போன வாரத்தில் என் மனதில் நின்ற இணையச் செய்திகள்
22,000 பேர்கள் சாப்பிடக்கூடிய உலகின் மிகப்பெரிய couscous (??) செய்து அல்ஜீரியா சாதனை படைத்துள்ளது. நூறு ஆடுகள், ஒன்றைரை டன் காய்கறிகள், 2600 கிலோ semolina (??) கொண்டு செய்யப்பட்டது. (BBC)
எழுதி முடித்தவுடன் அச்சிட்டு புத்தகமாக வெளிக் கொணர்ந்து விடலாம். நியு ஜெர்ஸியில் இருக்கும் Bookends என்னும் கடைக்கு ஃப்ளாப்பியைக் கொடுத்தால், பதினேழு நிமிடங்களில் தயார். (NYT)
இணையத்தின் ஆரம்ப காலத்தில் வாசக சுதந்திரம் கிட்டியது; அனைத்து உலகப் பத்திரிகைகளும் கிடைத்ததால். அடுத்து, படைப்பாளிகளுக்கு; வலைப்பக்கம், வலைப் பதிவு போன்றவற்றால். கூகிளின் விளம்பர தொழில்நுட்பம் மூலம் "freedom of the press is guaranteed only to those who own one" என்னும் பொன்மொழி பொய்யாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. (NYT)
இணையத்தின் மூலம் அதிகாரபூர்வமாக புதிய படங்களை பார்க்கலாம்; வலையிறக்கலாம். மாதத்திற்கு 12.95 டாலர் மட்டும் கொடுத்தால் போதும். (இணையமெங்கும்)
கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறுவதற்கு, சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும். வருடத்திற்கு இருபத்தி ஐந்து மணி நேரமாவது பொதுத் தொண்டு புரிந்தால்தான் டிகிரி கையில் கிடைக்கும் என்பதை சட்டமாக்க, பென்சில்வேனியா எம்.எல்.ஏ மைக்கேல் மசோதா கொண்டு வந்துள்ளார். (NYT)
1981-இல் பதவியேற்றவுடன் ரோனால்ட் ரேகன் வருமான வரியைப் பெருமளவு குறைத்தார். அதன் பிறகு அவரது பதவிக்காலம் முடியும் வரை குறைத்த வரியை ஏற்றினார். (Democrats)
பெங்களுரை விட சென்னையில் விலைவாசி அதிகம். லாஸ் ஏஞ்சலீஸை விட நியு யார்க்கில் வசிக்க அதிக செலவாகும். பே ஏரியாவை விட சிகாகோவில் குடியிருப்பதற்கு பணம் நிறைய வேண்டும். (இணையமெங்கும்)
ஜூன், 12, 1975: தேர்தலில் ஊழல் புரிந்த குற்றத்திற்காக இந்திரா காந்தியை ஆறு வருட காலத்திற்கு எந்தப் பதவியும் வகிக்க கூடாது என தீர்ப்பாகிறது. (இந்த நாள்... அந்த வருடம்: BBC)
ஏழு வருடக் குழந்தைகளினால் பதியப்பட்ட பயனுள்ள வலைப்பதிவுகள். (BBC)
குணப்படுத்தக் கூடியதாக இருந்தாலும், 2000-த்தில் மட்டும், 600,000 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. (BBC)
ரேகனுக்கு இரங்கல் கூறும் வாக்கெடுப்பு விவரம் - 355:0;
கம்யூனிசத்தை அழிப்பதிலும், உலகத்தின் அனைத்து மூலைகளிலும் சுதந்திரம் பரவ பாடுபட்டதற்கும் பாராட்டு வாகெடுப்பு - 375:0;
அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 435. (Sun Papers)
வாஷிங்டன் நகர ரெயில்வே அறிவிப்பு: ரேகன் இறந்ததன் நினைவாக, இன்று வழக்கம் போல் வண்டிகள் ஓடும். (In remembrance of President Reagan, we will be operating on our normal schedule.)
குடியரசு கட்சியின் அவைத் தலைவர் மேல் குற்றச்சாட்டு: தேர்தல் நிதி கொடுத்த நிறுவனத்தை சட்டங்களிலிருந்து விலக்கு கொடுத்தார்; மறைத்து, கடத்தி வைக்கப்பட்டிருந்த டெக்ஸாஸ் (டெமொக்ராடிக்) எம்.எல்.ஏ.க்களை கண்டுபிடிக்க தேசிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டது. (இணையமெங்கும்)
சொந்த வீட்டைக் கட்டித்தர லஞ்சமாக அரசு ஏலங்களை கொடுத்த புகாரில், கனெக்டிக்ட் மாகாண கவர்னர் மீது impeachment (தமிழில் என்ன?) நடவடிக்கை ஆரம்பம். (இணையமெங்கும்)
சவூதியில் மேலைநாட்டுக்காரர்கள் கூட பர்தா போட ஆரம்பித்துள்ளார்கள். ஷாப்பிங் போவதற்கு அஞ்சுகிறார்கள். உலகின் மிகப் பணக்கார நாட்டில் பிச்சை எடுக்கும் ஏழ்மை எட்டிப் பார்க்கிறது. (கதை அல்ல நிஜம்: BBC)
டான்சானிய நாட்டில், மனிதர்களை சாப்பிடும் சிங்கத்தைக் கொல்ல, சொந்த மனைவியின் உடலுக்கு விஷம் வைத்தார். (BBC)
அனில் அம்பானி ராஜ்யசபா எம்பி ஆகிறார். சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் உபியில் நிற்கிறார். (இணையமெங்கும்)
தேசபந்து சி.ஆர்.தாஸ் நினைவு நாள் - ஜூன் 16 (எனது நாள்-காட்டி)
நியு ஹாம்ப்ஷைர் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் பதவி விலகினார். அரசு சார்பாக நடந்த மனையியல் வன்முறை (domestic-violence ?) கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (NYT)
விம்பிள்டனில் இனி லீனக்ஸ் கோலோச்சும். பெக்கர் முதன்முறையாக வென்றபோதுதான், விம்பிள்டனில் கணினி எட்டிப் பார்த்திருக்கிறது. (BBC)
அழும் ஒட்டகத்தின் கதை ('The Story of Weeping Camel') என்னும் பார்க்க வேண்டிய படம், ஸ்டீவன் ஸ்பில்பெர்க்+டாம் ஹான்க்ஸ் இருக்கும் 'தி டெர்மினல்' படத்துடன் அமெரிக்காவெங்கும் வெள்ளித் திரைகளில் வெளியாகிறது. (Boston Metro)
தாகம் ('Thirst') என்னும் குறும்படமும் நிறையப் பேசப்படும். இந்தியா, ஜெர்மனி, பொலிவியா என்று மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று பிரச்னைகளுக்கும் உள்ள தண்ணீர் தனியார்மயமாக்கல் திரியை கொளுத்திப் போடுகிறார்கள். (IMDB)
Moroccan author Tahar Ben Jelloun's novel, This Blinding Absence of Light, won the 100,000 euro International Impac Dublin Literary Award 2004. (BBC)
கிஸ்வாஹிலி மொழியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மற்றும் விண்டோஸ் வெளிவரும். அதிக அளவில் தாய்மொழி பேசும், ஆனால் குறைந்த அளவில் கணினி ஊடுருவிய மொழிகளில் இனிமேல் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்தும் என்று அறிக்கை. (BBC)
கருத்துரையிடுக