வியாழன், ஜூலை 29, 2004

அங்கும் இங்கும் பாதையுண்டு!?

நேற்றைய என்.பி.ஆரின் பங்குச்சந்தை குறித்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புவதை அலசும் தொகுப்பு இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இருந்து:

* பதினேழு வருடம் கழித்துத் திரும்பிய Gartner-இன் பார்த்தா ஐயங்காருடன் ஒரு மினி பேட்டி.

* அமெரிக்காவில் கிடைக்கும் அந்தரங்கச் சுதந்திரத்தை இழந்தாலும், வயதான அப்பா-அம்மாவின் அருகாமை.

* இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான முதலீடு அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவை விட 30-60% கம்மியாக கிடைத்தாலும் ராஜபோக வாழ்வு.

* தாத்தா பாட்டியின் பரிவு பேத்திகளுக்குக் கிடைத்தாலும், தினமும் சந்திக்க விரும்பும் பெற்றோர்.

* சட்டையைப் பிடித்து சங்கோஜமில்லாமல் கேள்வி கேட்கும் திறந்த மேலாண்மைக் கொள்கைகளை பயிற்சி கொடுப்பதில் உள்ள சங்கடங்கள். (இன்னுமா?!)

* எதற்காக தினமும் வேலைக்கு வருகிறார்கள்? எப்படி ஆசை காட்டி தக்கவைத்துக் கொள்வது? அடுத்தவன் அஞ்சு பைசா ஜாஸ்தி கொடுத்தால் தாவி விடுவார்களா?

நிகழ்ச்சியை கேட்டவுடன் சபலபுத்தி ஆட்கொண்டது. பெங்களூர் திரும்பி, சென்னையின் கூப்பிடு தூரத்தில் சொந்தங்களை வைத்துக் கொண்டு, லிடோ வில் புது தமிழ்ப்படமும், ரெக்ஸில் ஆங்கிலப் படமும் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருக்கத் திரும்பலாமா என்று நப்பாசை. இக்கரைக்கு அக்கரை பச்சை... என்ன சொல்றீங்க ;-)

- பாஸ்டன் பாலாஜி
---------------------------

நிகழ்ச்சியை கேட்க | தொடர்புள்ள சுட்டி

5 கருத்துகள்:

என்னண்ணே நீங்க வேற என்னோட ஆசைக்கு தூபம் போடுறீங்க... கொஞ்ச நாளாவே ஊருக்குப் போயிடலாம், ஊருக்குப் போயிடலாம்னு பட்சி சொல்லுது - பார்க்கலாம்.

இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள் அன்பு? திரும்புவதற்கு முன் இந்தியாவில் இன்ஃபோசிஸ் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களிடம் விசாரித்து விடுங்கள். வாரயிறுதிகளிலும் அலுவல் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

If you return to a high profile job, it is well and good and there is no doubt that you are going to enjoy the return. But for a average Joe who had been here as an IT specialist for say about 5-10 yrs in US and returning to be a Project Lead or Manager, the option is not so enticing.

I had a couple of my friends who either decided to return or forced to leave (due to job loss), they all regret their choice. India still is the same. I say this in terms of the work culture and the hierarchical system that is prevalent even in the best s/w houses. After getting used to the (seemingly) flat hierarchy or the non-existence of the it in US firms, it would be very difficult to adapt to the 'Saars' and 'Maedames' in India.

-dyno

Neat summary Dyno.

இந்தியா திரும்பிச் செல்வதற்கு நண்பர்கள் கூறும் முக்கிய காரணங்கள்:
* பெற்றோரின் அருகாமை.

* அமெரிக்கா அலுத்துவிட்டது...Whats next!?

* பதவி... ப்ராஜெக்ட் மானேஜர், மில்லியன் டாலர் க்ளையண்ட், கீழே இருபது பேர், க்வார்ட்டருக்கு மூன்று பேரை கழித்து, நான்கு புதியவர்களை எடுக்கும் சக்தி.

* குடும்பத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி மூச்சு வாங்கலாம் என்னும்போது, சிங்கப்பூர், சைனா, ஆஸி. என்று பறக்கும் வாய்ப்புகள்.

* இரண்டு பேரும் வேலைக்கு சென்றாலும், இந்திய முறையில் குழந்தைகளைப் வளர்க்க/பார்த்துக் கொள்ள in-law-க்கள்.

* அமெரிக்காவில் முப்பது வருட கடனில் வாங்கும் வீடு, இந்தியாவில் ஐந்து வருடத்தில் அடைந்துவிடும்.

* குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்று கெட்டுப் போக மாட்டார்கள் (:P) என்னும் நம்பிக்கை.

* என்றாவது சொந்தத் தொழில், தெரிந்த இடத்தில், துவங்க வேண்டும் என்னும் உந்துதல்.

* சம்பாதித்தது போதும்... இருப்பதை வைத்துக் கொண்டு கிராமத்தில் போய் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவிலும் அமெரிக்க மோகம் வந்திருக்காதோ?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு