புதன், மே 26, 2004

'அச்சாணி'

மூடப்படும் தேவாலயங்கள் | பாஸ்டன் க்ளோப் தலையங்கம்

SOURCE: Data analysis by Bill DedmanTamil Christian Songs:
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா....

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை
நானென்ன சொல்வது

2 கருத்துகள்:

சர்ச்கள் மூடப்படுவது பற்றி என்னிடம் அபிப்ராயம் இல்லை. நான் சொல்ல வந்தது நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் பாடலைப் பற்றி. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்பத்தான் SOTD ஆவணத்தை எல்லாம் நோண்டிக் கொண்டிருந்த போது இந்த பாட்டு கிடைத்தது. கேட்டு விட்டு இங்கே வந்தால், முழு லிரிக்ஸ். அற்புதமான பாட்டு. பாடகி ஸ்வ்ரணலதாவின் அப்பா இறக்கும் தருவாயில், மகளிடம் இந்த பாட்டை பாடச் சொல்லி கேட்டாராம். பாட்டை கேட்கும் போதே மனசை என்னமோ செய்யும். sj மாதிரி இன்னொரு பாடகியை பார்க்க முடியுமா என்பது டவுட்டுதான். யாருக்காவது கேக்கவேணும் போல் இருக்கும் என்பதற்காக இணைப்பு இதோ http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/maadhaa.rm

கூகிளில் 'maadha' என்று தேடியதால் கிடைக்கவில்லை போல :( (maadhaa என்று கொடுத்துள்ளார்). சுட்டி: http://www.dhool.com/sotd2/130.html சரவணன் இப்பொழுது எங்கே எழுதுகிறார்...? ஒவ்வொரு பாடலையும் அணு அணுவாக ரசித்து பேக்கிரவுண்ட் கொடுத்து சுவையாக்கியுள்ளார்.

'அன்பென்னும் மழையிலே' இன்னுமொரு மயக்கும் தேவ கானம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு