கவிதாசரண்
என்.டி.ராஜ்குமார் - ஒடக்கு
ஆடுகிற சாமியை இடுப்பினைப் பிடித்திழுத்து
என் பிள்ளைகளுக்கும் எனக்குமொரு
நல்ல கெதியைச் சொல்லிப்போ
இல்லேன்னா ஒனக்கு இனிமே
சோறு தண்ணிபூச ஒண்ணும் கிடையாது
உள்ள போட்டு கோவில் நடைய
இழுத்தடைச்சுப் போடுவேன் என்று
அதிகாரத்தோடு சொல்ல
என்ன நம்பு உனக்கு நானுண்டு
எனச்சொல்லி
திருநீர் இட்டுக் கொடுப்பான் சுடலை
எனது பாட்டிக்கு.
இப்படியாகத்தான் எங்கள் காட்டு தெய்வங்களோடு
சண்டையிட்டுக் கொள்வோம்
அன்யோன்யமாய்
வெளி வந்த இதழ்: கவிதாசரண் ஆக.-செப்., 2002
கருத்துரையிடுக