வியாழன், மே 06, 2004

கில்லி - படத்தின் மெஸேஜ் என்ன?

1. கோக் நிறைந்த பாட்டிலை எவ்வளவு வேகமாக வீசினாலும் காட்ச் பிடிக்கலாம்; கோக் காலியான பாட்டிலை பிடிக்க எத்தனித்தால் மணடை உடைய வாய்ப்புண்டு.

2. யாராவது கொம்பு சீவி விட்டாலும், சாந்தமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்; அவர்கள் உங்களை ஏத்தி விடுவது, அவர்களின் நன்மைக்காகவே.

3. தமிழகத்தில் மதுரையில் இருந்து சென்னை வரும் சாலைகளில் போக்குவரத்து அதிகம் கிடையாது; வேகமே விவேகம்.

4. மனதுக்கு விருப்பமானவள் பார்த்தால் மட்டுமே, விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க முடியும்; அப்பா, அம்மா, தங்கச்சி, ரசிகன், நண்பர்கள் ஆகியோரை விடக் காதலியோ அல்லது நண்பனின் காதலியோ (இது 'பர்தேஸ்' பார்த்ததால் ஏற்கனவே பதிந்து போன மெஸேஜ்) பார்வையாளராக இருந்தாலே கபடியில் ஜெயிக்க முடியும்.

5. வெளிநாடு டூர் செல்லும்போது, சவுரவ் கங்குலி, டெண்டுல்கர் தவிர புது மாப்பிள்ளை சேவாக் போன்றோரும் தங்கள் மனைவியையோ, காதலியையோ அவசியம் அழைத்துச் சென்றால், பலன் நிச்சயம்.

6. Caller-ID இல்லாத செல்பேசிகளை வைத்துக் கொண்டு நண்பர்களோடுப் பேசவேண்டும்; காதலியை காப்பாற்றத் தோழர்கள் உதவும்போது இது வில்லன்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

7. பெண்களுக்குப் பாதுகாப்பான அமெரிக்க வாழ்க்கையை விட, திறந்த வெளியில், குளிரடிக்கும் இரவில், போர்வை கூட இல்லாமல், கலங்கரை விளக்கத்தில் நாடோடியாக இருப்பதே பிடிக்கிறது.

8. போலீஸ் க்வார்ட்டசில் கூட ரவுடிகள் அதிகம்; காவலர்கள் நிறைந்த குடியிருப்பில் கூட இரவில் தனியாக பொதுத் தொலைபேசி பயன்படுத்த முடியாது.

9. கபடி ஆடுபவர்கள் அனேகமாக வேலை இல்லாத வெட்டிப்பசங்க.

10. மந்திரியாக இருந்தால் மகனுக்கு உதவ முடியாது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு