வெள்ளி, மே 07, 2004

அமுதசுரபி - சிஃபி.காம்

புனை கதை - நீல. பத்மநாபன்: முழுக்க முழுக்க ஒரு விமர்சகன், அல்லது ஒரு திறனாய்வாளன், புனைகதை உட்பட்ட படைப்புத்துறையை எடைபோடு வதற்கும் கதை, நாவல் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி அணுகுவதற்கும் சற்று வேறுபாடு உண்டு. முன்னவருக்கு தன் மன வார்ப்புக்கு-ரசனைக்குத் தகுந்தமாதிரி தன்னிச்சையாகச் சொல்லிச்செல்ல இயலுமென்றால், பின்னவருக்கு - படைப்பாளிக்கு ஒரு விமர்சகனை அதிகமாக அலட்டாத ஓரிரு பிரச்சினைகள், தர்ம சங்கடங்கள் உண்டென்று தோன்றுகிறது.

1) கதைக்கரு தேர்வு, 2) கையாளும் பாணி - இவ்விரண்டில் சோதனையாகவும், சுயம்புவாகவும் நேர்ந்த மாற்றங்கள் - குறிப்பாக இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டி ருப்பதால் வந்த மாற்றம் - உருவத்தில் (form) நிகழ்ந்த மாற்றங்கள், நடையில் (style), கட்டமைப்பில் (structure), கைத்திறத்தில் (Craft) செய்முறை நுணுக்கம் (technique), தொன்மங்களை பயன்படுத் தல்கள் இவற்றில் எல்லாம் நேர்ந்து கொண்டிருக்கும் பரிணாமங்கள் தான் எத்தனை எத்தனை....!

(10-1-2004 -இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் புனைகதை அமர்வில் ஆற்றிய தலைமையுரையிலிருந்து)



நூல் நயம்:
முதல் மழை : ஆர். வெங்கடேஷ்.

ஆசிரியரின் விறுவிறுப்பான ஒன்பது சிறுகதைகள் இம்மூன்றாவது தொகுப்பில் இடம் பெறுகின்றன. கணவனுடன் இருமுறை முயன்றும் சேர்ந்து வாழமுடியாமல் விலகி வரும் மீராவுக்கு உதவ முன்வரும் சுந்தர் அவன் தங்கை ஜெயந்தியின் காதலை ஏற்க முன் வருவதுடன் நூலின் தலைப்புக் கதை சுபமாக முடிகிறது. திருவல்லிக்கேணி மணம் கமழும் இதர கதைகளில் மாறுபட்ட குணநலன்கள் கொண்ட பல பாத்திரங்கள் வாசகரை எதிர் கொள் கின்றனர். இவர்களில் அரையாடை கட்டி அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் சுதந்திர உணர்ச்சிகளை வழிநடத்திய காந்தி உண்டு. பத்திற்குப் பத்து கூடத்தை விட்டு வெளியே போகாமல் முப்பதாண்டு குடும்பம் நடத்தும் அம்மாவின் திருப்தியான வாழ்க்கையால் தெளிவு பெறும் மகள் ரம்யாவும் உண்டு; ஏன், சகுந்தலா ஜெயராமன் வீட்டில் தன் திருவடி பதித்த ஸ்ரீராமன் உண்டு. சுற்றி நடப்பதை சுவாரஸ்ய மாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது தூதர் ஆஞ்சநேயரும் கூட உண்டு.
பக் : 128 ரூ.45/- மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், 32/9, ஆற்காடு சாலை, சென்னை-24.
இந்த வார கல்கியிலும் சிஃபிராயரின் புத்தகத்திற்கு அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள்.


வெங்கடேஷின் ஐரோப்பா பயணதிட்டம் குறித்த கட்டுரையும், மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் புத்தகம் குறித்த சா.கந்தசாமியின் பதிவும், சில நிகழ்வுகளும் சலனங்களும் என்று சல்மாவில் ஆரம்பித்து பல நிகழ்வுகளை பார்க்கும் ரவி சுப்ரமணியனின் விமர்சனமும், வெங்கட் சாமிநாதன் 'அணங்கு' என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பிரீதம் சக்கரவர்த்தி, தனிநபராக நிகழ்த்திய கண்ணாடி நாடகத்தை மட்டும் பாராட்டிய அலசலும் படிக்க வேண்டியவை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு