வியாழன், ஜூலை 22, 2004

கருடா சௌக்கியமா - ஆனந்த் சங்கரன்

ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கு படு சுட்டியாக ஒரு பிள்ளை. எல்லாவற்றையும் தூக்கியெரிவது, கிழே கொட்டுவது அவன் வேலை. தன் மகனின் பிறந்தநாளுக்கு அவன் ஒரு வைர மோதிரத்தை போட்டு அழகு பார்த்தான்.

ஒரு நாள் அந்த பிள்ளை விளையாடும் பொழுது அந்த வைரக்கல் கீழே விழுந்துவிட்டது. அதைக் கண்ட அந்த பொடியன் அதை எடுத்து வாசலில் எரிந்தான். பணக்காரன் வீடாயிற்றே வாசலில் அழகிய தோட்டமும் புற்களும் இருந்தன. இந்த வைரக்கல் அங்கே இருந்த கூழாங்கற்களோடு சேர்ந்து விழுந்து விட்டது.

விழுந்தது வைரக்கல்லாக இருந்தாலும் அது விழுந்த இடம் சாதாரண கூழாங்கற்கள் இருக்கும் இடம். அப்போது அங்கே வந்த அந்த பணக்காரணின் நாய் அருகில் இருந்த பூந்தொட்டியில் காலை தூக்கி தன் வேலையை காட்டியது. அது அருகில் இருந்த அந்த வைரக்கல்லின் மீதுபட்டது.

அப்பொழுது அந்த வைரக்கல் சே ! நான் எவ்வளவு உசத்தி, என்னை வாங்க பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் இருந்தாலும் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது. அப்பொழுது அருகே இருந்த கூழாங்கல், அட என்ன இப்படி சொல்கிறாய் நீயும் கல், நானும் கல் இங்கு எல்லாமே ஒன்றுதான் என்றது. வைரக்கலுக்கு ஒன்றும் புரியவில்லை, எப்படி தானும் இந்த கூழாங்கல்லும் ஒன்றாக ஆனோம் என்று யோசித்த படி இருந்தது.

அப்பொழுது அங்கே வந்த தோட்டக்காரன் வைரக்கல்லை பார்த்து, 'அட இந்த கண்ணாடி கல் நல்லாயிருக்கே' என்று வியந்து அழகு பார்த்தான்.

வைரக்கல்லிற்கு மேலும் வருந்தமாக போயிற்று. என்னது தன் நிலமை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தியது.

நல்ல வேளையாக அப்பொழுது வீட்டு எஜமானன் அங்கே வர, தோட்டக்காரன் அந்தக் கல்லை அவரிடம் கொடுத்தான். எஜமானன் அதைப் பார்த்தது நல்லபடியாக வைரக்கல் கிடைத்துவிட்டது. இதை மறுபடியும் தங்க மோதிரத்தில் பதித்து தான் அணிந்து கொள்ள வேண்டும் நினைத்துக்கொண்டான்.

அப்பொழுது வானொலியில் கண்ணதாசன் எழுதிய 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது..' பாடல் ஒலித்தது.



குழந்தைகளுக்கான கதை எழுத ஆனந்திடம் திறமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

1 கருத்துகள்:

இது குழந்தைகளுக்கான கதை மாதிரி தெரியவில்லையே!;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு