ஞாயிறு, மே 02, 2004

ஆச்சிமகனின் கேள்விகள்

கற்றலின் இனிமை:

கவிதைத் துறையில் மரபுக் கவிதை காணாமல் போனதை – இல்லையில்லை கொன்றழிக்கப் பட்டதை – நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களில் நானும் ஒருவன். புதுக் கவிதை என்ற பெயரால் தமிழை அழித்த இவர்கள் கூறுவது என்ன? எதுகையும் மோனையும் இன்புறக் கூடி அழகிய நடையில் கவிதை வடிப்பது குற்றமாம்.

மரபு சார் கவிதைக்கு முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டது. கண்டதைக் கிறுக்கி விட்டுக் கவிதை என்று பெயர் சூட்ட முடியவில்லை. இலக்கணம் படித்து எழுதுதல் கடினம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள். கல்லடுக்கி வீடு கட்டுதல் போல சொல்லடுக்கிக் கவிதை கூற முயன்றார்கள். அடுக்கும் பயிற்சியில் தோற்றுப் போய்க் கவிதை மரபையே உடைத்து நொறுக்கி விட்டார்கள்.

கற்பனை நயம் போதுமாம் – கருத்தாழம் போதுமாம் – அழகிய மொழிநடை மட்டும் வேண்டாமாம். வாலறுந்த நரி உங்கள் நினைவுக்கு வந்தால் அது என் குற்றம் அல்ல. அழகிய மொழிநடையிலான மரபுசார் கவிதைகள் மட்டும் தொடர்ந்திருந்தால் தமிழும் தமிழனும் மென்மேலும் வளர்ந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.

முழுவதும் படிக்க: எனக்குப் புரியவில்லை..

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு