செவ்வாய், நவம்பர் 30, 2004

சுவடுகள் - விகடன்.காம்

ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்தஎனக்கு
என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!
~ தாயுமானவர்

இது மட்டும் (நன்றி : தினமணி)ஜூனியர் வி.: திரையுலகத்தினர் நடத்திய விழா மேடையில், 'வீரப்பன் பற்றி எனக்கு நன்கு தெரியும்' என்றும் சொல்லியிருக்கிறார். வீரப்பன் ஒரு பயங்கரமான குற்றவாளி, நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்தவன். சந்தன மரம், யானைத் தந்தங்களைக் கடத்தியவன். அந்தக் குற்றவாளி பற்றி தனக்குத் தெரிந்தும் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்ததுகூட மிகப் பெரிய குற்றம்தான். அப்படி தெரிந்துவைத்திருந்தால், அவனைப் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை மறைத்ததற்காக அந்த நடிகரை தண்டிக்கலாம். முன்பு என் தலைவர் கலைஞர், அந்த நடிகரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்'' என்றார் சரத்.


நெடுங்குருதி' குறித்து எஸ். ராமகிருஷ்ணன்:

‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது போலும். அது தன்னோடு வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பாக ஏதோ காரணம் காட்டி வெளியேற்றி விடுகிறது. அவர்களும் எங்கோ தொலைவில் ஊரை மறந்து வாழத் துவங்கியதும் சட்டென அவர்கள் மீது விருப்பம் கொண்டது போல ஊர் திரும்பவும் தன் நாவால் அவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உணவில், பேச்சில், செய்கைகளில், நினைவுகளில் தன் ஊரைக் கொண்டிருக்கிறான்.

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் என்னோடு ஒட்டியிருக்கிறது எனது கிராமம். என் பால்யத்தைப் போலவே ஊரின் பால்யமும் வேதனையும், ரகசியமான சந்தோஷங்களும் நிரம்பியது. 'ஆரோக்ய நிகேதனம்', 'நீலகண்டப் பறவையைத் தேடி' போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.''


ஏன்? எதற்கு? எப்படி?
 • 'மனக்கவலையினால் தலையில் நரை விழும்' என்கிறார்களே... கவலைக்கும் தலைமுடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறார்கள்?

  ஆரோக்கியம், வம்சம், சூழ்நிலை மூன்றும்தான் நரைப்பதற்குக் காரணம். முடியின் கால்களில் மெலனின் என்னும் சமாசாரம் சப்ளை தீர்ந்துவிடுவதால் நரை வரு கிறது. தலைமுடி சாதாரணமாக இரண்டிலிருந்து நான்கு வருஷம் வளர்கிறது. அதன்பின் இரண்டு, மூன்று மாசம் சும்மாயிருந்துவிட்டு உதிர்கிறது. புது கேசம் வளர்கிறது. இப்படித் தினம் ஐம்பதிலிருந்து நூறு முடிகளை நாம் இழக்கிறோம். பொதுவாக நரைமுடியைக் கறுப்பு மறைத்திருக்கும். ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழும்போது, சிலருக்கு 'டெலோஜென் எஃப்லுவியம்' (Telogen Effluvium) என்னும் விளைவினால் சட்டென்று ஒரு நாளைக்கு முந்நூறு முடி கொட்டிவிட, மறைந்திருந்த நரைமுடிகள் எல்லாம் பொசுக்கென்று தெரிய ஆரம்பித்துவிடும்.

 • நான் அரேபிய நாடுகளில் பல வருடங்களாக வேலை செய்திருக்கிறேன். அங்கு குதிரைகளைப் பார்த்ததில்லை. ஆனால், வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கும்போது ‘அரேபிய குதிரை மாதிரி' என்கிறார்களே... அப்படி என்ன அங்கலட்சணம்?
  வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கின்ற ஒரு ஒப்பீடு இது. காவடிச் சிந்து பாட்டில் 'மகரத்துவஜன் கோயில் கம்பம்' என்கிறதும் இதேதான். இம்மாதிரி ஓவர்சைஸ் பெண்களை 'அமேஸான்கள்' என்றும் சொல்கிறார்கள்.


  பதில் தெரியுமா
 • அது இரண்டு கார்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பந்தயம். ஒன்று ரஷ்ய கார். இன்னொன்று அமெரிக்க கார். பந்தயத்தில் அமெரிக்க கார் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிட்ட ரஷ்யப் பத்திரிகைகள் நாட்டுப்பற்றின் காரணமாக ரஷ்ய கார் தோற்றுப் போனதையும் அமெரிக்க கார் முதலில் வந்ததையும் குறிப்பிடவில்லை. அதே சமயம் அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியில் பொய்யான தகவலும் இடம் பெறவில்லை. எப்படி?

 • இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான 'லெட்டர்ஸ்' உண்டு..! அது எது?

 • ஒரு மனிதன் திடமான தரைப்பரப்பில் நின்று கொண்டு ஆறடி உயரத்தில் இருந்து ஒரு தக்காளியைக் கீழே போட்டான். ஆனால், அது உடையவோ, நசுங்கவோ இல்லை. அது சாதாரண தக்காளிதான். அந்த மனிதன் அதை வேகமாக ஆறடி உயரம் கீழே போடத்தான் செய்தான். பிறகெப்படி அது உடையவில்லை?


  விநாடி வினாவிலாவது கேட்பார்களா?
 • லோக் சபையின் இருக்கைகளும் தரை விரிப்புகளும் பச்சை நிறத்தில் இருக்கும்.

 • ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அதே கிழமையில் முடிந்த ஆண்டு 1978. நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதாவது 2379-ம் ஆண்டுதான் மீண்டும் இப்படி வரும்!

 • 14-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மூன்றாம் எட்வர்ட் ஆட்சியில் ஒருவர் ஒரு நாளில் இரு வேளைக்கு மேல் உணவு உண்டால் அதைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இருந்தது.


  யோசிங்க
  1. 'வினையே ஆடவர்க்கு உயிரே' - இது குறுந்தொகை. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பது எது?

  2. 'பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா' என்று பாடியவர் பாரதியார். 'புதியதோர் உலகு செய்வோம்' என்று பாடியவர் யார்?

  3. 'தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடியவர் யார். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' - பாடியவர்?

  4. 'கல்வி கரையில: கற்பவர் நாள் சில' என்றுரைக்கும் நூல் எது. 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா' என்றுரைக்கும் நூல் எது?

  5. 'அன்பே சிவம்' என்று சொன்னவர் திருமூலர். 'ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்' என்று பாடியவர் யார்?

  6. 'உள்ளம் பெருங்கோயில்: ஊனுடம்பு ஆலயம்' என்று பாடியவர் யார்?

  7. 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. நாமக்கல் கவிஞரின் பாடல். 'செய்யும் தொழிலே தெய்வம் & அதில் திறமைதான் நமது செல்வம்' என்று பாடியவர்?

  8. 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' & பாடியவர் பாரதியார். 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' -- பாடியவர் யார்?

  9. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று பாடியவர் திருநாவுக்கரசர். 'மனித சாதியில் துன்பம் யாவுமே மனதினால் வரும் நோயடா' என்றவர் யார்?


 • கலைஞரின் பழைய ஆலிவர்ரோடு இல்லத்தில் குடியேறிவிட்டார் ராஜுசுந்தரம்!
 • விஜயகாந்தின் மகன் பிரபாகரன் பள்ளி நாடகத்தில் மேடையேறியிருக்கிறார் -- ராமர் வேஷம்!
 • 'குற்றப்பரம்பரை' படம் ஆரம்பமாகிறது. பாரதிராஜா ஹீரோவாகிறார்!


  நாணயத்தின் மறுபக்கம்!
  ''நீதி, நேர்மை, நாணயம்னா என்னப்பா?'' ''நேத்து நான் வேலை செய்யும் கடைக்கு ஒருவர் வந்து நூறு ரூபாய் கொடுத்து இருபது ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, மறதியாக மீதித் தொகையை வாங்காமலே போய்விட்டார். அந்த எண்பது ரூபாயை மறுநாள் அவர் கடைக்கு வந்தபோது நான் திருப்பித் தந்திருந்தால், அதுதான் நீதி! அப்படி இல்லாமல், அந்தத் தொகையைக் கடைக்கணக்கில் சேர்த்து, என் முதலாளிக்கு லாபம் சேர்த்திருந்தால் அதுதான் நேர்மை!''

  ''அப்போ... நாணயம்னா?''

  ''அந்தத் தொகையை அவருக்கும் திருப்பித் தராமல், கடைக் கணக்கிலும் சேர்க்காமல், பக்கத்தில் நின்று என்னோடு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியருடன் சமமாகப் பகிர்ந்துகொண்டேன். அதற்குப் பெயர்தான் நாணயம்!''


  தேசியக் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவருக்கு 'அமைதிப்படை சத்யராஜ்' என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள். ''மூத்த தலைவர்களை நேரில் பார்க்கும்போது அப்படியரு பணிவு பவ்யம் காட்டுவார். அவங்க நகர்ந்ததும் அப்படியே கிண்டல் பண்ணுவார். பயங்கரமான ஆளுங்க'' என்கிறார்கள்.


  அப்பா என்றால்.. : அப்பா என்ற வார்த்தைக்கான அர்த்தம்: தான் எந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க நினைத்தானோ அந்த அளவுக்குத் தனது பிள்ளைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

 • 6 கருத்துகள்:

  "ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அதே கிழமையில் முடிந்த ஆண்டு 1978. நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதாவது 2379-ம் ஆண்டுதான் மீண்டும் இப்படி வரும்!"

  என்ன ஒரு உளறல்! பிடியும் ஐயா. 1905, 1911, 1922, 1933, 1939, 1950, 1961, 1967, 1989, 1995, 2006 ஆகிய ஆண்டுகளும் 1978-ஐப் போலவேதான்.

  இதைப் போல எண்ணற்ற உதாரணங்கள் கொடுக்க முடியும்.

  அன்புடன்,
  ராகவன்

  அட... இத்தனை வருடங்கள் இருப்பது தெரியாமல், 'எடுத்து' இட்டு விட்டேன்! அப்படியே 'சுட்டி' விகடனுக்கும் ஒரு கார்பன் காப்பி அனுப்பிடுங்க சார். நன்றி.

  இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான 'லெட்டர்ஸ்' உண்டு..! அது எது?

  Post Box.

  இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான 'லெட்டர்ஸ்' உண்டு..! அது எது?

  Post Box.

  இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான 'லெட்டர்ஸ்' உண்டு..! அது எது?

  Post Box.

  மிகவும் அருமை

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு