புதன், ஜூலை 28, 2004

தென்றல் - ஜூலை 2004

இந்தியாவில் இருந்து வரும் பல இதழ்களை மிஞ்சும் தயாரிப்புடன் செறிவான பொருளடக்கத்தையும் தாங்கிய இதழ் தென்றல். ஏற்கனவே வ.ராமசாமி குறித்த பரியின் குறிப்பை பார்த்தேன். மேலும் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதும் பூம்புகார் பக்கம், மதுரபாரதியார் தொகுத்த கேடிஸ்ரீயின் புஷ்வனம் தம்பதியரின் பேட்டி, வாஞ்சிநாதனின் புதிர் பக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் குமரப்பாவை குறித்த மதுசூதனின் பதிவு, அரசரத்தினம் ராஜாஜியை சந்தித்தது, quotable quotes ஆகியவை மிகவும் பயன் தரும் இதழாக்குகிறது.

எதைப் படித்தாலும், அதில் opportunities for improvement காணும் reviewer புத்தியினால் தோன்றிய சில:

* குறுக்கெழுத்துப் புதிருக்கான விடை, இந்த இதழிலேயே கொடுத்தது எனக்கு தெரியாதவற்றை சீக்கிரம் சரிபார்க்க உதவினாலும், அடுத்த மாதம் வரை காத்திருக்க வைக்கலாமே?

* அவுட்சோர்ஸிங் குறித்த தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், ஆசிரியர் அசோகன் கூடவா, அப்படியே ஆங்கிலத்தைக் கையாளவேண்டும்? (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே? என்ன அது?)

* எனக்கு மிகவும் பிடித்த 'மாயா பஜார்' பகுதியில், முட்டைகோஸ் சாதம் செய்ய சொல்லிக் கொடுத்திருந்தார்கள். முட்டைகோஸை எப்போது போடுவது என்று மட்டும் செய்முறையில் எழுதவேயில்லை. முட்டைகோஸே இல்லாமல் 'முட்டைகோஸ் சாதம்'!

* மாத இதழில் சினிமா செய்திகள் வரும்போது ஆறிவிடலாம். 'நிழல்' போல சினிமா ஆய்வு கட்டுரைகளை இடலாமே? சமகால சினிமா அல்லது ஹாலிவுட் படங்களின் அலசல் என்று கொடுத்தால் மேலும் சுவைக்குமே!

* A-44, B(C) 02, என்று பக்க எண் கொடுப்பது பதிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கலாம். வாசகன் எனக்கு?

* ஜூலை மாத ராசி பலன் எழுதியவர் யார்? :P ;-)

* நிகழ்வுகள் என்பதை மொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்துப் போடாமல் ஆங்காங்கே, கதை கட்டுரைகளுக்கு இடையே வெளியிட்டிருந்தால் வாசகரின் ஆர்வத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்.

* ஏன் கர்னாடிக்.காம் கூட இணைந்து வழங்கும் ஜுலை மாத நிகழ்வுகள், ஆங்கிலத்தில் வழங்கப் பட்டிருக்கிறது? Events ஒவ்வொன்றும் தமிழ் மாற்றுவது முடியாத பட்சத்தில், important dates, தமிழ் மன்ற அமைப்பு நிகழ்த்தும் கலைவிழாக்களையாவது முழுக்கத் தமிழில் தந்திருக்கலாமே?

தென்றல் இதழில் இருந்து:

1. அந்தக் காலத்து 'கண்ணதாசன்', 'தீபம்' போன்றும், தற்போது வெளிவருகிற 'மூவேந்தர் முரசு', 'சிங்கைச் சுடர்', 'கண்ணியம்' போன்ற இதழ்கள் போன்றும் 'தென்றல்' இதழ் மனதை நிறைவு செய்தது.
- பாவலர் கருமலைப் பழம்நீ (வாசகர் பக்கம்)

2. தை மாதம், 1964ம் ஆண்டு. ..... இலங்கைத் தமிழர் பிரச்சினையப் பற்றி கேட்டார். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக சாத்வீகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாஜி சொன்னார். "இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது உரிமைகளைப் பெறவேண்டும். போராட்டத்தைத் தளர்த்தினார்களோ அவர்கள் இனரீதியாக அழிந்துவிடுவார்கள்."
- அ. இ. அரசரத்தினம் (நைஜீரியாவில் மதுபானம் மலிவு)

3. 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்' மற்றும் 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள்ரும்' குறித்த புஷ்வனத்தாரின் எளிய, insightful விளக்கங்கள்.

4. மணி மு. மணிவண்ணனின் புழைக்கடப் பக்க சிதறல்கள்:
வெங்கட் சாமிநாதன் "தங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு சதத்துக்கும் பிரயோசனப்படாத தமிழ் அறிவில் மாணவர்கள் காட்டும் உற்சாகம் தனக்கு வியப்பைத் தருகிறது" என்றார்.

(இது குறித்த அவ்ரின் பதிவுகள் முக்கியமானவை. மைக்கேல் மூர் படம், செம்மொழி அறிவிப்பு என்று கடைசிப் பக்கத்தில் புரட்ட ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு சரியான தீனிப் பக்கம்).

அமெரிக்காவில் இதழ் பெற சந்தாதாரர் ஆகலாம். உங்களின் கதை, கட்டுரைகளை அனுப்பலாம்.

நன்றி தென்றல்.
-பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு