சனி, மே 01, 2004

'அருள்' விமர்சனம்

மீனா :

காமெடி: ஒரு கட்டத்தில் தன்னையும் ஜோவையும் இணைத்து அப்பா தவறாகப் பேசிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்த இடத்திலேயே ஜோவைத் திருமணம் செய்துகொள்கிறார் விக்ரம்.

மகிழ்ச்சி: வில்லன் துளசியை எதிர்த்து இவர் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் மக்கள் நேரடியாகவும், காவல்துறை மறைமுகமாகவும் ஒத்துழைப்புத் தருகிறார்கள்.

தெரிந்த விஷயம்: விக்ரமை நேரடியாகப் பழிவாங்க முடியாத (வில்லன்) துளசி அவரது தம்பியையும், மாமாவையும் கொன்றுவிடுகிறார்.

தெரியாத விஷயம்: (கொத்தாளத் தேவன்) பசுபதி விக்ரம் குடும்பத்தினரை மிரட்டி அசிங்கமாகப் பேசுகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் சண்டையில் பசுபதி இறந்துவிடுகிறார்.

ஆச்சரியம்: டாக்டர் சரத்பாபு, பசுபதி இறந்ததை வெளியே சொல்லாமல் ஆஸ்பத்தரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மேலும் இரண்டு நாட்கள் கழித்து, பசுபதி இறந்தது குடியினால் தான் என்றும் சர்டிபிகேட் கொடுத்துவிடுகிறார்.

சோகம்: 'மன்மதா ராசா' சாயா ஒரே ஒரு பாட்டுக்கு விக்ரமுடன் சேர்ந்து ஆடிவிட்டுப் போகிறார்.

நன்றி: முழுவதும் படிக்க தமிழோவியம்.காம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு