வியாழன், அக்டோபர் 14, 2004

மூன்று தகண்கள் - சொ. மணியன்

சச்சினும் கங்குலியும், சேவாகும் லஷ்மணனும்
கச்சிதமாய் ஆடுகின்ற காய்ஃபும் விழுந்துவிட்டார்
மிச்சமுள்ள எல்லோரும் மீளாத் துயில்கொண்டார்
இச்சகத்தில் நாம்ஜெயிப்ப(து) என்று ?



பகட்டு, அலட்டலுக்குப் பேர்போன பையா,
சிகரெட்டின் தீப்பிழம்பில் சிக்கிச் சிதைந்து,
சகமனிதர் எல்லோரின் சங்கடத்தைச் சேர்த்தாய்,
மிகமோசம் உன்வாழ்வு போ !


மதுவென்ற மாயை மயக்கத்தில் வீழ்ந்து
இதுவல்ல வாழ்க்கை எனப்புரியா காலம்,
அதுகடந்து இன்று அழுதென்ன லாபம் ?
புதுசாய்ப் பிறப்பெடுப்போம் வா.



  • தளை தட்டினால் யாராச்சும் சொல்லுங்க
  • எவராவது எசப்பாட்டுப் போடப் போறீங்களா?

3 கருத்துகள்:

முதல் ஐட்டம்தான் தூள்!

இன்னாபா வாத்தியாரு விகடனில வெண்பா பத்தி சொன்னவுடனே ஆளாளுக்கு பொங்கி எழுந்துட்டீங்க. கலக்கு நைனா! (கமா ',' இன்னாத்துக்குமா?)

-டைனோ

சொ.மணியன் நான் அல்ல ;-)
-வெண்பா அறியா பாலகன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு