இணையப் பொறுக்கன்
1. Association Visa pour l'image - exhibitions: ஆகஸ்ட் 28 முதல் செப். 12 வரை நடைபெறும் நிழற்பட திருவிழா. நுழைவு கட்டணம் கிடையாது (ஃப்ரான்ஸுக்கு விமான கட்டணம் கொடுப்பதில்லை :-)). பங்குபெறுவோர்: 270; 1989 முதல் நடக்கும் கண்காட்சியில் 1,649,098 பார்வையிட்டுள்ளனர். பங்குபெறும் புகைப்பட நிபுணர்களின் நேர்காணல்கள், அஸோசியடட் ப்ரெஸ் போன்றவர்களின் படம் எடுத்த கதைகள் ஆர்வமூட்டுகிறது.
2. *38: தவணையை கட்ட மறந்து விட்டோம். பிள்ளையார் கோவில் காணிக்கையை தொலைபேசியில் கேட்டு தொணப்புகிறார்கள். தப்புவது எப்படி? அமெரிக்காவில் *38 என்று தடவி தொல்லை கொடுக்கும் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டால் போதும். அந்தத் தொலைபேசியில் இருந்து கூப்பிட்டால், உங்கள் வீட்டில் மணியடிக்காது. விடுதலை! இது பழைய செய்தி... முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்கவும், கமல் வீட்டில் இருக்காரா என்று ரசிகர் அறியவும் இதனால் கஷ்டமாக இருந்தது! இப்பொழுது அவற்றில் இருந்து தப்பிக்க '*38' புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக தொலைபேசியில் முகமூடி போடலாம் வாங்க :-)
3. விஜய் சிங்: டைகர் வுட்ஸுக்கு சரியான போட்டியாக இருந்தும், கோல்ஃப் உலகின் புதிய ராஜாவாக இருந்தும், விஜய் சிங் குறித்து (அமெரிக்க) ஊடகங்கள் அதிகம் எழுதுவதில்லை. பாஸ்டன் க்ளோப் அலசுகிறது. விடாமுயற்சியினால் வெல்லும் இந்தியர்.
4. தலை பத்து பாடல்கள்: வலையில் இருந்து இறக்கப்படும் பாடல்களை ஏளனமாக பார்த்த காலம் போயே போச்சு. அவ்வாறு மிக அதிகமாக உள்ளூர் கணினிக்கு இறக்கப்பட்ட பாடல்களின் தலை இருபது பட்டியலை பிபிசி வெளியிட ஆரம்பித்திருக்கிறது.
5. The Motorcycle Diaries: சேகுவாராவை குறித்த படம். ஐஷ்வர்யா கலந்துகொண்ட கேன்ஸ் திரைப்படவிழாவில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பெர்னலின் முந்தைய இரு (Amores Perros & Y Tu Mamá También) படங்களையும் ரசித்ததாலும் பார்க்கவேண்டிய படம்.
6. ஃபோர்ட் புஷ் & பி.எம்.டபிள்யு கெர்ரி: ஒருவரை குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்று அறிந்து கொள்ள, நமக்கு அதிகம் அறிமுகமுடைய பொருளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கவேண்டும். ஜெயலலிதா எனறவுடன் என் நினைவில் பிராண்ட் - ஆடம்பரமான ரோல்ஸ்ராய்ஸ் கார். கலைஞர் என்றவுடன் சாதாரணர்களின் பாட்டா ஹவாய் செருப்பு. ப. சிதம்பரத்திற்கு 'காம்ப்ளான்'. இந்த ஒப்புமைப்படுத்தலின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவையும் படித்தால் இன்னும் விரிவான சந்தைப்படுத்தப்படும் பொருட்களும், மனநிலையும், பொதிந்திருக்கும் குணாதிசயங்களின் அலசலும் கிடைக்கும்
7. குடியரசு கட்சி மாநாடு: ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட தலைபத்து ஆச்சரியங்கள். என்னுடைய மிகப் பெரிய ஆச்சரியம் (அல்லது பொறாமை), நடுநிலையான தொலைக்காட்சி ஒளிபரப்புதான். முக்கிய நிறுவனங்களான ஏபிசி, என்.பி.சி., சி.பி.எஸ்., சி.என்.என். இன்ன பிறர், இரண்டு கட்சிகளின் மாநாட்டையும் பாரபட்சமின்றி காண்பித்தது; மாற்று அலசல்களை, பேட்டிகளாக வரவழைத்தது; கேள்விக்குரிய பேச்சுகளை உரியவரிடம் நேரடியாக சந்தேக நிவர்த்தி அளித்தது; வெற்றுச் சவடால்களை கோடி காட்டியது; ஆக்கபூர்வமான விவாதங்களை நோக்கி பங்குபெறுவோர்களை திசை திருப்பியது; எல்லாமே பாராட்டத்தக்கது.
8. Cornelius Horan - Vanderlei de Lima: 'வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் உலகுக்கு' என்று பாடல் எழுதிவிடலாம். ஆனால், மாராதான் 26.2 மைல் (42.16 கிமீ) ஓடும் வழியில், முடிக்கப்போகும் தருணத்தில், பிரேசில் நட-ராஜாவை, தடுத்து நிறுத்தி பதக்கத்தை நழுவ வைத்திருக்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒண்ணரை பில்லியன் செலவழித்தாலும் இவற்றை தடுக்க முடியாதோ? (அமெரிக்க ரகசிய போலீஸ் கூட ஏதன்ஸில் இருந்ததே... அதற்கான செலவை யார் கவனித்துக் கொண்டார்கள்? அமெரிக்காதான் என்றால், அவர்கள், மற்ற நாட்டின் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்பட்டார்களா?)
9. SCOTTeVEST: என்னுடைய செல்பேசி, கைக்கணினி, எம்.பி3 லாகிரி வஸ்துக்களை கையிலும் வைத்துக் கொள்ள இயலாமல், பாக்கெட்டிலும் பிதுங்க வைக்காமல், பெட்டிக்குள்ளும் மறந்திருக்க இயலாமல் இருப்பது வருந்த வைக்கும். இப்போது, அமெரிக்க உளவுத்துறையில் பயன்படும் ஆடைகள் சில, சாமானியர்களுக்கும் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.
10. மோசமான காரோட்டி யார்?: லிண்டா குட்மேன் படித்து பயன் பெற்ற கல்லூரி கால நினைவுகளைத் தட்டி எழுப்புகிறார்கள். நான் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கிறேன் என்பது வருத்தமான விஷயம். என்னை விட என் மனைவி நன்றாக வண்டி ஓட்ட மாட்டாள் என்பது உண்மையான விஷயம் ;-)
Y tu mamá también = Summer 42 + அழியாதகோலங்கள் :-)
Amores Perros = ¬Ô¾ ±ØòÐ (±ý¸¢È£/È¡÷¸û; ¿¡ý À¡÷ì¸Å¢ø¨Ä)
Gael García Bernal in "El Crimen del padre Amaro" = Christian Slater in "The the Name of Roses"
சொன்னது… 9/03/2004 12:07:00 PM
>> Y tu mamá también = Summer 42 + அழியாதகோலங்கள் :-)
ஆனாலும் ஆரம்ப ஸீனே அப்படி ஆரம்பிப்பது ;-) நான் இன்னும் 'அழியாத கோலங்கள்' பார்க்கவில்லை :-( 'ஒய்-து' என்ன சொல்ல வருகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை. விடலைப் பருவத்தில் 'எல்லாமே சகஜம்' என்கிறார்களா; 'வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பார்த்து விடு' என்கிறதா; 'இருபதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்' எனக் கேட்கிறார்களா; என்று இன்னும் குழப்பம்.
>> Amores Perros = ஆயுத எழுத்து (என்கிறீ/றார்கள்; நான் பார்க்கவில்லை)
எந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை சார்?? அமோரஸ்- இறந்த/நிகழ்/எதிர் காலங்களை நாய்களைக் குறியீடாகக் கொண்டு வாழ்க்கையை விவரணப்படுத்துகிறது. ஆ.எ-க்கும், அ.பெ-க்கும் உள்ள ஒரே ஒற்றுமை: ஒரு விபத்தினால், எவ்வாறு மூவர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமே.
ஆ.எ.: டெக்னிகலாக புதுப்படம்; அக்மார்க் தமிழ் சினிமாத்தனங்கள் நிறைந்திருப்பதில் பழைய படம்.
அ.பெ: 'இந்த நிமிடத்திற்கும் அடுத்த நிமிடத்திற்கும் உள்ள வாழ்க்கையின் வித்தியாசங்களை மூன்று தட்டு மக்களைக் கொண்டு, கொஞ்சம் புத்திமதி கலந்து சொல்லும் படம்?
>>Gael García Bernal in "El Crimen del padre Amaro" = Christian Slater in "The the Name of Roses"
ரெண்டுமே பார்க்கவில்லை; நெட்ஃபிளிக்ஸில் சேர்த்துவிட்டேன் :-D நன்றி.
சொன்னது… 9/03/2004 12:47:00 PM
கருத்துரையிடுக