சனி, ஆகஸ்ட் 14, 2004

நன்றி: குமுதம்.காம்

தொல். திருமாவளவனுடன் ஒரு நேர் காணல்: "ஈழவிடுதலை, தமிழர் பாதுகாப்பு, திரைப்படங்களின் மூலமாக தினிக்கப்படும் தமிழர்களின் பண்பாட்டு சீரழிவிற்கு எதிர்ப்பு என வருகிறபோது எங்களுக்கும் பா.ம.க.விற்கும் ஒத்த கருத்துகளே நிறைந்திருக்கிறது."

குறிப்பு: உங்கள் கருத்துகளை திருமாவளவனுடன் பகிர்ந்து கொள்ளலாம். 94440 10076 , 24841720



சுள்ளான்: "படத்தில் மொத்தம் 59 சீன்கள். இதை 92 நாட்களில் சென்னை, வைசாக், பாண்டிச்சேரி, நியூசிலாந்து ஆகிய இடங்களில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு, வெளிநாடுகளுக்கு 19 பிரிண்ட், வெளிமாநிலங்களுக்கு 19 பிரிண்ட், இங்கே 118 பிரிண்ட் என மொத்தம் 156 பிரிண்ட் போட்டிருக்கிறார்கள். சென்னை கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியம் பகுதியிலும், ஏவி.எம்.ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ ஆகிய இடங்களில் தனுஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தார்கள்.

தினமும் நெற்றியில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி, அடிபட்ட வடு மாதிரியான மேக்கப் செய்துகொள்வாராம் தனுஷ். இதற்காக மும்பையிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் ஸ்பெஷலாக வரவழைத்திருக்கிறார்கள். பசுபதி தினமும் ஒரு ரீல் மட்டுமே டப்பிங் பேசுவாராம். அதுவும் மிகவும் உச்சஸ்தாயியில் டப்பிங் இருப்பதால், தொண்டை வலிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளை வாங்கி மென்றுகொண்டே இருப்பாராம்.


ஐய்யர் ஐ.பி.எஸ்: கவிஞர் பிறைசூடன் எழுதிய பாடல்...

‘‘டவலு டவலு டவலு பேபி
டவலு மட்டும் இல்லாங்காட்டி
அமுலுபேபி
கும்தலக்கா கும்மா அம்தலக்கா
அம்மா
போடு போடு போட்டு தாக்கடி
கும்மாங்குத்து குத்தி குத்தி
பட்டையை கிளப்படி’’


அசோகமித்திரன் பக்கம்:
  • உண்மையே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சொன்னால்தான் கவனிக்கப்படுகிறது.
  • வாசகச் சோதனையின் உச்சம் என்ற ‘உலிஸிஸ்’ நாவலைக் கூறலாம்.



காலபைரவன் கவிதை: மரணம் 1

அவர் திடீரென மறைந்து விட்டதாக
செய்தி வருகிறது.
மரணம் அப்படியன்றும்
திடீரென வந்து விடுவதில்லை
நள்ளிரவில்
நாயின் அழுகை
சாக்குருவியின் சிறகசைப்பு
கோட்டானின் கூவல்கள்
வழியாக மரணம் தன் வருகையை
நிச்சயப்படுத்துகிறது.
மரணம் தங்கள் வீட்டையே
வட்டமடித்ததாகக் கூறி அழும்
பெண்களின் அழுகை
மரணத்தின் வருகையை இன்னும் அடர்த்தியாக்குகின்றது.
அந்த ஊருக்கு
குறிப்பிட்ட அந்த தெருவுக்கு
பின் அந்த வீட்டுக்கு
மரணம் பல ஒத்திகைகளுடன்
வந்து சேருகிறது.
மரணம் ஒருவரை நெருங்கி விட்டதென்பதை
அவர்
உத்திரத்தைப் பார்த்து விடும் இறுதி மூச்சு
உறுதி செய்கிறது.
உரிய நேரத்திற்காக மரணம்
மிக நிதானமாக ஆனால் கவனமாக
காத்திருக்கிறது.
கடைசியில்
அந்த நபர் இறந்து விடுகிறார்.
மரணம்
ஒரு பூவைப்போல
அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறது.


மாலதி மைத்ரி: "ஆண்களைப் போல் அன்றி பெண்கள் எப்போதும் கூட்டமாகவும் துணையோடும் நெருக்கமாகவுமே பழகக் கூடியவர்கள். அவர்களுடைய ஒவ்வொரு சைகையும் ஆண்களுக்கு ஓர் அர்த்தத்தையும் தங்களுக்குள் வேறொரு அர்த்தத்தையும் நடித்துக் காட்டுகின்றன. தங்கள் உடலைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் பெண்கள் அதிக தடைகளற்றுப் பேசக்கூடியவர்களே. பெண்களுக்கிடையிலுள்ள அன்னியோன்யமும் நேசமும் காதலைவிடவும் காமத்தை விடவும் தீவிரமும் ரகசியமான மர்மமும் நிறைந்ததுமாகவுள்ளது. இதைப்பற்றி அவர்கள் குற்றவுணர்வு கொள்வதில்லை.

ஒவ்வொரு கிராமத்துப் பெண்ணும் தனது தோழிகளைக் காதலனைவிடவும் கணவனை விடவும் நேசிப்பவளாகவே உள்ளுக்குள் இருக்கிறாள். ஆண், அவள் மீது கவிழ்க்கும் பாலியல் வலிமையோ, காவியக் காதலோ இந்த நேசத்தை அழிக்க முடியாதவை. இது உள்ளுக்குள்ளிருந்து ஒவ்வொரு பெண்ணையும் எல்லாத் துயரங்களையும் வலிகளையும் தாண்டி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேசமென்பது பாலியலையெல்லாம் தாண்டிய தீவிரத் தன்மையுடையது. இதில் உடல் சார்ந்த நெருக்கம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மனநெருக்கமும் இன்பமும் உள்ளுக்குள்ளே இருந்துக்கொண்டேயிருக்கிறது.

தன் மீது ஏதேச்சையாக மோதிய ஒருவன் மீது ஒரு இளம்பெண் தீராத காதல் கொண்டு, உடனே ஸ்லோமோஷனில் பறந்து தன்னுடலைக் குலுக்கி ஆடுவதாகக் காட்டுவதைவிட பெண் தன்பால் காதல் திரையில் காட்டப்படுவது பெரிய ஆபாசமொன்றுமில்லை. முன்னது பண்பாட்டு ஆதரவுப் பெற்றது. பின் நிகழ்வு இவர்களை ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்கிறது. அது என்ன? இவர்களுடைய புனித குடும்பம் என்ற கற்பனையுலகம் இங்கு கேள்விக்குள்ளாகிறது. ஆணின் உறவை மீறி ஒரு பெண் செல்ல முடியும் என்ற உண்மை இவர்களை முகத்தில் தாக்குகிறது.

தன்பால் காதலோ, எதிர்பால் காதலோ எதுவானாலும் காட்சிப்படுத்தி விற்கப்படுவதற்கானவை அல்ல. எதிர்பால் காதலைப்போல தன்பால் காதலும் இயல்பானதுதான். (அதனால்தான் பல நாடுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது). இது இயற்கைக்கு புறம்பானது என்று சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இனப்பெருக்கத்துக்கு உரிய சேர்க்கை மட்டுமே இயற்கையானது. காதல், காமம், அன்பு, நட்பு, குடும்பம், ஒழுக்கம், சட்டம், மதம் எல்லாம் இயற்கைக்கு புறம்பானதே."


நினைவில் பதித்த சுவடுகள் - வாஸந்தி:
  • ‘‘நல்ல வேளை காந்தியை ஒரு முஸ்லிம் சுடல்லே’ என்றாள் என்னிடம். ‘சுட்டிருந்தா ரொம்ப பெரிய கலாட்டா நடந்திருக்கும். முஸ்லிம்களை இந்துக்கள் க்ளோஸ் செய்திருப்பாங்க’’ என்றாள். நானும் க்ளோஸ் ஆகியிருப்பேன்’’ என்று அவள் சொன்னபோது ‘சீ அப்படிச் சொல்லாதே’ என்று அவளைக் கட்டிக் கொண்டு நான் அழுதேன்.

  • பெண்ணியம் என்ற வார்த்தையைக் கேள்விப் பட்டிராத என் பாட்டி, மாசற்ற சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்ன ராமனின் அநியாய கோபத்தை ஏற்ற இறக்கத்துடன் விவரிக்கும்போது என் நெஞ்சு பதறும். கர்ப்பிணி சீதையை நாடு கடத்த ஆக்ஞை இட்டதும் ‘என்னைப் பெற்ற தாயே என்னை ஏற்றுக்கொள்’ என்று சீதை பூமா தேவியைக் கேட்ட அவலத்தைப் பாட்டி உருகி உருகிச் சொல்லும்போது நாங்கள் உள்ளம் வெடித்துக் கண்ணீர் விடுவோம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு