வெள்ளி, மே 14, 2004

மவுஸ் போன போக்கில்

--rejectioncollection.com--: குமுதம் விகடனுக்குக் கதை, கவிதை அனுப்பி அவர்கள் வருந்தியிருந்தால், நமது வருத்தத்தை இங்கு வந்து பகிர்ந்து கொள்ளலாம். சில சமயம் ஆறு மாசம், ஒரு வருஷம் வரை காத்திருந்து பிறகு 'மன்னிக்கவும்' என்று ஒரு கடித்தத்துடன் வீட்டுக்கு வந்து முகத்தில் அடிக்கும் என் போன்ற எழுத்தாளர்களுக்கான வலைத்தளம் இது. எப்படி நிராகரிப்பை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்வது, எவ்வாறு துயரத்தில் இருந்து மீள்வது, தனது எழுத்தை எப்படி பட்டைதீட்டிக் கொள்வது என்பதற்கு ஊக்கமும் டிப்ஸுக்ளும் நிறைந்த தளம்.

அதுதான் இப்பொழுது வலைப்பதிவும் மின்னிதழ்களும் இருக்கிறதே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.


The Bicycle Forest: அமெரிக்கர்கள் (பொதுவாக வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு) விநோதமாக எதையாவது செய்து கொண்டிருப்பதற்கு ஆசையாக இருக்கும். க்ளென்னும் ப்ரெண்ட்டும் சோபாவைத் தூக்கி சைக்கிளில் வைத்துக் கொண்டு நகர்வலம் வருகிறார்கள். ஹாய்யாக சோபாவில் சாய்ந்த மாதிரியும் இருக்கும்; சைக்கிளும் ஓட்டிய மாதிரியும் இருக்கும். வழியில் நிறுத்திய போலீஸ், அன்று பெய்த மழை, இணையம் மூலம் சந்தித்த புதிய நட்புகள் என்று கனடாவை சோபா-சைக்கிள் மூலம் வலம் வந்ததை புத்தகமாக எழுதி வருகிறார்கள்.

Insects on the Web: வீட்டில் ஏதாவது புழு பூச்சி தென்பட்டால் உடனடியாக கிடைக்கும் வஸ்துவை வைத்து அடித்து விடுவேன். அது என்ன ஜந்து, எவ்வளவு ஆபத்தானது, எவ்வாறு அதை அழகு பார்த்திருக்கலாம், எதனால் என் வீட்டுக்குள் வந்தது, எப்படி பராமரிக்க வேண்டும் என்று சொல்லுகிறது இந்த இணையத் தளம். பட்டாம்பூச்சி முதல் பூரான் வரை சுவையான தகவல்களுடன் அறிவியல் சமாசாரங்களையும் தெளிவாக கொடுக்கிறார்கள். நம்ம கலாசாரமும் அவர்களின் வாழ்வுமுறைக்கும் உள்ள ஒற்றுமைகளை சொல்வதுதான் எங்கள் குறிக்கோள் என்று சொல்கிறார்கள்.

Urban Legends Reference Pages: (Ford's SportKa): இந்த விளம்பரம் அமலாவுக்கும் மனேகா காந்திக்கும் ரத்த கொதிப்பை வரவழைக்கும். 'நான் பொல்லாதவன்' என்று பாடுபவர்களுக்கான காரின் விளம்பரம். பூனை ஒன்றின் தலையைக் கொய்தும், எச்சம் போட வரும் புறாவை விரட்டுவதாகவும் இரு விளம்பரங்கள். காருண்யவாதிகளின் ஆட்சேபத்திற்கு இணங்க, பூனை விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால், ஜெயலலிதா 'பணப்புழக்கம் இல்லை' என்று கிளப்பிவிட்டது போல், இணையத்திலும் இளைஞர்களிடமும் பரவலாக புகழடைந்திருக்கிறது இந்த 'ஸ்போர்ட்ஸ்கா'(ர்).

Pocket Calculator's Vintage Boombox and Ghetto Blaster Museum: டூ - இன் - ஒண் என்று நாம் அழைக்கும் டேப் ரிகார்டர்களை அமெரிக்கர்கள் பூம்-பாக்ஸ் என்பார்கள். இன்றும் ட்ரெயினில் செல்லும்போது ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிலர் இவற்றை கை கொள்ளாமல் வைத்துக் கொண்டு ராப் இசையை ரசிப்பதை கேட்கலாம். (ரொம்ப முறைத்துப் பார்த்தால், அவ்ரை ஏளனப்படுத்துவதாக நினைத்து பின் விளைவுக்கு ஆளாகலாம்!)

நேற்று, இன்று, நாளை என்று எல்லாவகையான ஒலிப்பதிவான்களின் பட்டியல், எப்படி ரிப்பேர் செய்வது போன்ற செய்முறை விளக்கம், என்று மினி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள்.

The English-to-American Dictionary: இந்தியாவிலும் லண்டனிலும் சாதாரணமாக பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு. அமெரிக்க வழக்குச் சொல்லை அறிமுகப்படுத்தும் இணையத்தளம். அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்கள் எதை எப்படி கேட்க வேண்டும், எந்த சொல் ஆகாது, என்றெல்லாம் வகுப்பு எடுப்பார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

The Top 10 Weirdest Things in Space: Weird and strange things in theuniverse: அதிகம் அறியப்படாத பிரபஞ்ச லீலைகளின் தலைபத்து பட்டியல். 2001இல் கணிக்கப்பட்டிருந்தாலும், இன்றும் எனக்குப் புதிராக இருக்கும் விஷயங்களுக்கு குழப்பமில்லாத முன்னுரை கொடுக்கிறார்கள். கருங்குழி முதல் ஹைப்பர்-நோவா வரை வானியலில் உள்ள முக்கிய கூறுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வேற்று கிரக வாசி எங்கே இருக்கிறார்?

Smilies in outer space: நிலவைப் பெண் என்றார்கள். குளிர்ச்சிக்குக் குறியீடு என்றார்கள். வளர்பிறை, தேய்பிறை பார்த்து நல்ல நாள் குறித்தார்கள். இருபத்தியேழு நட்சத்திரங்களையும் மணமுடித்தார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை கால் பதிக்க வைத்தார்கள். யாரோ வந்து ஸ்மைலி பொம்மையும் போட்டிருக்கிறார்கள். யார், எப்போது, எதற்காக இந்த புன்சிரிப்பை, எந்த யா?த அரட்டையில் போட்டார்கள் என்று சொல்லவில்லை!

Date a piano (it's not what you think): பியானோவை கணக்கு பண்ணலாம் வாருங்கள் :-)

நன்றி: தமிழோவியம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு