளவும்
சிந்தையில் இல்லாது
தனிப்பெரும்
அன்போடு
கண்ணே!
கண்மணியே!
கரும்பே!
கற்பகமே!
முத்தே!
முக்கனியே!
முதலே!
முத்தமிழே!
சித்தே!
சிந்தையே!
சிலையே!
சீரழகே!
சிங்கார மொழிப்
பேசும் என்
கண் நிறைந்த
ஓவியமே!
ஆருயிர்ச்
செல்வமே!
என்றெம்மை
சீராட்டி
வள்ர்த்தாய்!
நல்லறம்!
நற்க்கல்வி!
நற்பண்பு!
நன்நெறி!
நற்ச்செயல்!
நல்லறிவு!
நற்பெயர்!
நல்கிட
நலம் பல
அளித்தாய்!
ஆன்றோரும்
சான்றோரும்
ஆயகலை
பயின்றோரும்
பெருஞ்செல்வம்
கொண்டோ ரும்
அன்பில்
நண்பரும் - எனைப்
போற்றிப்
புகழ்ந்துள்ளம்
மகிழும் வகை
செய்தாய்!
சின்னஞ்சிறு
தவறுகள்
சிறியேன் நான்
செய்தாலும்
சில பல
தவறுகள்
அறிந்தே நான்
செய்தாலும்
இம்மியும்
இதயத்தில்
இறக்கம்
குன்றாது
பாசத்தால்
பரிவோடு
பாவியெனை
நேசித்தாய்.
ஈதனைத்தும்
ஈந்திட்ட நின்றன்
பதமலர்
தொழுது
பணிசெய்து
கிடந்தாலும்
ஏழெழு
சென்மங்கள்
எடுத்தடுத்து
தீர்ந்தாலும்
பட்டகடன்
தீருமோ? - என்றன்
ஆவிதனை
அயராது
காத்தக்கடன்
முடியுமோ?
Dedicated to all Mothers!
என்றும் அன்புடன்,
கண்ணன் இரா.
கருத்துரையிடுக