திங்கள், ஜூலை 19, 2004

செல்லமே

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வெள்ளைக்கார முத்தம்
- மாலதி - 2/4
வசீகரா ஸ்டைல் பாடல்; வசீகரம் எனக்குத் தென்படவில்லை!

ஆரிய உதடுகள்
- ஹரிஹரன், ஸ்வர்ணலதா - 2.75/4
செம ஆரம்பம். பாடகர்கள் நிலைநிறுத்துகிறார்கள்.
(கண்களே நீயாகப் போனால்
வேறு பார்வை வருமா?
)

கும்மியடி
- சந்தியா - 2/4
கொஞ்சம் அந்தக்கால குரலுடன் கூடிய மெட்டு; முதலிரவு நினைவலைகளைத் தட்டி எழுப்பலாம். ரீமா சென் கதாநாயகி என்று எண்ணிப் பார்த்தால்; எப்படி படமாக்கியிருப்பார்களோ என்றும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால்; 'A' முத்திரை பாடல் வரிகளில் மட்டுமில்லாமல் போய் விடுமோ என்று நினைக்கவைக்கும் பாடல்.

செல்லக் கிளியே
- ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம் - 1.5/4
சுகமான ரொமாண்டிக் டுயட். ஆனால், அனுராதா ஸ்ரீராம் இருந்தும் பாடலை தூக்கி நிறுத்த முடியவில்லை.

காதலிக்கும் ஆசை (மை சோனாலிஸா...)
- கேகே, மாலதி, சின்மயி, டிம்மி - 1/4
ஹீரோ கெஞ்சுகிறார். இந்த மாதிரி பாடினால், எவராயிருந்தாலும் காதலிக்க ஆரம்பிக்க மாட்டார்கள்.

செல்லமே - ஹாரிஸ் ரொம்பக் கொஞ்சுகிறார்; பாடல் வரிகளால் சாக்லேட் இசை திகட்டுகிறது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு