வெள்ளி, அக்டோபர் 15, 2004

ஒற்றை வரி எண்ணங்கள் - ஆனந்த விகடன்.காம்

விகடனில் நல்ல கதைகள் வருவதில்லை என்று யார் சொன்னது? வித்தியாசமான பிண்ணனியில் எளிமையான கதை; நரசய்யாவின் முத்திரை அட்வைஸோடு

பிராயச்சித்தம் - நரசய்யா
"இன்னிக்கு பாப் நேராக நிக்கறாப்பல போட்டிருக்கான். அப்படின்னா ஒண்ணு இருக்கும்!" என்றான். அவன் குறிப்பிட்டது, அப்போது சட்டா என்றழைக்கப்பட்டு பலரும் ஆடிவந்த சூதாட்டம். காட்டன் நம்பர்களைப் பற்றியது. ஓபனிங் க்ளோஸிங் நம்பர்கள் -- தினமும் அதில் பந்தயம். அதற்குத் துணையாக ஒரு யுக்திதான் இது! நான் சும்மா இருக்கவில்லை. "ஏன் அப்படிச் சொல்றே? இன்னிக்குப் பாரு, 2 -- 3 தான் வரும்" என்றேன். அது பற்றி ஒரு விஷயமும் தெரியாத நான் சொன்னதை அவன் அப்படியே நம்பிவிட்டான். "2 -- ஓபனிங்... 3 க்ளோஸிங் அப்படித் தானே?"

‘‘செயின்ட் அகஸ்டின் சொல்லி இருக்காராம்... ‘நீ ஞானஸ்நானம் செய்விக்கப் பட்டவனாயிருந்தால், ஆண்டவனின் எல்லாக் கட்டளைகளுக்கும் அடங்கி வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அதற்காக வாழ்நாள் முழுவதும் ஒருவன் தவறே செய்யாமல் இருப்பான் என்று நான் சொல்லவில்லை. ஞானஸ்நானம் அந்தச் சிறிய தவறுகளை மன்னித்து, அவனைப் பரிசுத்தனாக வைத்திருக்கும். அதற்கு நீ தினமும் செய்யும் பிரார்த்தனையே போதும். சிறிய தவறுகள் மன்னிக்கப்பட்டு, உன்னை ஆண்டவன் ஏற்றுக்கொள்வார். ஆனால், இயேசுவின் தேகத்தினின்றும் உன்னையே அகற்றிக்கொள்ளும்படியான பெரிய தவறுகளைச் செய்யாதே! அப்படிச் செய்தால் அதற்குப் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும்...' இதைச் சொல்லிவிட்டு அந்தப் பாதிரியார் எனக்குப் பெரிய தவறுகள் எவை என விளக்கினார்..." மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டு தன்னையே மறந்தவனாகி யோசனையில் ஆழ்ந்துவிட்டான் அவன். நானும் அவனைத் தொந்தரவு செய்யாது பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.கவர்ச்சி - ஆனந்த் ராகவ்:
என்ன சார்... நீங்களுமா! செட் தோசை


கேள்வி - பதில் - ஹாய் மதன்:
ரெ.வேல்முருகன், சீர்காழி.
விஷ பாட்டிலிலேயே விஷம் அல்லது Poison என்று எழுதி, மண்டை யோட்டுக் குறியீடு போட்டிருப்பதாகக் காட்டுவதைத்தானே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அபத்தக் காட்சியாகக் கருதமுடியும்?


அதை 'பி' காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு 'க்ளோஸப்'பில் காட்டினால்தானே, நீங்கள் பதறுவீர்கள்?! 'தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்' என்று Yellow Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக (ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!

அடுத்த நியூஸ் மேட்டர் படிக்கலியா மதன் சார்?


சந்திரமுகி:
படத்தின் ஆரம்பமே அமர்க்களம்தான். டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் என எல்லா மாநிலங்களின் தலைநகரங்களைக்காட்டி அங்கே உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் படுத்துக் கிடப்பார்கள். ‘யாராலேயும் குணப்படுத்த முடியலியே" என்று டாக்டர்கள் கையைப் பிசைந்தபடியிருக்க, ‘இவங்களைக் குணப்படுத் தணும்னா அதுக்கு ஒரே ஒருத்தர் இருக்கார். அவருதான்..." என்று சொல்ல, ரஜினி என்ட்ரி. அதிரடி வைத்தியத்தில் அத்தனை பேரையும் காப்பாற்றுவாராம் ரஜினி.

கடைசியில், சென்னையில் சித்தப் பிரமை பிடித்தவர்போல, பிரபுவின் மனைவி சிம்ரன். பிரச்னை என்ன என்று பல டாக்டர்கள் சோதித்துப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘‘நீங்க எல்லோரும் போங்க. அவர் வந்து காப்பாத்துவாரு" என்கிறார் பிரபு. உடனே சுற்றியிருப் பவர்கள், ‘‘ஆமா, அவரு எங்க வர? எப்போ ட்ரீட்மெண்ட் குடுக்க? குடுத்தாலும் எடுபடுமா? அவரு வந்தும் குணமாகலேன்னா?" என ஆளாளுக்குக் கேள்விகள். ‘‘அவர் எப்போ வருவார்... எப்படி வருவார்னு யாருக்குமே தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல வந்து நிப்பார். இப்போ பாருங்க" என ரஜினியின் பிரபல வசனம் சொல்லி, பிரபு அர்த்தத்துடன் சிரிக்க, புயலாக ரஜினி தரிசனம்.

‘‘தாங்க்ஸ் குரு" என்று ரஜினிக்கு பிரபு செல்லமாக முத்தம் கொடுக்க... ‘‘அதான் வந்துட்டேன்ல, தாங்க்ஸ் எனக்கில்ல..." என்று விரல் உயர்த்தி வானம் காட்டுவாராம் ரஜினி. ‘‘உங்க வாய்ஸ் எடு படலைனு சொன்னாங்களே குரு" என்று பிரபு கேட்க, ‘‘இப்போதானே கண்ணா ரியல் ஆட்டமே ஆரம்பம்" என பஞ்ச் வைப்பாராம்.

யாராவது ரஜினி சாருக்கு 'தம்பிக்கு எந்த ஊரு' போட்டுக் காட்டி எப்படி ஹிட் படம் எடுப்பது என்று சொல்லுங்கப்பா... 'முருகா காப்பாத்து! இதை முடிஞ்சா மலையேத்து... கந்தா காப்பாத்து!'

2 கருத்துகள்:

Á¨Ä¡Çò¾¢ø ·À¡º¢ø Ó츢 þÂìÌÉḠþÕì¸, º¢À¢ Á¨Ä¢ø, ÁÐ §À¡ýÈ 5 º¢Èó¾ þÂìÌÉ÷¸Ç¡ø ¸ÄóÐ þÂì¸ôÀð¼ «üÒ¾Á¡É¦¾¡Õ À¼õ Á½¢îº¢òþ¡ú. §„¡ÀÉ¡×ìÌ º¢Èó¾ ¿Ê¨¸ì¸¡É §¾º¢Â Å¢ÕÐ Å¡í¸¢ò ¾ó¾ À¼õ. «ÅÃÐ ¿ÊôÒ, ´Õ º¢Ä þ¼í¸Ç¢ø, ¿ÁìÌ Á¢÷측ø¸û Ìò¾¢ðÎ ¿¢ü¸ ¨ÅòРŢÎõ. «¾¢ø §Á¡¸ýÄ¡ø «¦Áâ측ŢĢÕóÐ ÅÃŨÆì¸ô ÀÎõ Á§É¡¾òÐÅ ÁÕòÐÅ÷. «Å÷ À¼ò¾¢ø ¸¢ð¼ò¾ð¼ À¡¾¢ §Å¨Ç¢ø¾¡ý ÅÕÅ¡÷. «ÅÃРú¢¸÷¸Ç¢ý ±¾¢÷À¡÷ôÒ째üÀ «ÅÃРѨÆ×ì ¸¡ðº¢Â¢ø àû ¸¢ÇôÒÅ¡÷. «Ð×õ À¼ò§¾¡Î ´ðÊ Ãº¢ì¸ò¾ì¸Å¡§È þÕìÌõ. ¾¢ÕÁ½Á¡É×¼ý, Á¨ÉÅ¢Ô¼ý ¸¢ÃÁ¡òÐìÌ ÅÕõ ¦ƒÂáõ, âðÊì ¸¢¼ìÌõ ¾ÉÐ ÀÃõÀ¨Ã Àí¸Ç¡Å¢ø Á¨ÉÅ¢Ô¼ý ¾íÌÅ¡÷. «ô¦À¡ØÐ «í¸¢ÕìÌõ ´Õ ¾Á¢úô §Àö, §„¡ÀÉ¡¨Å À¢ÊòРŢ¼, §„¡ÀÉ¡ ¦ºó¾Á¢Æ¢ø '´Õ Ó¨È ÅóÐ À¡÷ò¾¡Â¡' ±ýÚ À¡ð¦¼øÄ¡õ À¡¼ ¬ÃõÀ¢òРŢÎÅ¡÷. À¢ýÉ÷ Á§É¡¾òÐÅò¾¢ø À¢¦†îÊ Å¡í¸¢Â §Á¡¸ýÄ¡Öõ, Á¡ó¾¢Ã£¸ò¾¢ø À¢ÃÀÄÁ¡É ¾¢Ä¸Ûõ §º÷óÐ ±ôÀÊ §„¡ÀÉ¡×ìÌô À¢Êò¾ §À¨Âô §À¡ì̸¢È¡÷¸û ±ýÀо¡ý Á£¾¢ì ¸¨¾. ¾¢¸¢¨ÄÔõ, ¸¡ÁʨÂÔõ ¾ì¸ Å¢¸¢¾ò¾¢ø ¸Äó¾ ´Õ «Õ¨ÁÂ¡É À¼õ Á½¢º¢òþ¡ú. ¦À¨ç À¡Õí¸û ±ôÀÊ ¸Å¢òÐÅÁ¡¸ þÕ츢Ȧ¾ýÚ.

ºÃ¢, «ó¾ì ¸¨¾ þôÀ ±ÐìÌ ±ýÚ §¸ð¸¢È£÷¸Ç¡? ºó¾¢ÃÓ¸¢ «¨¾ ¯ø¼¡ Àñ½¢ ±Îì¸ô Àð¼ À¼õ ±ýÚ §¸ûÅ¢. «¾üÌò¾¡ý ´Õ ±îºÃ¢ì¨¸Â¡¸ þÕì¸ðΧÁ ±ýÚ Á½¢îº¢òþ¡¨Æô ÀüÈ¢ ¦º¡øÄ¢ ¨Åò§¾ý. º ӨŠÀ¡÷òРŢðΠ¡Õõ Á º¢ ¾¡¨Æô ÀüÈ¢ ¾ôÀÀ¢Ã¡Âõ ¦¸¡ñΠŢ¼ì ܼ¡Ð À¡Õí¸û. «¨¾ô À¡÷ò¾Å÷¸û ºó¾¢ÃÓ¸¢ Àì¸õ ´Ðí¸¡Áø þÕôÀÐ «Å÷¸û À¢ À¢ ìÌ ¿øÄÐ. À¡÷측¾Å÷¸û, ºó¾¢ÃÓ¸¢ ÅÕŦ¾üÌ ÓýÒ ´Õ Ó¨È Á º¢ ¾¡ ¨Å Ê Å¢ Ê ±ÎòÐô À¡÷òРŢÎí¸û. ´Ã¢ƒ¢ÉÖìÌõ ¿¸ÖìÌõ ¯ûÇ Å¢ò¾¢Â¡ºõ ÒâÔõ. †¤õ ¿øÄ º¢É¢Á¡ì¸¨Ç «ôÀʧ ÍõÁ¡ Å¢ðÎ ¨Åì¸Ä¡Á¡ ±ýÉ? §„¡À¡¨É Å¢ð¼ô §Àö þôÀ þÅ÷¸¨Ç À¢ÊòÐ ¬ðθ¢ÈÐ §À¡Öõ.

«ýÒ¼ý
º.¾¢ÕÁ¨Ä

அப்படிப் போகுதா கதை ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு