அக்கடா அன்பே சிவம்
'உழகின்ற காலத்தில் ஊர் மேல் போயிட்டால், அறுவடை சமயம் என்ன கிடைக்கும்' என்பது போல, பல நாட்களாக மேலோட்டமாக வேலை பார்த்ததில், தேங்கிப் போன சில வேலைகளும், சவாலான புதிய சில வேலைகளும் இந்த வாரம் தலையைதூக்கி ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. நேரமும், நிர்வாகம் போல தன்னிச்சையாக என்னுடைய முடிவுகளை எடுத்துக்கொடுத்தது. ஐப்பசி மாசத்து பௌர்ணமியன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் பார்க்கலாம். இந்த வருடம் சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியவில்லை. கடந்த அமெரிக்க வருடங்கள் போல் வெள்ளீஸ்வரர் ஆலய அன்னாபிஷேகமும் வழக்கம் போல் செல்ல முடியவில்லை.
இப்பொழுது அன்னாபிஷேகம் பார்க்க சென்றால் வேறு சிந்தனைகள் எழலாம். 'இவ்வளவு சாதமும் வேஸ்ட்தானே!? இவற்றை இல்லாதாருக்குக் கொடுத்தாலாவது பயன் கிடைக்குமே' என்று சிந்திக்க வைக்கலாம். கடவுளிடம் முழு ஒப்படைப்புடன் கூடிய சரணாகதி தேவை என்று சொல்லப்பட்டதால் யோசனையே எழுந்ததில்லை. அமெரிக்காவில் புரட்டாசி மாசத்து நிறைமணியும் கிடையாது; ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகமும் கிடையாது. எனக்குத் தெரியாது எங்காவது இங்கே அன்னாபிஷேகம் நடத்தினாலும் கவலையில்லை. பூஜை முடிந்தவுடன், டின்னர் போஜனத்துக்கு இறைவனுக்கு சாத்திய சோற்றைக் களைந்து, வருகை புரிந்த பக்த கோடி... மன்னிக்க... இருபது பேருக்கு சாப்பிட வைத்துவிட்டு, dogpack-இல் அடுத்த நாளுக்கும் கட்டுசாதமூட்டை கொடுத்துவிடுவார்கள்.
நய்பால் இந்தியாவை குறித்து எழுதிய An Area of Darkness புத்தகத்தில் அன்னக்காப்பு எல்லாம் குறிப்பிடவில்லை. அந்தப் புத்தகத்தை குறித்த என்னுடைய பதிவை தமிழோவியத்தில் படிக்கலாம்.
ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறேன். வேலை ஒழுங்காக (கவனிக்க: அதிகமாக அல்ல ;-) செய்யும் நாட்களில் என்ன செய்யலாம்? கையில் தோப்பியுடன் ரெட் சாக்ஸ் ஆட்டங்களைப் பார்க்கலாம். ஒருவேளை விளையாட்டுப் போட்டிகள் எதுவும் இல்லாவிட்டால், அல்லது இந்தியா போன்ற என்னுடைய ஆதர்ச அணி தோல்விமுகத்தில் இறங்கினால் Grand Theft Auto போன்ற வீடியோ ஆட்டங்களைக் கையில் எடுக்கலாம். தாறுமாறாக கண்ணில் கண்டவர்களை சுடுவது, காரைத் திருடுவது, போலிஸிடம் இருந்து தப்பிப்பது, பாதி ரோட்டில் வண்டியை அனாதரவாக விட்டுவிட்டு அடுத்த காருக்குத் தாவுவது என்று உள்ளிருக்கும் கிடக்கைகள் தீரலாம். ரெட் சாக்ஸ் ஜெயித்ததற்காக நடக்கும் ரகளைகள் போல் நேரடி அனுபவமாக இல்லாவிட்டாலும், வேறு எவருடைய உயிருக்கும், பொருளுக்கும் சேதம் விளையாது.
சனியன்று பாஸ்டன் பக்கம் வரவேண்டாம். நாளைக்கு நடக்க இருக்கும் பேரணியில் நிச்சயாம் கொஞ்சமாவது ஆங்காங்கே வீடியோ ஆடியவர்கள் நேரில் விளையாடுவார்கள்.
கருத்துரையிடுக