புதன், ஜூலை 28, 2004

இணையப் பொறுக்கன்

1. FriendTest.com - challenge your friends with your own custom quiz!: தேர்தல் நடத்தலாம். தேர்வு வைக்கலாம். கருத்துக் கணிப்பு கொடுக்கலாம். ஸ்பார்க்லிட் கொடுப்பது போல் ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலும் ஒன்பது வினாக்கள் தொடுக்கலாம்.

2. LHS Bat Quiz: வௌவால்களை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? (சப்-டெக்ஸ்ட் எல்லாம் இல்லாமல்தான் கேள்வி கேட்கிறார்கள் :-) [என்னுடைய ஸ்கோர்: Batter than Average! You got six answers right, which shows you know more than the average person about bats.]

3. Snowboard Alley: ரொம்ப வேலை செய்துவிட்டீர்களா? ஐந்து நிமிடத்துக்காவது சம்மரில் பனிச்சறுக்கு விளையாட வாங்க!

4. Our favorite Weird Toon!: இளவரசியார் போட்ட படமும் இருக்கிறது.

5. TechTales::Tech Room: சோகக்கதை சொல்கிறார்கள்; கடிக்கிறார்கள்.

6. The Room: ருத்ரன் சொல்வதைப் போல் உளவியல் ரீதியாக கணிக்கிறார்கள். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாவிட்டாலும், சுவாரசியமான அலசல்கள். குப்பைத்தொட்டி குறித்த குறியீடு, வெகு அற்புதம். அவசியம் ஒரு தடவை ரூமுக்குப் போய்ப் பாருங்க.

7. GPS Drawing Information: இணையத்தில் ஊர் சுற்றியும், உங்களுக்கு நேரம் நிறைய இருந்தால் அல்லது புதுக்காதலியுடன் ஊர் சுற்ற விரும்பினால், செய்து பார்க்க வேண்டிய பயனுள்ள பொழுதுபோக்கு.

8. Virtual Presents: வாழ்த்து அட்டை கொடுப்பதெல்லாம் பழைய டெக்னிக். இப்பொழுது உங்களுக்கு என்ன வேணுமோ, அதை அனுப்பி வைப்பதுதான் ஃபாஷன். கார் வேணுமா? இட்லி-வடை வேணுமா?

9. Defiance: Why it happens and what to do about it: பத்ரி இப்பொழுது எழுதியிருக்கும் மேட்டருடன் சம்பந்தமுடையது. நான் அடிக்கடி படித்து அசைபோடும் அட்வைஸ்.

10. இணையத்தில் கண்டது: Through clever and constant application of propaganda, people can be made to see paradise as hell, and also the other way around, to consider the most wretched sort of life as paradise. - Adolf Hitler (Mein Kampf)

4 கருத்துகள்:

Did Hitler tell this when talking about American media and his county's media? :P

quote-ai padithu naan aadi poitten. Context-insensitivity is a valuable attribute.

நல்ல வேள போங்க, தலைப்ப (இணணயப் பொறுக்கன்) பாத்த ஒடன என்னத்தான் சொல்ரீங்களோன்னு நெனச்சேன்.

அன்பு, நம்ம ரெண்டு பேரும் தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி :P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு