யாருக்கு ஓட்டுப் போடலாம்?
அமெரிக்கத் தேர்தலில் நம்மில் பலருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்காது. எனக்கும் கிடையாது. இருந்தாலும் மழைச்சாரல் சொல்லுகிறதே என்று சென்று பார்த்தபோது அருமையான கருத்துக்கணிப்பைப் பார்க்க நேர்ந்தது. தெரிந்த முடிவைத்தான் (புஷ் - 14% / நான் கெர்ரியின் வாக்குறுதிகளோடு 86% சதவீதம் ஒத்துப்போவதாக) சொன்னது.
வழக்கம் போல், நம்மவர்கள் (தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்) தங்கள் நிலைப்பாட்டை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் எண்ணமே வந்து போனது.
நீங்களும் உங்கள் மனதுக்கினிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை அறிந்து கொள்ள: கொள்கைப் பிடிப்பு கருத்துக் கணிப்பு
கருத்துரையிடுக