கல்கியில் கவர்ந்தவை
எஸ்.வி. சேகர்: "கருணாநிதிக்கு 'பசு' என்றாலே பிடிக்காது? ஏன் தெரியுமா?"
"அது அம்மா... அம்மா... என்று குரல் கொடுக்குதே!"
-சமீபத்தில் அதிமுக-வில் சேர்ந்ததன் விளைவு.
வலைபாயுதே:
பாதை - ஆனந்த் ராகவ்: ஏமாற்றத்தின் எதிரொலியாய் வார்த்தைகள். அவரின் இயல்பு கொஞ்சம் மாறிப் போய்விட்டது. செல்வத்துக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் உபதேசிக்கிறார். வீடு திரும்பியதும் ஈசி சேரில் சாய்ந்து கொண்டு பிண்ணனியில் சங்கீதம் ஓட, புத்தகத்தில் ஆழ்ந்து போய்க் கிடக்கிறவர், அடிக்கடி அவனை விசாரித்துக் கோபிக்கிறார்.
மேஜையில் பரப்பிய காகிதங்களிடையே, அவை பறக்காமல் இருக்க வைத்த ஒரு பெரிய பேப்பர் வெயிட் போல் சந்தானம் இருந்தார்.
பிட்டா படிங்க
'கரகர' கவியரங்கம் - விஜயகாந்த் (கற்பனை):
'அரை வேக்காடு' - தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!
'டாக்டர்' - இங்கிலீஷ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!
'அரசியல்' - தமிழகத்துல என்னைப் பிடிச்சுட்டிருக்கிற வார்த்தை!
திருக்குறள்ல 1330 - குறள் இருக்கு!
அகநானூறு 400 பாட்டு இருக்கு!
ஐங்குறுநூறுல 500 செய்யுள் இருக்கு!
'கஜேந்திரா'வுல 5 பாட்டு இருக்கு!
அதுல 3 டூயட்!
இப்ப நான் போயட்!
பொறாமைப்படு - கல்கி கட்டுரைகள்:
நம்முடைய சொந்தப் பெருமை மட்டுமல்ல. பிறருடைய சிறப்பைக் கூட நம்முடையதென நினைத்துக் கொண்டு சில சமயம் சந்தோஷமடைகிறோம். "நான் நேரில் பார்த்திருக்கிறேன்" என்ற பெருமைப் பேச்சைக் கேளாதவர் யார்? பார்த்தது மகாராஜாவின் தர்பாராயிருக்கலாம்; தாஜ்மஹாலாக இருக்கலாம்......
ஒரு குரங்கு மட்டும் யானையின் மேலேறியும், இன்னும் பலவிதமாகவும் விளையாடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி அந்தக் குரங்குக்கிருந்த கர்வத்தைப் பார்த்து நான் மிகவும் வெட்கமடைந்தேன். அந்தப் பொல்லாத குரங்கு, யானையின் முதுகில் நின்று கொண்டு, மற்ற குரங்குகளைப் பார்த்துக் கெக்கிலி கொட்டிச் சிரித்தபோது..... முதல் வகுப்பில் ரயில் பிரயாணம் செய்பவன் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைப் பார்ப்பது போலவும்.....
மனிதர்களுக்காகட்டும் மிருகங்களுக்காகட்டும், பிறருடைய பொறாமையைப் போல் மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை. பிறருடைய பொறாமையைக் கிளப்ப முடியாவிடில், அதைப் போல் துயரந்தருவதும் வேறு கிடையாது! ஆகவே உங்களுக்கு சிநேகிதர்கள் வேண்டுமானால், மற்றவர்களைக் கொண்டு உங்கள் காரியங்களை முடித்துக் கொள்ள வேண்டுமானால், பொதுவாக உலகில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், 'பொறாமைப் படுங்கள்' என்று சொல்வேன்.
குடைக்குள் மழை: மற்ற நடிகர்களைப் பற்றி, மூச்! யார் கண்டது? படத்தில் இவர்கள் இருவர் மட்டும்தானோ என்னவோ?
நன்றி: ஜூலை 7 2004 கல்கி
14 yrs liyeevaa ...அடப்பாவீ ;-)
சொன்னது… 7/15/2004 01:49:00 PM
நல்ல இடத்திலே காமெண்ட் கொடுக்கறீரு :P
சொன்னது… 7/16/2004 05:14:00 AM
கருத்துரையிடுக