நகைச்சுவை தவிர
கையில் நாற்பத்து நாலே ரூபாய் - ரா கி ரங்கராஜன்: "முன்பெல்லாம் கைதிகள், குற்றவாளிகள் என்றால் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இங்கே குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதைக் காண மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சமுதாயச் சீர்கேட்டுக்கு யாரைக் குற்றம் சொல்வது?"
இங்கே ஒரு பட்டிமன்றம் பாரீர் - துக்ளக் சத்யா:
நடுவர் கான்ஸ்டபிள் கந்தசாமி: 'இலக்கியத்திலே குழப்பங்கள் ஏற்படப் பெரிதும் காரணம் ஆண்களா, பெண்களா?'-ன்னு தலைப்புக் கொடுத்திருக்காங்க. இது ஒரு மாமூலான பட்டி மண்டபம் இல்லை. மாமூல் மாறி இருக்கிறது. உங்க கம்ப்ளெய்ண்ட்ஸெல்லாம் பதிவு பண்ணிக்கிறேன். கடைசியிலே, எப்படித் தீர்ப்பு சொல்லணும்னு உத்தரவு வருதோ, அப்படியே தீர்ப்புச் சொல்லிடறேன். இப்ப கேஸ் எப்படிப் போவுதுன்னு விட்னெஸ் பண்றதுதான் என் வேலை.
லெண்டிங் லைப்ரரி: "குடும்ப நாவல் - ஜூலை வெளியீடு./அவள் விகடன் - ஆகஸ்ட் 13, 2004/ஆனந்த விகடன் 15.08.2004"
இரண்டாவது விமர்சகன் - நா. பார்த்தசாரதி: "தனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி - முடிவில் அந்தப் பொய்களும், அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் - அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப்புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. பரந்த சிந்தனையும் மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற போது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகராகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன."
அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை:
"நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு
- குறள்"
நன்றி: appusami.com
அத்தாளநல்லூர் ஆண்டாள் - kalki: வெளியேறுகையில், இந்தியாவின் எண்ணற்ற அத்தாளநல்லூர்களையும், அடிப்படை வசதிகள்கூட இன்றி அவற்றில் வாழ்ந்து, இறைப்பணி செய்யும் பட்டர்கள், குருக்கள்மாரையும் எண்ணி நன்றி செலுத்தத் தோன்றுகிறது. இந்த தேசத்தின் பண்புகளோடு உயரிய எளிமையையும் கட்டிக் காப்பவர்கள் அல்லவா...?
கருத்துரையிடுக