திங்கள், மே 03, 2004

ஞானியைக் கேளுங்கள் - மரத்தடி

Yahoo! Groups : Maraththadi Messages : Message 14674: "படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் நமது சமூகத்துக்கு தேவைப்படுபவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். நல்லவர்கள் முட்டாளாக இருக்கலாம். பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். புத்திசாலிகளாக மட்டும் ஒருத்தர் இருப்பதை நான் கொண்டாட விரும்பவில்லை. ஏனென்றால் பல தருணங்களில் அந்த புத்திசாலிகள் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். முட்டாஅளாஅக இருக்கும் நல்ல மனிதர்களை புத்திசாலிகளாக மாற்ற முடியும். ஆனால் அயோக்கியர்களாக் இருக்கும் புத்திசாலிகளை நல்லவர்களாக மாற்றுவது மிகக் கடினம். எனவே அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள். எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.
.....
கமிட்மெண்ட் இருக்கும் ஒரு படைப்பாளி, ஒரு கட்டத்தில் தவறாக எழுதியிருந்தாலும் பார்வை மாற்றம் வந்து நல்ல படைப்புகளை எழுதத்தொடங்கிவிட்டால், மறுபடியும் பழைய பாணியில் எழுத மாட்டார். எடுத்துக்காட்டாக மறைந்த நாடகாசிரியர் கோமல் சுவாமிநாதன் அசட்டுத்தனமான சபா நாடகங்களை எழுதி வந்தவர்தான். னால் அது பற்றிய பார்வை மாற்றம் அவருக்கு வந்த பிறகு, வேறு விதமான நாடகங்களை முயற்சித்தாரே தவிர, பழைய குப்பைக்கு திரும்பச் செல்லவில்லை."

நன்றி: மரத்தடி மடலாடற் குழு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு