திங்கள், அக்டோபர் 18, 2004

வீரப்பன் வீரமரணம்

Just for Navarathri Continuity :-) Nothing relevant1. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?

2. அமெரிக்கத்தேர்தல் சமயத்தில் ஒஸாமா பிடிபட்டால், கெர்ரிக்கு பாதகம். ஆனால், தற்போதைக்கு அவன் மாட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. சதாம் போல், வீரப்பன் போல் திடீர் என்று நவ. 2-க்கு முன் காட்சியளிக்கலாம்.

3. சேத்துக்குளி உட்பட பலரும் 'என்கௌண்டர்' ஆகியிருக்கிறார்கள்.

4. சுட்டுக் கொல்லப்படாமல், உயிரோடு பிடித்திருந்தால், நிறைய பின்புலம் தெரிய வந்திருக்கும். வீரப்பனின் ஸ்விஸ் வங்கியெண் என்ன?

Is Jaya Durga Mata5. நீதிமன்றங்களில் ஆஜர் செய்வித்திருந்தால் -- பூலான் தேவி போல் வீரப்பனை சென்னை கோட்டையருகே சுட்டிருப்பார்கள். ஆனால், அதற்குமுன்பு வீரப்பனின் infrastructure, பணப்பட்டுவாடாத்தடங்கள், போன்றவை தெரிய வந்திருக்கும்.

6. 'ஆவி அமுதா' வீரப்பனோடு பேசுவாரா?

7. சத்தியமங்கலத்தில் இருந்து வேறு எதுவும் 'நிஜ' வீரப்பனோ, 'புதுசு கண்ணா புதுசு' வீரப்பர்களோ வராமல் இருக்க வேண்டும்.

8. முன்னாள் சென்னை கமிஷனர் விஜயகுமார்(தானே) இப்பொழுது வீரப்பனைப் பிடித்திருக்கிறார். மீண்டும் சென்னை கமிஷனர் ஆகிவிடுவாரா?

9. 'தமிழர் விடுதலைப் படை' எப்படி இருக்கிறது? தலைமறைவா அல்லது அவர்களும் இறந்திருக்கிறார்களா?

10. ஜெயலட்சுமி போனார்... வீரப்பனார் வந்தார்.

ARUN VIEWS | Forest brigand Veerapan shot dead - Sify.com | Rediff

3 கருத்துகள்:

செய்தி கேட்டவுடன் ரொம்ப வருத்தமடைந்தது உண்மை. இவ்வளவு காலத்துக்குப்பிறகு, உதவிசெய்தாக வந்தவன் காட்டிக்கொடுத்த தகவலைவைத்து, (ஒரு)கண்ணே தெரியாத, உடல் நலமில்லாத, ஆம்புலன்ஸில் வந்த (சன் டிவி) வீரப்பனை சுட்டுக்கொன்றுவிட்டு இதுக்கு பெருமைபேசுவது அசிங்கம்.

சதாமையும் யாரோ காட்டிக்கொடுத்து, மயக்கமருந்து புகை செலுத்தி கைது செய்து போன்றதொரு கேவலாமான விசயம்தான் இதுவும்.

வீரப்பன் மரணத்துடன் வலைப்பூக்களின் அமானுஸ்ய சக்தி வெளிப்படுகிறது.சுட சுட செய்தி என்பது இதைத்தானோ?

பி.கு
சிந்தனை இல 6 நன்று:)

Balaji

Thru your blog only I came to know first about this important event. Seithigalai Munthitharum E-Tamil. Nanri. Pictures you posted along with the story is alo very appropriate.

S.Thirumalai

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு