வியாழன், ஆகஸ்ட் 19, 2004

நேசமுடன் - ஒழுக்கம்

ஒழுக்கம் - இது வேறு

அதுவும் குறிப்பாக ஆணின் குரலாகத்தான் இது எங்கும் ஒலிக்கிறது.


இந்தியாவில் இந்த கருத்து உண்மையாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஆண்களும், பெண்களும் சம அளவில் 'ஒழுக்கக் கேட்டு'க்காக விமர்சிக்கப் படுகிறார்கள். ஜனரஞ்சகம் என்றால் கிசுகிசு, அந்தரங்கத் தகவல்கள், கிளுகிளுப்பான வர்ணனை என்பதை எழுதப்படாத விதியாகவே அனைத்து ஊடகங்களுக்கும் வைத்துக் கொடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி 'ஒழூங்கீனங்களை' அம்பலப்படுத்துவதாக கடந்த நாட்களில் அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்ட விஷயங்கள் சில:

* ஜேம்ஸ் பாண்ட் நாயகி, 'Catwoman' ஹாலி பாரியின் கணவர் எரிக் பெனெ வேறு சிலருடன் உறவு கொண்ட விவகாரம். எங்கே ஊர் சுற்றினார்கள் என்பதை ஆர்வத்துடன் எழுதினார்கள்.

* 'Kill Bill' நாயகி உமா தர்மனின் காதலர் ஈதன் ஹாக், கனேடியன் மாடலுடன் காணப்பட்டதால், காதல் உடைந்த விஷயம். ஆஸ்கார் விருது பெற்ற 'Training Day' போன்ற படங்களில் ஈதன் ஹாக் நடித்துள்ளார்.

* முன்னாள் உலக அழகி மற்றும் நடிகை வனேஸா வில்லியம்சூக்கும் ரிக் ஃபாக்ஸுக்கும் இடையேயான விவாகரத்து மனு. ஏன் மணமுறிவு கோரினார் என்ற விவரமான அலசல்கள்.

இதே போல் கூடைப்பந்து நட்சத்திரம் கோபி ப்ரையண்ட், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸுக்கும் அவரது காதலிக்கும் நடக்கும் அந்தரங்கங்கள் போன்றவற்றையும் அமெரிக்கப் தினசரிகளும் பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதுகிறது.

என்னுடைய கேள்விகள்:

1. இருபாலாரும் ஒழுக்கக்குறைவு ஏற்படக் காரணகர்த்தாக்களாக சுட்டிக் காட்டப்படுவது விரும்பத்தக்க மாற்றமா?

2. மணமுடித்தபிறகு மற்றவரின் மேல் ஈர்ப்பு வந்தால் அது ஒழுக்கக் குறைவா?

3. வாய்ப்பு இருப்பதால் பயன்படுத்திக் கொள்வோரும், வாய்ப்புக் கிடைக்காததால் படித்துத் தீர்த்துக் கொள்வோரும் ஒரே ரகம்தானே?

4. ஆண்களுக்கானப் பத்திரிகையில் பெண்ணும், பெண்களுக்கானப் பதிப்புகளில் ஆணும் போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டால் 'equal opportunity discrimination' என்று சொல்லலாமா?

5. டாக்டர் பிரகாஷ், பிரேமானந்தா போன்ற தவறிழைத்த ஆண்களை விவரணப்படுத்தியும், சிம்பு போன்ற நடிகர்களை கொச்சைப்படுத்தியும் ரிப்போர்ட் வருகிறதே?

கற்பனை செய்து கதை கட்டிப் பேசுவதில் சுகம் காண்பவர்கள் எல்லா நாடுககளிலும், ஆண், பெண் இருவர்களிலும், இருக்கிறார்கள். இந்தியப் பாரம்பரியம் என இல்லாமல் உலகளாவிய அளவில் ஆண் அத்தனை பேரும் ஸ்ரீராமன் என்று கற்பனை கொள்வதைப் போலவே பெண் அத்தனை பேரும் சீதை என்றும், சலனமே ஏற்படதாவர்கள் என்றும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

-பாஸ்டன் பாலாஜி

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு