புதன், ஜூலை 21, 2004

ஃபோர் ஸ்டுண்ட்ஸ்


இசை: ஜஸ்ஸி கிஃப்ட்

லஜ்ஜாவதியே
- ஜஸ்ஸி கிஃப்ட் - 2.75 / 4
'ஞாபகம் வருதே'வை ஜாலியாகப் பாடினால் எப்படி இருக்கும்? இளமைக் காதலை சந்தோஷமாக உருகுகிறார். அடுத்த வாரம் நடக்கும் டெமொக்ராடிக் மாநாட்டினால், போக்குவரத்தில் மாட்டிக்கொண்டால், கஷ்டப்படாமல் தாளம் போட்டு ட்ராஃபிக்கையும் என்சாய் செய்ய ஒரு பாடல். 'லஜ்ஜாவதியே' என்றால் என்னங்க அர்த்தம்?

உந்தன் விழிமுனை
- ஜஸ்ஸி கிஃப்ட், கங்கா - 1.5 / 4
ஜஸ்ஸி கிஃப்ட்-தான் அடுத்த ஏ.ஆர்.ரெஹ்மான் என்பது எல்லாம் டூ மச். ஆனால், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் அதிர வைக்காத இசை. அத்னான் சாமியின் கொஞ்சல், உதித் நாராயண் குரலில் தெரியும் குழந்தைத்தனம், மனோவின் கணீர் உச்சரிப்பு என்று வித்தியாசமான கலவை.

பூவாலே இந்த
- ஹரீஷ் ராகவேந்திரா - 1.75 / 4
வீட்டில் விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு, பால்கனியில் கையில் கோப்பையுடன், மூன்றாம் பிறையை தரிசனம் செய்துகொண்டே, வெறுந்தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்க, jazzy ஹரிஷ் ராகவேந்திரா பாடல்.

அன்னக்கிளி - 1 - பிரசன்னா - 3 / 4
அன்னக்கிளி - 2 - ஜஸ்ஸி கிஃப்ட் - 2.5 / 4
பிரசன்னாவின் 'அன்னக்கிளி', ஜஸ்ஸியை விட சாதாரணமாக இருந்தாலும் பெட்டராக இருக்கிறது. மற்றொரு எளிமையான அசத்தல் பாடல். 'ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸி'ல் அனைவரும் விரும்பிக் கேட்கும் பாடலாக 'அன்னக்கிளி' நிச்சயம் இருக்கும்.

ஃபோர் தி பீப்பிள்
- உன்னி மேனன் - 1 / 4
இளைஞர்கள் அமைக்கும் இயக்கத்தின் தீம் சாங். உருப்படியான ஆங்கிலப் பாடலாக அமைத்திருக்கலாம். அல்லது, வழக்கம்போல் ஒரு எழுச்சிப் பாடல் கொடுத்திருக்கலாம். இரண்டுங்கெட்டான்.

Four Students பாப் பாடல்கள்தான் மலையாளர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது என்கிறார்கள். தமிழில் அவ்வளவு பெரிய ஹிட் ஆகாவிட்டாலும், ஜஸ்ஸி கிஃப்ட் குரலில் பல மயக்கும் பாடல்கள் வரப்போவது நிச்சயம்.

பாடல்களைக் கேட்க: RAAGA - Four Students - Tamil Movie Songs
எம்பி3: ((::Mohan's Music/Mp3 Page - Latest Mp3 - 4 Students::))
குமரகுரு: teakada: Lajjavathiye enna asathura rathiye
Song of the Day: LajjavathiyE from 4 Students
செவ்வி: Music India OnLine - Jassie Gift, Music Director (4 The People) 2004

2 கருத்துகள்:

'லஜ்ஜாவதியே' என்றால் என்னங்க அர்த்தம்?
>>
'நாணும் நங்கை'-ன்னு SOTD-ல பேசிக்கிட்டாங்க

ஜஸ்ஸி கிஃப்ட் "குரலில்" பல மயக்கும் பாடல்கள் வரப்போவது நிச்சயம்.
>>
ஏற்கனவே போரடித்துவிட்டது. அடுத்த நிலை எரிச்சல்தான் :-)

நன்றி பரி. 'லஜ்ஜை' என்றால் என்ன அர்த்தம் என்று வீட்டுக்குப் போய் தேட நினைத்தேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு