புதன், ஜூலை 28, 2004

உதிர்ந்த முத்துக்கள்

1. "இரண்டு கோடி, மூன்று கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து நூறு பேருக்கு இஸ்திரி பெட்டி, நான்கு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுப்பது சமூகப்பணி அல்ல."
- தொல். திருமாவளவன் (ஜூ.வி.)

2. "என்னைப் பிரித்துப் பார்க்காதீர்கள். நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்".
- தமிழக கம்யூ. தலைவர்களை நோக்கி கலைஞர் (தினகரன்)

3. "நடிகர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியும். எம்ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் ஆண்டபோதுதான் நாடு சுத்தமாக இருந்தது".
- விஜயகாந்த் (ரிப்போர்ட்டர்)

4. "நான் ஒட்டகத்தினுடைய முதுகை நிமிர்த்தலாம் என்று போனேன். ஒட்டகத்தினுடைய முதுகு நிமிரவில்லை. அவர் ஒரு கொக்கினுடைய கழுத்தைச் சரி செய்யலாம் என்று போனார். அதுவும் சரி செய்யப்படவில்லை."
- பெரியார் திடல் விழாவில் தன்னையும், கி.வீரமணியையும் பற்றி கலைஞர் (முரசொலி).

5. "பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோ ர் வீட்டுக்குச் சென்று கஞ்சி குடித்தால் வேறுபாடுகள் எல்லாம் சரியாகிவிடும்"
- ராமதாஸ் (தினமணி)

6. "சிலர் என்னை உற்சாகமான பேர்வழி என்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சோர்வு, எரிச்சல் எல்லாம் வரும்".
- ப்ரீத்தி ஜிந்த்தா

7. "ஒரு டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அரசியல்வாதிக்கு பதவியும் அவசியம்".
- 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி (தமிழன் எக்ஸ்பிரஸ்)

8. "எனக்குத் துணை பிரதமர் பதவி கொடுத்தாலும் கூட மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்".
- ராம்தாஸ் (தினத்தந்தி)

9. "நான் அதிகம் சினிமா பார்க்கிறதில்லை"
- மணி ரத்னம் (குமுதம்)

10. "திராவிடக் கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரானால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்"
- தொல். திருமாவளவன் (மாலைமலர்)

நன்றி: இந்தியா டுடே - தமிழ்

5 கருத்துகள்:

விஜயகாந்த,ராமதாஸ் போன்றவர்களின் வரிகளில் ஏதும் கருத்த்ருப்பதாக தெரியவில்லை. சுயநலம் பல்லை இளிக்கிறது. தொல்.திருமாவளவனைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது.

ராமதாஸ் குறித்த ஐகாரஸின் 'துக்கடா'க்கள் படித்தீர்களா? திருமாவளவன் பேச்சில் 'பொடி' இல்லை; காரம் இருக்கிறது.

இல்லையே பாபா, எங்கே? ராயரிலா? வலைப்பதிவிலா? ஐகாரஸின் சுட்டி இருக்கா?

KR, Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 8515

பாபா படித்தேன். உண்மைதான் :)))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு