வியாழன், மே 13, 2004

தேர்தல் சிதறல்

தினகரனை தோற்கடித்த ஜே.எம். ஆருண்:

பெரியகுளம்: மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பெரியகுளம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஜே.எம். ஆருண் வென்றார்.இந்தத் தொகுதியில் இரு முறை வென்று எம்.பியான தினகரனை 21,155 வாக்குகள் வித்தியாசத்தில் ஆருண் தோற்கடித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உ..பி. தோழியான சசிகலாவின் அக்காள் மகனான தினகரன் எப்படியும் வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து தினகரனும் ஆருணும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும், பின்னுமாக இருந்தனர். ஆனால், கடைசி கட்ட வாக்குகள் எண்ணப்படும்போது தினகரனை பின்னுக்குள் தள்ளி ஆருண் வென்றுவிட்டார்



    வெற்றி பெற்றவர்கள்:
  • வினோத் கன்னா - பிஜேபி - குர்தாஸ்பூர்
  • தர்மேந்திரா - பிஜேபி - பிகானர்
  • ராஜ் பப்பர் - எஸ்.பி - ஆக்ரா
  • ஜெயப் பிரதா -எஸ்.பி - ராம்பூர்
  • சுனில் தத் - காங். - மும்பை (வடமேற்கு)
  • பங்காரப்பா - ??? - ஷிமோகா
  • நவஜோத் சிங் சித்து - அகாலி தள் (பிஜேபி கூட்டணி) - அம்ரிட்ஸர்
  • ஈராக் சணடையின் தாக்கங்கள் என்று சொல்லமுடியாது. 'கோவிந்தா எலெக்ஷனில் கோவிந்தா' என்றும் நம் பத்திரிககள் எழுத முடியாது. மத்திய பெட்ரோலியம் அமைச்சர் ராம் நாயக்கை கோவிந்தா 48,271 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். மும்பை மக்கள் சினிமாகாரர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ரோஜா இங்கு நின்றிருக்கலாம்!
  • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 64 அடி பாய்கிறது. 1999-இல் சோனியா 314,000 வாக்கு வித்தியாசத்தின் வென்ற அமேதியை ராகுல் 3,90,000 வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

    ராஜ்ய சபாவுக்கு முயற்சிக்கப் போகிறவர்கள்:
  • முரளி மனோஹர் ஜோஷி - அலஹாபாத் (அமிதாப் கூட நிற்காதபோதேத் தோற்றுவிட்டார்)
  • போன மத்திய அமைச்சரவையில் இருந்த முஸ்லீம் அமைச்சரான சையத் ஷாநவாஸ் ஹுசேன் தோற்றுப் போனார்.
  • மனோஹர் ஜோஷி தோல்வி: மும்பையில் (வடமத்திய) போட்டியிட்ட, கடந்த லோக் சபாவின் நாயகர் மனோஹர் ஜோஷி 8,615 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
  • துணை சபாநாயகர் பி.எம் சயீத்தும் தோற்றுவிட்டார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வென்று வரும் இவர் 71 வாக்கு வித்தியாசத்தில் ஜனதா தள வேட்பாளரிடம் லக்ஷத்வீப்பை இழந்திருக்கிறார். 1967 முதல் பத்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
  • ஹசாரிபாக் - யஷ்வந்த் சின்ஹா தோல்வி.
  • ஜலந்தர் - ஐ.கே.குஜ்ராலின் மகன்
  • ஜலோரில் முன்னாள் மத்திய மந்திரி பூடா சிங் (இவர் இன்னும் காங்கிரஸா?)
  • பூபேன் ஹஸாரிகா - பிஜேபி - கௌஹாடி
  • ஸ்ம்ரிதி இரானி - பிஜேபி - சாந்தினி சௌக் (A case of counting the chickens before they are hatched - மீனாக்ஸ்)
  • பல்ராம் ஜாக்கர் - காங். - சுரூ (ராஜஸ்தான்) - இன்னாள் சபாநாயகர்களேத் தோற்றுவிட்டார்கள். இருந்தாலும் காங்கிரஸ் ஜெயிக்கும்போது, இவர் மட்டும் தோற்றுவிட்டாரே!?
  • கிரிஜா வ்யாஸ் - காங். - உதய்பூர் - ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளரும் தோல்வி; எல்லாம் அசோக் ஜெலாட்டின் திட்டமிட்ட பழிவாங்கல் என்று அன்றே டைம்ஸ் சொல்லிவிட்டது.
  • நஃபீஸா அலி - காங். - தெற்கு கொல்கத்தா (முன்னாள் உலக அழகி இவர்; மௌஷுமி சாடர்ஜி என்ன ஆனாங்க?)
  • தர்பங்காவில் கீர்த்தி ஆசாத் பின்னடைவு (முடிவு என்னாச்சு?)



ஜெ. மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு
எனக்கு புதுக்கோட்டை கிடையாது, தமிழகத்தில் எங்கும் போட்டியிடக் கூடாது, பாஜக பிரசாரத்திற்குக் கூட நான் வரக் கூடாது, நான் கூட்டத்திற்கு வந்தால் அதிமுகவினர் வரக் கூடாது என்று அடுத்த கட்சியின் விவகாரங்களில் தலையிட்டு வெற்றி வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டது அதிமுக. நான் கூட்டத்திற்கு வந்தால் நாங்கள் வர முடியாது என்று அதிமுக அமைச்சர்கள் எங்களது கட்சித் தலைமையை மிரட்டினார்கள். அம்மா திட்டுவார் என்று காரணம் கூறினார்கள்.

எல்லாம் நானே என்ற அகம்பாவ உணர்வுடன் அதிமுக தலைமை செயல்பட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜகவுக்குக் கொடுக்காமல் வேண்டும் என்றே தோற்கக் கூடிய தொகுதிகளை ஒதுக்கியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவராகவே முன்வந்து அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். அதை முறையாக பயன்படுத்தவில்லை. ரஜினி புகைப்படத்தைப் பயன்படுத்திய அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கினார்கள். இதுபோல நடந்தால் எப்படி ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஓட்டு கேட்பார்கள்?


டைம்ஸ் ஆஃப் இந்தியா:
கூட்டணி - முண்ணனி
பிஜேபி 184
காங். 215
பிறர் 140

போன லோக்சபாவில்:
தேசிய முண்ணனி: 298
காங்.: 135
பிறர்: 110

கர்நாடகா (224/224)
கூட்டணி - முண்ணனி
பிஜேபி 84
காங். 65
பிறர் 75

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு