புதன், நவம்பர் 03, 2004

கிளிப்பிள்ளையா? எளிமையானவரா?

காலையில் சுறுசுறுப்பாய் ஐந்து மணிக்கு எழுந்து செய்தி கேட்டவுடனேயே சப்பென்று ஆகிப்போனது. என்.பி.ஆர்., ஏபிசி எங்கு திருப்பினாலும் தொய்வான பேச்சுக்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு ஸ்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். படையெடுப்பது அவ்வளவு முக்கியமாக பட்டிருக்கிறது. ஒஸாமாவின் வீடியோ சரியான நேரத்தில் வந்திருக்கிறது. ஃப்ளோரிடாவை சாதாரணமாக ஜெயித்திருக்கிறார். நெவாடா போன்ற இடங்களும் செல்லுபடியாகவில்லை.

ஜான் எட்வர்ட்ஸின் சொந்த ஊர் வட கரோலினாவும் கெர்ரிக்குக் கிடைக்கவில்லை. இந்த மாகாணம் பதினைந்து எலெக்டோரல் வாக்குகளைக் கொண்டது. ப்ளோரிடாவின் பாப் க்ரஹாமை துணைக்கு சேர்த்துக் கொண்டாலாவது இருபத்தியேழு ஃப்ளோரிடா எலெக்டோரல் வாக்குகள் கிடைத்திருக்கலாம்.

இல்லினாய் செனேட்டர் தேர்தலில் ஒபாமா வென்றிருக்கிறார். நூறு பேர் கொண்ட செனேட்டில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே ஆப்பிரிக்க-அமெரிக்கர். செனேட் வரலாற்றிலேயே மூன்றாவது கறுப்பர்! இந்தியாவில் சம உரிமை போன்ற விஷயங்கள் தேவலாம் என்று நினைக்க வைக்கிறது.

எது எப்படியோ அடுத்த முறை ஹில்லாரி க்ளிண்டன் நின்றாலும் தோற்றே போவார் என்பதை இந்தத் தேர்தல் சொல்லுகிறது. அடக்கி வாசிக்கத் தெரிந்த ஜான் எட்வர்ட்ஸ் போன்றோர் நின்றால்தான் சுதந்திர கட்சி, வெள்ளை மாளிகையை கைப்பற்ற முடியும். இல்லையென்றால் மீண்டும் குடியரசு கட்சியே அமரும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த முறை மெக்கெயின் அல்லது ரூடி கியுலியானி என யார் வந்தாலும் கொஞ்சம் சிறப்பாகவே செய்வார்கள். அது வரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

2 கருத்துகள்:

யாரு பாலாசி தம்பிங்களா? சரிதானுங்க..நீங்க ஆருபக்கமுங்க? நீதி நாயம் அப்டி இப்டின்னெல்லாம் ஜொள்ளிகிட்டு திரியாதீங்க.. புடிச்சு உள்ளாற போட்றுவானுங்க! ராமன் கெலிச்சா என்ன ராவணன் கெலிச்சா என்ன? இன்னிக்கு வேலைக்கு போனாதாங்க நாளைக்கு சாப்பாடு! என்ன புரிஞ்சுதா? அந்த ஆம்லேட் மண்டையன் பிரகாசுகிட்டயும் ஜொள்ளி வையுங்க.. பினாத்திகிட்டு திரியுவான்!

அமெரிக்காவ மட்டுமே சுத்தி சுத்தி வராம மீதி ஒலகத்துக்கும் வறீங்களா பாலாசி தம்பி?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு