படித்ததும் நினைத்ததும்
1. அஜீவன்: "என்னிடம் (2000) இரண்டாயிரத்துக்கு மேல் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. மு.வரதராசன், கல்கி, திருக்குறள், பாரதியார் கவிதைகள்.........................." என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்கு தலை கிறு கிறுத்தது. சோவென பனிமழை கொட்டி உடலெல்லாம் நனைந்து நடுங்குவது போன்ற உணர்வு. (வலைப்பதிவு வைத்திருக்கிறாரா என்று அஜீவனிடம் விசாரிக்க வேண்டும்.)
2. ஞானதேவன்: "உறவினர்களை அங்கேயே விட்டு, தனியே குளிக்க சென்றேன். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், எனக்கு இடுப்பளவு மட்டுமே இருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் மனம் மாறியது, கம்பியை தாண்டி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். யாரும் அறியாமல், நீருக்குள் மூழ்கி, உடலை வளைத்து கம்பிக்கு நடுவில் புகுந்து மறுபக்கம் வந்தோம். ஏதோ சுதந்திரமே கிடைத்து விட்ட சந்தோசம்." (நீமோ மாதிரி மாட்டிக் கொண்டிருக்கிறார்... மெர்லின் உதவியுடன் தப்பித்தாரா?)
3. ஜூனியர் விகடன்:: 'காட் ஃபாதர்' என்ற ஒரு நாவலில் ‘வெற்றியின் மூலமாக நண்பர்கள் வருவார்கள். மிகப் பெரிய வெற்றியின் மூலமாக நிறைய எதிரிகள் உருவாவார்கள்’ என்று இடம்பிடித்திருக்கும் வரிகளைத்தான் இப்போது நினைத்துக்கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றியின் பலனாக எனக்கு இப்படியரு பிரச்னை வந்திருக்கிறது. - தங்கர்பச்சான் (எனக்கு எதிரிகள் உருவாகியிருக்கிறார்களா? நண்பர்கள் வந்திருக்கிறார்களா? நெனப்புதாண்டா பொழப்பக் கெடுக்குது :-)
4. ஹாய் மதன்: இரா. வெங்கடேசுவரன், திருமலைராயபுரம்
ஒருவருக்கு முக்கியத்துவம் தருவது பிடிக்காவிட்டால் 'அவருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு?' என்று கேட்கிறோமே.. இதில் கொம்புக்கு என்ன சம்பந்தம்? (மதனுக்குக் கொம்பு முளைக்கவில்லை என்கிறார்!?)
5. இது சிறகுகளின் நேரம் - கவிக்கோ அப்துல் ரகுமான்:
'வணக்கம்' என்பதற்குத் 'துணிவு' என்று எழுதினாலே போதும், எதுகை ஆகிவிடும். ஆனால், அழகாக இருக்காது.
கவிதை என்பது ஒர் அழகியல் அனுபவம். அரங்கத்தில் பாட வந்திருப்பவர்கள் பெரிய புலவர்கள். தாமோ "நீர் எழுத்துக் கவி எழுதுபவன்" என்கிறார் கலைஞர். நீர் மேல் எழுதும் எழுத்து உடனே அழிந்துவிடும். அதைப்போல் அற்பமானது தம் கவிதை என்கிறார் கலைஞர்.
"நீர் எழுத்து" என்பதில் வேறொரு பொருளும் தொனிக்கிறது. பூமியில் விளையும் தாவரங்கள் எல்லாம் நீர் எழுதும் எழுத்துத்தான். இது அவைக்கு அடங்குவது போல் காட்டி அவையை அடக்குதல்.
(புலவருக்கும் கவிஞருக்கும் இவர் சொல்லும் வித்தியாசம் சிரிப்பை வரவைக்கிறது.)
6. நிழல்கள் - பிரசன்னா: நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. (இன்னொரு அ.மு.ந. படித்து விட்டீர்களா?)
7. சந்தோஷ் குரு: "சன் டி.வி யோ இந்த நேரத்தில் தான் கும்பகோணம் நகராட்சி சுடுகாட்டினை சரியாக பராமரிக்கவில்லை, நகராட்சி மந்தமாக இருக்கிறது என்று கூறி இங்கேயும் கூட 'அரசியல்' செய்துகொண்டு இருக்கிறது." Publicity, publicity, PUBLICITY is the greatest moral factor and force in our public life என்று கூறினாராம் பத்திரிக்கையாளர்களின் குரு என மதிக்கப்படும் ஜோஸஃப் புலிட்சர், சரியாத்தான் சொன்னார்."
(கும்பகோணம் தீ விபத்தின் மறுபக்கத்தை இன்னும் விரிவாக அனைவரும் எழுதவேண்டும். சோனியா, பிரியங்கா, ராஜீவ் என்று பெயர் வைத்த குழந்தைகளை வைத்து கலைஞர் அறிக்கை விடுவதும், ஜெயலலிதா மூக்கை மூடிக் கொண்டதை க்ளோஸப் கொடுக்கும் cheap politics-உம், ஆய்வுக்காக (inspection) தமிழ் மீடியம் நடத்தப்படும் நிர்ப்பந்தங்களும் அலசப்படவேண்டும்.)
8. Ananova: இரண்டு இதயம் வேண்டும் என்று எழுதிய கவிஞர் பொறாமைப்படும்படி, இரு இதயங்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது. அடுத்து இதயமே இல்லாமல் யாராவது பிறப்பார்களா?
//(புலவருக்கும் கவிஞருக்கும் இவர் சொல்லும் வித்தியாசம் சிரிப்பை வரவைக்கிறது.) //
சற்று யோசித்தால், அந்தச் சிரிப்புக்கு மேலே சிந்தனை பெறலாமே..
செய்யுள் என்பது செய்யப்படுவது.
கவிதை என்பதோ கணத்தில் பூப்பது.
சிற்பம் என்பது செய்யுள் என்றால், குழந்தையின் சிரிப்பு கவிதை.
சொன்னது… 3/11/2008 12:45:00 PM
கருத்துரையிடுக