திங்கள், ஜூலை 26, 2004

ரோஹ்தக் ராணி



பிலானியில் இருந்து டில்லிக்கு செல்லும் வழியில் உள்ள முக்கியமான ஊர் ரோஹ்டக். முன்னாள் துணை பிரதம மந்திரி தேவிலாலின் தொகுதி என்ற மட்டிலுமே நாம் அறிந்த ஊர், 'மர்டர்' படத்திற்குப் பின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உருவெடுக்கிறது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்த அதிகாலையில், புது டில்லியின் ஐ.எஸ்.பி.டி. காடுகளில் இருந்து கிளம்பிய வண்டியின் முதல் நிறுத்தம் ரோஹ்டக்கில் இருக்கும். காலை சிற்றுண்டி சாப்பிடும்போது பார்த்தேனா... அல்லது ஒட்டக வண்டியில் வயலோரமாக பார்த்தேனா... 'ஏலே மச்சி மச்சி' என்று அன்பே சிவம் மாதவன் போல் 'பாங்' அடித்த பஸ் மேல் பயணங்களில் பார்த்தேனா... அல்லது ராஜஸ்தான் ரோட்வேஸ் வண்டியின் டயர் பங்க்ச்சராகி, நான்கு மணி நேர வெயிலில் காய்ந்து காத்திருந்த வேளையில், பறந்துபோன ஏஸி காருக்குள் பார்த்தேனா என்று சரியாக நினைவில் இல்லை.

இன்று 'மர்டர்'இல் நடித்து இந்தியப் புகழ். அடுத்து ஜாக்கி சான் படம் மூலம் உலகப் புகழ். நான் மட்டும் பாரதிராஜா மாதிரி பஸ் ஸ்டாண்டில் பார்த்து ஹீரோயின் அறிமுகம் செய்யும் டைரக்டராய் இருந்த்திருந்தால்... அன்றே... ஹ்ம்ம்ம்...



அரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள்.
(அடுத்து சுராவா, பிவானி, சூரு, ஜுன் ஜுனூ போன்ற நகரங்களில் இருந்து ஹீரோயின் குதித்தால் சுராவா சுந்தரி, பிவானி ஃபிகர், சுரூ சுந்தரி, என்று தலைப்பு வைத்து போஸ்ட் போடலாம்... வெயிட்டீஸ்)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு