அன்னையர் தினம் எமக்குத் தேவையா? - தோழியர் வலைப்பதிவு
நளாயினி தாமரைச்செல்வன்: "தாய்மையின் வாழ்வு அலங்கோலமாகி சீழ் ஒழுகி நாறுகிறது. எமக்கெதற்கு அன்னையர் தினம்? தங்கமுலாம் பூசி தாய்மையை போற்றித் துதிக்கிறோம் என மினுக்க நினைக்கிறோம். வேண்டாம் எமக்கு அன்னையர் தினம். ஒரு பெண் திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்து விட்டால் அவளை தள்ளி வைக்கிறோம். நெல்மணிகளை தொண்டைக்குள் செருகி சிசுக்கொலை. அச்சிசுவை கொலை செய்யத்தூண்டியது எது?
இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள்? அன்னை தாய்மை எல்லாம் வெறும் ஏட்டளவில் தான். "
தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. கைதட்டுவதோடு நிற்காமல், ஏதாவது செய்யத் தோன்றுகிறது. பார்ப்போம்.
சந்திரலேகா: "கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாததால் தாயைப் படைத்தார் என்று ஒரு யூதப் பழமொழி கூறுகிறது. கடவுள் எவ்வாறு வேறுபாடின்றி உயிர்களை இடைவிடாது என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாரோ அப்படியே தாயும் தனது பிள்ளைகளை என்றும் ஒரே மாதிரி நேசிக்கிறாள். இருவரின் அன்பிலும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, பிரதி பலனை எதிர்பார்க்கும் தன்னலமும் இல்லை.
எமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்க்குரிய மதிப்பைக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் தேவையற்றது. மற்றைய பல பண்பாட்டினர் போலன்றி எமது பண்பாட்டில் தாய்மாரின் பங்களிப்பு அளவற்றது. தமது இன்பங்களை முற்றாகப் புறக்கணித்து பிள்ளைகளின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது. "
தமிழ் இந்துக்களின் வழக்கம், சரித்திர தகவல்கள், தாய் குறித்த கவிதைகள், தற்போதைய நடைமுறை என்று பல விஷயங்களையும் கோர்வையாகத் தந்திருக்கிறார். பயனுள்ள பதிவு. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.
கருத்துரையிடுக