வெள்ளி, ஆகஸ்ட் 13, 2004

என்னை எழுதியவர்கள்

சத்யராஜ்குமார்

கதையை ஆரம்பித்த இடம் தப்பு. சிறுகதையைப் பொறுத்த வரை முடிவுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
-oOo-

அவர்கள் முதல் கடிதத்துக்கு நான் பதில் போட - " வானத்திலிருந்து நிலவு இறங்கி வந்து, மெழுகுவர்த்தியை வாழ்த்தி விட்டுப் போனது போலிருக்கிறது " என்று கவிதையாய் எனக்கு நன்றி சொன்னார்கள்.
-oOo-

முதல் கதை கேட்ட போது என்னிடம் அவர் - " தம்பி, நாவல் ரொம்ப திகிலா இருக்கணும். ரொம்ப கொடூரமா அதில் ஒரு கொலை இருக்கணும். ஏன்னா படிக்கிறவங்க தங்களோட நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாததை பத்திரிகைல படிக்கிறதுக்கு விரும்புவாங்க. " என்றதும், அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற மாதிரி அந்தக் கதையில் ஒரு வாலிபனின் மண்டை மேல் பாறாங்கல்லைப் போட்டு நச் நச்சென்று அடித்து மூஞ்சியை உருத் தெரியாமல் சிதைத்து - அதே கல்லைக் கட்டி அவனின் பிரேதத்தை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டிருந்தேன். அவனுடைய செத்த உடம்பை போலிசார் வெளியே எடுத்தபோது - மீன்கள் அரித்துத் தின்றது போக மிச்சம் மட்டும் கொச கொசப்பாய் வெளியே வந்தது என்று நான் வர்ணித்தது அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு