செவ்வாய், ஜூலை 13, 2004

சிறுகதைப் போட்டியில் சொக்கனுக்கு முதல்பரிசு

பாராவின் பாராட்டு: "ஒரு மகிழ்ச்சியான செய்தி. கனடா கலை இலக்கியத் தோட்டம் - காலம் சிற்றிதழ் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் சொக்கனுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. (இலைகள் என்ற சிறுகதைக்காக.)"அன்றைய ராகாகியில் சிறுகதை வந்தவுடன் நடந்த பின்னூட்டங்கள்:

நாகா,

இலைகளும் அதன் வேலையில் ஆழ்ந்திருக்கும் metaphor நன்கு புரிந்தது. அதே மாதிரி "கணினி", "கார்", "அலுவலக மேலதிகாரி", "தொலைபேசி" என கதையில் வந்த மற்ற தற்கால பொருட்களுக்கு அல்லது "பீதி", "உல்லாசப் பயணம்" போன்ற அனுபவங்களுக்கும் வேறு அடையாளங்கள் கொடுத்திருக்கலாம்.

அவன் அவளது தாடையைத் தொட்டு நிமிர்த்தினான், 'நீ இந்த வீட்ல சந்தோஷமா இருக்கியா இல்லையா ?' என்றான் நேரடியாய், 'உண்மை எதுவானாலும் அதைத் தயங்காம சொல்லு, நான் உன்னை நல்லா வெச்சுகிட்டிருக்கேனா இல்லையா ? 'அவள் ஆமோதிப்பாய்த் தலையாட்டினாள்,

மிகவும் ரசித்தேன். நல்ல யதார்த்தமான டயலாக்.

அதன் கரிய, சிறு துளைகளில் அவளது நினைவுகள் புகுந்து, வெளியேறி, அதேவேகத்தில் மறுதுளையில் நுழைந்து சிக்கலாகிக்கொண்டிருக்க, ஏதும் முடிவுசெய்யமுடியாதபடி நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இங்கேதான் சொக்கர் நிற்கிறார்! சாரி... தெரிகிறார்.

Surprise எங்கே குரு? part-III வருதா? :-) இந்த முடிவுதான் expected ending ஆயிற்றே! இங்கே ஏதாவது வித்தியாசம் காட்டுங்களேன்.

அன்புடன்,
-பாலாஜி
பாஸ்டன்


--- NagasubramaniaN Chokkanathan wrote:
வாத்யாரே,

வண்க்கம்பா,

பொறுமையா இந்தக் கதையைப் படிச்சுமுடிச்ச ஒரே மவராசன் நீதான் என்று தெரியுது :-) க்ளப்பில வேற யாரும் மூச்சு விடக்காணும் !

அதாகப்பட்டது, இந்தக் கதை மேஜிக்கல் ரியலிசம் அல்லது மாந்திரீக யதார்த்தவாதம் வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் - அப்படி நினைச்சுதான் எழுதினேன், அப்படி இல்லை-ன்னா என்னை அடிக்கக்கூடாது, நான் இதிலெல்லாம் கத்துக்குட்டியாக்கும் (ஹையா, இது எவ்ளோ பெரிய வசதி !!)

கதையில வர்ற பச்சை இலைங்களை workaholic தனத்தின் அடையாளம்-ன்னு வெச்சுகினு படிங்க, இப்ப பிரியுதா ? (அப்பவும் பிரியலைன்னா அது என்னோட குத்தம்தான் - கதையை நான் மறுபடி ஒழுங்கா எழுதணும்ன்னு அர்த்தம்!)

- லவணராயன்,
பெங்களூர்.

= = = Original message = = =

நாகா,

புரியற மாதிரியும் இருக்கு; புரியாத மாதிரியும் இருக்கு!

ஆரம்பத்திலே ஒழுங்காத்தான் கனெக்ஷன் கொடுத்துண்டு வந்தேன். முடிவு படிச்சப்புறம் மொத்தமா பிய்ச்சுக்க ஆரம்பிச்சுட்டேன்.

இன்னொரு வாட்டி விலாவாரியா படிச்சுட்டு நேரம் கிடைச்சா, ஏதாவது தோணிணா மறுபடி எழுதறேன்.

இந்த டெக்னிக் பேர் என்னபா? படா ஷோக்காக் கீது :-)
என்றும் அன்புடன்,
-பாலாஜி
பாஸ்டன்

1 கருத்துகள்:

Balaji,
Could you give me the link to "Ilaigal" short story in RKK group ?
Thanks!
- Vengy

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு