புதன், செப்டம்பர் 01, 2004

போஸ்

ஸ்ரீகாந்த், ஸ்னேஹா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்குநர்: 'தயா' செந்தில் குமார்


1. நிஜமா நிஜமா - 3.5/4 - கேகே, ஷ்ரேயா கோஸல் - நா முத்துகுமார்
ரொம்ப பிடிச்சிருக்கு. அப்பா 'பெரிய' ராஜாவின் ஸ்டைலாகவும் இல்லாமல், அதிரடி வேகமாகவும் அதிராமல், பாடல் முழுக்க மேற்கோள் சொல்லக்கூடிய வரிகள், ரிகர்ஸிவ் ரிபீட் செய்யவைக்கிறது.

2. என்ன என்ன ஆச்சு - 1/4 - தேவன், மாதங்கி - பா விஜய்
முதலில் காதல் தேசத்தின் 'ஹலோ டாக்டர்'. அடுத்து இந்தப் பாடல்... டாக்டர் என்று வந்தாலே, அந்தப் பாடல் எனக்கு அதிகம் ரசிக்காமல் போகிறதோ என்று பயமாக இருக்கிறது. (வசூல் ராஜாவை விட்டுவிடலாம்)

3. வைத்த கண் - 3.25/4 - மது பாலகிருஷ்ணன், ஸ்ரீவர்த்தினி - பா விஜய்
நியுவின் 'சர்க்கரை இனிக்கிற சர்க்கரை' மாதிரி இருக்கிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால், அதை விட ஆர்வமான ஆரம்பம் + பெட்டர் ப்ரெஸெண்டேஷன். ஆண் குரலுக்கு மீண்டும் 'நிஜமா நிஜமா' கேகே --> ஸ்ரீகாந்த் ஆகியிருக்கலாம். பா விஜய்-க்கு யாராவது ஆக்ஸிஜன் கொடுப்பது அவசியம். ரீங்காரமிடும் இசை, கனவுலக ஆடைகள் என்று மின்னப்போவதில், பாடல் வரிகள் மட்டும் இளிக்கிறது.

4. டோலி டோலி - 2.5/4 - ஷாலினி சிங் - தாமரை
மாதவனுக்கு 'டோல் டோல்'; 'டோலி டோலி' ஸ்னேஹா அறிமுகப் பாடலாக இருக்கும்.

5. பொம்மலாட்டம் - 2.75/4 - கார்த்திக், சித்ரா சிவராமன் - பா விஜய்
ஏட்டிக்கு போட்டி டப்பாங்குத்து டூயட் இல்லாத காஸெட்டா? ஆனால், பிசாசு, ராட்சஸி எல்லாம இல்லமல் ஸ்னேஹாவின் சுங்கிடிச் சேலையும், ஸ்ரீகாந்த்தின் தார்ப்பாய்ச்சி வேஷ்டியும் செய்யும் சில்மிஷடத்துடன் கவரும்.

நன்றி: RAAGA - Bose - Tamil Movie Songs

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு