எதிர்க்கட்சி அரசியல்
பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய ஆட்சிக்குத் தேவையற்ற குழப்பம் விளைவிப்பதாக கருணாநிதி சில நாள் முன்பு அறிக்கையளித்தார். சிபு சோரென் போன்ற கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அமைச்சரவையில் பங்கு பெற கூடாது என்று தேசிய முண்ணனியும் ஆர்ப்பாட்டம் செய்து வந்தது. சட்டசபையை சரிவர நடத்தவும் முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்ணியமாக விவாதம் நடத்துமாறு அறிவுறுத்தினார் கலைஞர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை மிகச்சில நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதை திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் கண்டித்தது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 23 முதல் அவைக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்துள்ளனர்.
நான் பள்ளியில் படிக்கும்போது அவ்வப்போது ஆசிரியர் போராட்டம் வெடிக்கும். ஏன், எதற்கு என்று எல்லாம் கவலைப்படாமல், போர்டபிள் கரும்பலகைகளில் கோஷங்கள் எழுதி வாயிலில் வைத்து, வீராவேசமாக வசனம் கேட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியேறிவிடுவோம். 'ஹைய்யா... ஒரு வாரம் விடுமுறை' என்னும் குஷி மனதில் தங்கும். நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து மாதந்தோறும் சம்பளமும், இன்னபிற பஞ்சப்படிகளும் வாங்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் இதே மனநிலைதான் இருந்திருக்கும்.
கலைஞரின் மேல் கைவைத்தவரின் கைது + வீரப்பனுக்கு பணம் கைமாறிய முத்திரைத்தாள் மோசடி, கும்பகோணம் போன்ற தீவிபத்துகளின் தடுப்பு போன்றவை குறித்து காரசாரமான விவாதம் நடைபெறும் என்னும் குடிமகனின் எதிர்பார்ப்பு, எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் கலைந்து போனது.
பாரதீய ஜனதா இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டது, ஆனாலும், அந்தக் கட்சிக்குப் பிடித்த கொள்கைகளான ஆலயங்களின் குடமுழுக்குகள் ஒத்திவைப்பு, ஆடு, மாடு பலி மீதான தடை நீக்கம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட நீக்கம் ஆகியவை குறித்தும் அமைதி காத்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் யாராக இருந்தாலும், தமிழக சட்டசபைக்கு தரிசனம் தருவதில்லை. அந்தக் கட்சியின் தோழர்கள் காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியோரும் 'தலைவர் எவ்வழி... தொண்டர் அவ்வழி' என்று வெளிநடப்பு மட்டும் செய்து வந்தார்கள். அது தற்போது புறக்கணிப்பாக க்ராட்ஜுவேட் ஆகியிருக்கிறது.
இப்படித்தான் பேசாமடந்தையாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால், முதல்வருக்கு மட்டும் தேர்தல் வைத்து, அவரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவரை விட்டே, 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர்களை நியமனம் செய்து விடலாம்.
-பாஸ்டன் பாலாஜி
Very good idea.
சொன்னது… 8/02/2004 02:31:00 PM
பராவயில்ல பாலா... என்னடா யாருமே நம்ம ஊரு அரசியல்ல விட்டுட்டு - புஷ், கெர்ரின்னு கிளம்பிட்டாங்கன்னு நெனச்சேன்.
சூப்பரா யோசித்து நல்ல ஐடியா சொல்லிருக்கீங்க... குருவாயூரப்பனோ, அயோத்தி ராமரோ, மூகாம்பிகையோ - சம்பந்தப்பட்டவங்களுக்கு கொண்டு போய் சேர்த்தா சரி.
சொன்னது… 8/03/2004 06:35:00 AM
என்.டி.ஏ. பெரிய மனது செய்து, சட்டசபைக்கு செல்ல முடிவெடுத்துள்ளது!
சொன்னது… 8/03/2004 01:41:00 PM
பாலா... சத்தமா சொல்லாதீங்க,
ரொம்பநாளா பாராளுமன்றம் போகாததால மறந்துபோய் நீங்க சொன்னமாதிரி சட்டமன்றம் பக்கம் போயிடப் போறாங்க.
சொன்னது… 8/03/2004 08:53:00 PM
ஹி..ஹி... நன்றி அன்பு :-)
'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்' என்று பாட்டுக் கேட்கவாவது போனால் சரிதான்.
சொன்னது… 8/04/2004 06:40:00 AM
கருத்துரையிடுக