மைக்ரோ ஒட்டக்கூத்தரின் தமிழோவியம் விமர்சனம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் - வந்தியத்தேவன் : என்னுடைய இளமைக் காலத்தைக் கிளறும் அருமையான கட்டுரை. நன்றி. rediff.com: Piperno is cause of Paes-Bhupathi split என்று கதைத்தாலும், மஹிமா சவுத்ரிதான் காரணம் என்று சொல்கிறார்கள் :-P
Where did the crazy 15/30/40 tennis scoring system come from? : Tennis scoring | Why are tennis games scored as 15-30-40?
இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி - பத்ரி சேஷாத்ரி : எம்.ஆர்.எஃப். ஸ்பின் அகாதெமியும் நடத்துகிறதா? இல்லையானால், ஒன்றை ஆரம்பிக்கச் சொல்ல வேண்டியதுதான் :-)
முத்தொள்ளாயிரம் : சோழன் வீதி உலா - என். சொக்கன் : ராஜாவை விதவிதமாகத் துதித்திருக்கிறார்கள். சோழன் மனங்குளிர்ந்து புலவர்களுக்கு பரிசு கொடுத்திருப்பார் :-)
>>>குளிர்ந்த மாலை அணிந்த சோழனை
சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த குளிர்ந்த மாலை வருகிறதே? அது எப்படி இருக்கும்? இப்பொழுது கிடைத்தால், சம்மருக்கு சௌகரியமாக இருக்கும்.
>>>நீல நிறக் குவளை மலர்கள்
குவளை மலரின் படம் போட்டிருக்கலாமே! இந்த மலருக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
கவிதை : அப்பியாசம் - வந்தியத்தேவன்: ஒரு சார்பை மட்டும், புரியாத மொழியில் இங்கு வெளியிட்டது வருந்த வைக்கிறது. குறைந்தபட்சம், எதற்காக இந்தக் 'கவிதை' எழுதப்பட்டது என்பதற்கான சுட்டிகளாவது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் :-(
3D கதைகள் : கறுப்பு வெள்ளை கனவுகள் : கலக்குங்க 'தகடு' குமார் :-)
நேர்கோட்டுப்பாதையில் இட்டுச் செல்லாமல், பலவழிப் பாதை கதைகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன். Recursive-ஆக எழுதி காய விட்டு விடாதீர்கள் ;-) வாசகர்களுக்கு அவ்வப்பொழுது வீட்டுப் பாடங்கள் மாதிரி, சில க்ளூக்கள், அவர்களையும் பங்குபெறச் செய்வது போன்ற பரிசோதனைகளையும் செய்து பார்க்கலாம்.
நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி.
கோடம்பாக்கம் : இசையமைப்பாளர் பரத்வாஜுடன் ஒரு பேட்டி - என்.டி. ராஜன் : ஏமாற்றம் அளிக்கும் பேட்டி :-(
எல்லாக் கேள்விகளுக்கும் மேலோட்டமான பதில்; 'தனிப்பட்ட ஒரு இசையமைக்கும் விதம்' என்றால் என்ன, எப்படி மாறுபட்டது என்று எல்லாம் உப-கேள்விகள் கேட்டிருக்கலாம்.
திரைவிமர்சனம் சுள்ளான் - கணேஷ் சந்திரா: நச்
காந்தீய விழுமியங்கள் : பால்ய விவாகம் - ஜெ. ரஜினி ராம்கி : எந்த கருத்துகள் 'யங் இந்தியா', எந்த கருத்துகள் காந்தியினுடையது, எது ஆசிரியருடையது என்பதை எளிதாக அறியமுடியவில்லை. color coding கொடுங்க ப்ளீஸ்.
ரஜினி ராம்கி இன்னும் கோர்வையாக எழுதுவாரே! :-)
இசை உலா : ஸ்டுடியோ 1234 வழங்கும் வாழ்க 'பாரதம்': அருமையான ஆரம்பம்; இனிமையான குரல்; தெளிவாகப் புரியக்கூடிய பாடல் வரிகள். ஏன் இன்னும் ஸ்ரீகாந்த் திரையிசைக்குச் செல்லவில்லை என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா!?
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
கொஞ்சம் monotony-யையும், சேர்ந்திசை வாசனையும் தவிர்த்திருக்கலாம் என்று என்னைப் போன்ற சினிமாப் பாடல்விரும்பிக்குத் தோன்றுகிறது!
தராசு : ஒலிம்பிக்கும் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும் - மீனா: ஏமாற்றம் தருகிறது தராசு. புளித்துப் போன மாவை மேலும் புளிக்க விட்டிருக்கிறீர்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லாமல், கேள்விகளால் மட்டுமே கட்டுரை நிரப்பப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கு ஒவ்வொரு குறிக்கோள். இந்தியாவுக்கு ஏழ்மையை நீக்குவது முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.
உங்கள் ஸ்டைலிலேயே சம்பந்தமில்லாத பின்குறிப்பு: பி.கு.விற்கும், மெயின் குறிப்புக்கும் சம்பந்தம் இருந்தால்தான் பின்குறிப்பு; இல்லாவிட்டால், அதற்குப் பெயர் 'தனி குறிப்பு' அல்லது 'உப குறிப்பு' :-)
சரித்திரங்கள் மீண்டும் நிகழும்; விபத்துகள்? - ரமா சங்கரன்: டாலே அல்ல... டேலி - (Daley, Richard Joseph. The American Heritage Dictionary of the English Language: Fourth Edition. 2000.)
எழுத்தாளர் பிரபஞ்சன் அளித்த பிரத்யேக பேட்டி - கணேஷ் சந்திரா: மிகவும் சுருக்கமான பேட்டி. ஆற அமர உட்கார வைத்து பேசியிருக்கலாம் ;-)
Thendral.com - 'தென்றல்' மணிவண்ணனின் பிரபஞ்சன் பேட்டி
- புதுமைப்பித்தனில் தொடங்குகிறதா நவீன இலக்கியம்?
- குழு மனப்பான்மை?
- பல்கலை.களும் பேராசிரியர்களும் படைப்பாளர்களும்
- சிற்றிதழ்களின் இடம்
- மரபும் புதுசும்
- படைப்பாளியாக என்ன படிக்க வேண்டும்?
- புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்க வேண்டிய தமிழர்கள்
- கல்கி போன்ற சிலர் ஏற்கனவே இருக்கும்போது, தமிழில் நீங்கள்தான் முதல் வரலாற்றுப் புதினம் எழுதியவர் என்று ஏன் அழைத்துக் கொண்டீர்கள்?
ஓடிப் போனானா ? - பகுதி 4 - ஹரிகிருஷ்ணன்: அருமை
பாராவின் காமெண்ட் - "பத்திரிகை ஆசிரியருக்கு வாரண்ட் அனுப்புவதெனில் பதவியின் பெயர், அதனைத் தொடர்ந்து ஆசிரியரின் பெயர் இரண்டையும் தெளிவாகக் குறிப்பிட்டே அனுப்புவார்கள். வாரண்டின் பிரதியொன்று அவசியம் பதிப்பாளருக்கும் போகும். மேற்படி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் 'குறிப்பிடப்பட்டிருந்த' ஆசிரியர் பேருக்குத்தான் வாரண்ட் சென்றிருக்கவேண்டும். பாரதியின் பெயர் வாரண்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்."
அள்ள அள்ளக் குறையாது... 3 - மதுரபாரதி : அருமை
Pl. keep it up
சொன்னது… 8/16/2004 12:15:00 AM
கருத்துரையிடுக